Published:Updated:

மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!

மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!

முனைவர். க.பாலசந்தர்

ன்டர்நெட் இணைப்புப் பெற்ற கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் வாயிலாக வாடிக்கையாளர் தனது பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து மற்றவர்களின் அக்கவுன்ட்டுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்வது அதிகரித்து வருகிறது. இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் செலுத்தவேண்டிய பிரீமியம், மின் கட்டணம், வீட்டு வரி, தண்ணீர் வரி, பயணச்சீட்டு முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு, மொபைல் ரீசார்ஜ், டி.டி.ஹெச் ரீசார்ஜ் போன்ற அனைத்துச் சேவைகளையும் மிக எளிதாக ஆன்லைனில் பணப் பரிமாற்றத்துடன் செய்ய முடிகிறது. 

மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!

நமக்குத் தேவைப்படும் மளிகைச் சாமான்கள், மொபைல் போன், வாட்ச், உடை, செருப்பு, புத்தகம் போன்ற பொருள்களை இ-காமர்ஸ் கம்பெனிகளிடமிருந்து வருடத்தின் 365 நாள்களில் எப்போது வேண்டுமானாலும் நினைத்த உடனேயே ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்க முடிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அக்டோபர் 2016-ல்  டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் மதிப்பு ரூ.108.7 லட்சம் கோடி. இது 88% உயர்ந்து ஆகஸ்ட் 2018-ல் ரூ.204.86 லட்சம் கோடியாக இருந்தது. இந்தப் பணப் பரிமாற்றத்தின் மதிப்பு வரும் காலங்களில் தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கலாம்.  

இணையதள / சைபர் அபாயங்கள்


சமீப காலமாக சைபர் அபாயங்கள், டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி வருகிறது. CERT-In என்கிற அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் 2014-ம் வருடத்தில் 44679 சைபர் தாக்குதல்கள், 2015-ம் வருடத்தில் 49455 சைபர் தாக்குதல்கள், 2016-ம் வருடத்தில் 50362 சைபர் தாக்குதல்கள்,    2017-ம் வருடத்தில் 53081 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இதன் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவரும் இந்த வேளையில் டிஜிட்டல் சாதனங்கள் – கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லேட், ஸ்மார்ட்போன் போன்றவைகளை இயக்கும் பயனாளிகள் சமூக வலைப்பதிவு, பேங்க் மூலம் செய்யும் ஆன்லைன் பணப் பரிமாற்றம், ஆன்லைனில் இ-காமர்ஸ் கம்பெனிகளின் பொருள்களை வாங்குதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தங்களது தனிப்பட்ட விவரங்களைக் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

மேலும், சில இணையதளங்களுக்குள் சென்று சேவையைப் பெறுவதற்கு நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல், யூசர் நேம் (User name), பாஸ்வேர்டு (Password) போன்ற முக்கியத் தகவல்களைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. உள்ளூரிலோ, வெளிநாட்டிலோ இருந்துகொண்டு கண்ணுக்குத் தெரியாத நபர் நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களிலிருந்து நமது தனிப்பட்ட தகவல்களைத் திருடி சைபர் தாக்குதல் நடத்துகிறார்.

சைபர் தாக்குதல் நடத்தும் விதம் 

தீங்கு இளைக்க விரும்பு கிறவர்கள் தீமை நிறைந்த வைரஸ் அடங்கிய சாஃப்ட்வேர் களை உருவாக்கி அதனை தனது கம்ப்யூட்டரிலிருந்து மற்றவர்களின் கம்ப்யூட்டருக்குச் செலுத்தி விடுவார்கள். இதன்மூலம்தான் விரும்பும் நபர்களின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை செயல் இழக்கச் செய்ய முடியும் அல்லது தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இயக்க  முடியும். இதற்கு மால்வேர் (Malware) என்று பெயர். 

மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!

மேலும், சைபர் குற்றவாளிகள் குறிப்பாக, மற்றவர்களின் அக்கவுன்ட்டிலிருந்து பணத்தைத் தனது  அக்கவுன்ட்டிற்கு மாற்றி விடுகிறார்கள். இவ்வாறு நடைபெறுகிற முறையற்ற பணப்பரிமாற்றம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து கொண்டு வருகிறது.

பிரசித்தி பெற்ற ஒரு கம்பெனி / நபர் இ-மெயில் அனுப்புவதைப்போல, சைபர் குற்றவாளிகள் இ-மெயிலை மற்றவர்களுக்கு அனுப்பி அவர்களிடமிருந்து  கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு பாஸ்வேர்டு, மற்றும் பயனாளியின் தனிப்பட்ட முக்கியமான தகவல்களைப் பெற்றுவிடுகிறார்கள், இதனைத் தகவல் தொழில்நுட்பத் துறையினர் பிஷிங் (Phising) என்கிறார்கள்.

அனுமதி பெறாமல் மற்றவர்களின் டிஜிட்டல் சாதனங்களில் இருக்கிற தனிப்பட்ட தகவல்களை எடுத்து அதனை முழுவதுமாக அழித்தல், மாற்றம் செய்தல் மூலம் மற்றவர்களைத் துன்புறுத்தி மகிழ்ச்சியடையலாம். மேலும், அக்கவுன்ட் டிலிருந்து பணத்தை அபகரிக்கலாம், இதனை ‘ஐடென்டிட்டி தெப்ட் (Identity theft)’ என்கிறார்கள்.

