Published:Updated:

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

து தொழில் யுகம். கடந்த சில வருடங்களாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகிற காரணத்தினால், சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் பலரிடம் உருவாகி வருகிறது. 

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

தொழில் தொடங்குகிறவர்கள் எல்லோருமே எடுத்த எடுப்பிலேயே பெரிய அளவில்  தொழிலைச் செய்துவிடுவதில்லை. முதலில் சிறிய அளவில் தொடங்கி, பிறகு அதனைப் பெரிய அளவில் கொண்டு செல்கின்றனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!சிறிய நிறுவனத்தைப் பெரிய நிறுவனமாக மாற்றுவது எப்படி என்கிற கேள்விக்கு,  உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும், இன்னும்  சிலர் மார்க்கெட்டிங் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதன்மூலம் அடுத்த நிலைக்குச் செல்லலாம் என்றும் சொல்கிறார்கள்.

சிறிய அளவில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், எப்படி அடுத்தகட்டத்துக்குச் செல்லமுடியும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்வதற்காகவே கோவையில் கடந்த 17-ம் தேதி  ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது நாணயம் விகடன். ஜோஹோ (ZOHO) நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், நான்ஸ்டாப் (NON STOP) நிறுவனமும் முக்கிய அங்கம் வகித்தது.

இந்தக் கூட்டத்தினைத் தொடங்கி வைத்துப் பேசினார் கொடீசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி. ‘‘கொடீசியாவின் பொன்விழா ஆண்டு இது. முன்பெல்லாம் தொழில் கண்காட்சி யில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், மும்பைக்கும், டெல்லிக்கும்தான் போக வேண்டும். ஆனால், இன்று அந்த நகரங்களுடன் போட்டி போடுகிற அளவுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் கோவையிலேயே கண்காட்சி நடத்தி வருகிறோம். 

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

நம் நாட்டுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறோம்.தொழில் உலகம் காணாத புதுமை இது. இதன்மூலம் இன்னும் பல ஆயிரம் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்குகிறவர்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் உதவ முடியுமோ, அந்த அளவுக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்’’ என்றார் ராமமூர்த்தி.

அவர் பேசிமுடித்தபிறகு, மூன்று முக்கியமான பேச்சாளர்கள்  இந்தக் கூட்டத்தில் பேசினார்கள். முதலில் எல் அண்டு டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் அண்டு இன்னோவேஷன் சென்டரின் ஹெட்டும், பிரின்சிபல் டெக்னாலஜி லீடருமான ஜி.பி.பொன்மணிவண்ணன், ‘Technology Disruption - Way Forward’ என்கிற தலைப்பில் பேசினார். இனி அவர் பேசியதாவது...

‘‘இன்றைய நிலையில், எஸ்.எம்.இ-களுக்குத் தங்கள் தொழில் பற்றி 360 டிகிரி பார்வை வேண்டும். வெறும் உற்பத்தி, மார்க்கெட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அனைத்துத் துறை பற்றிய அறிவும், தெளிவும் வேண்டும். காரணம், இது ‘ஊக்கா’ உலகம் (VUCA - Volatile, Uncertainty, Complex, Ambiguity). எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனக் கணிக்க முடியாத இந்த உலகத்தில் போட்டியாளர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். முன்பெல்லாம் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி என்று நினைத்தோம். பிறகு நம் நாட்டில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் போட்டி என்று நினைத்தோம். இன்று உள்ளூர் நிறுவனங்களே போட்டி நிறுவனங்களாக மாறிவிட்டன. 

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

போட்டியைச் சமாளிக்கத் தேவையான தொழில் நுட்பத்தை முன்பு எங்கிருந்து வாங்குவது என்பதில் பல சிக்கல்கள் இருந்தன. ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. உங்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்பத்தை உலகின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, தினமும் பல மாற்றங்களைக் கண்டுவருகிறது. முன்பு ஒரு தொழில்நுட்பத்தை வாங்கினால், அது பத்து, இருபது ஆண்டுகளுக்கு  நடைமுறையில் இருக்கும். ஆனால், இன்றைக்கோ சில தொழில்நுட்பங்கள்  ஓராண்டுக்குள்கூட மாறிவிடுகிறது.என்றாலும், தொழில்நுட்