அந்தஸ்து, மரியாதை, நற்பெயருக்குக் களங்கத்தை விளைவிக்கிற தகவல்களை உள்ளடக்கி இ-மெயில்களை மிரட்டல் தொனியுடன் தொடர்ந்து ஒருவருக்கு அனுப்பி அவரை மனரீதியாகத் துன்புறுத்துவதை ‘சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking)’ என்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை அழித்தோ, மாற்றியமைத்தோ அவரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கிற செயல் நடைபெற்றால், பாதிக்கபட்டவர் நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடுத்தலை ‘மீடியா லையபிலிட்டி (Media Liability)’ எனச் சொல்கிறார்கள்.

ஆன்லைன் மூலம் மற்றவரைத் தவறாகச் சித்தரித்து அதிகமானவர்களுக்குத் தொடர்ந்து தகவலைப் பரப்புவதற்கு ‘சைபர் புல்லியிங் (Cyber bullying)’ என்று பெயர்.

முதல் வரியில் மாற்றம் செய்யப்பட்ட, போலியான தகவல் சேர்க்கப்பட்ட இ-மெயில், தனது அடையாளத்தை மறைத்து உண்மையான நபரிடமிருந்து இ-மெயில் வருவதைப் போன்ற பிம்பத்தைக் காண்பிக்கும், இதுவே ‘இ-மெயில் ஸ்புபிங் (Email spoffing)’ ஆகும். 

மனநிம்மதியை உறுதிசெய்யும் சைபர் இன்ஷூரன்ஸ்!

ஏதாவது ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன்னிடம் உள்ள நம்மைப் பற்றிய முக்கியமானத் தனிப்பட்ட தகவல் பதிவுகளை மற்றவர்களிடம் கொடுக்கிறார்கள். மேலும், நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நம்முடைய அனுமதியின்றி பயன்படுத்துதலே ‘டேட்டா ப்ரிச் (Data Breach)’ ஆகும்.

சைபர் இன்ஷூரன்ஸில் சேர்வதற்கு உரிய நிபந்தனைகள்


தனிநபரின் வயது 18-க்குமேல் இருந்தால் பாலிசியில் சேரலாம். ஒருவர் தனக்கும், தன் குடும்பம் அனைத்திற்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வேண்டுமென்றால் கணவன், மனைவி, இரண்டு  குழந்தைகள் சேர்ந்துகொள்ளலாம். அதிகபட்சம் ரூ.1 கோடி வரை இன்ஷூர் செய்துகொள்ளலாம்.

பாலிசிதாரருக்கு கிடைக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ்

சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கிய பாலிசிதாரர் மால்வேர், பிஷ்ஷிங், ஐடென்டிட்டி தெப்ட், சைபர் ஸ்டாகிங், மீடியா லையபிலிட்டி, இ-மெயில் ஸ்புபிங், டேட்டா ப்ரிச், சைபர் புல்லியிங் போன்ற ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படும் அதிரடித் தாக்குதல்களால் மன நிம்மதி, பணத்தை இழந்து பாதிக்கப்பட்டால் இன்ஷூரன்ஸ் க்ளைம் கிடைக்கும்.

கம்ப்யூட்டர் கன்சல்டன்ட் மூலம் கவுன்சலிங் பெறுவதற்கு ஆகும் செலவு, பொருளாதார ரீதியாக, மனரீதியாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் சமயத்தில் ஏற்படும் செலவுகளை சரிசெய்யும் பொருட்டும் க்ளைய்ம் பெறலாம்.

சைபர் தாக்குதலால் பாதிப்பு அடைந்த பாலிசி தாரருக்கு அளவுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை பெறும்போதும் க்ளெய்ம் பெறலாம்.

நெட்பேங்கிங் யூசர் நேம், பாஸ்வேர்டு போன்றவைகளைப் பாதுகாப்பாக வைத்துப் பயன்படுத்தினாலும் ஆழ்ந்த அறிவு பெற்ற கிரிமினல் குணமுடைய குற்றவாளிகள், மற்றவர்களின் அக்கவுன்ட்டிலிருந்து பணத்தை எடுப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சமூக வலைதளம் இ-மெயில் போன்ற ஆன்லைன் சேவைகளைப் பாதுகாப்பாக பயன்படுத்தும்போது தனிநபரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலில் சிலர் ஈடுபட்டு அதிரடி சைபர் தாக்குதலில் இறங்குகின்றனர். இதனால் பாதிப்பு அடைந்தவர் படும் அவஸ்தையை வார்த்தையில் சொல்ல முடியாது. இந்த மாதிரியான பாதிப்புகளால் நொந்து போனவர்களை சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி, க்ளெய்ம் கொடுத்து காப்பாற்றுகிறது.

எனவே, சைபர் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இந்த சைபர் இன்ஷூரன்ஸை தேவையுள்ளவர்கள் எடுக்கலாமே!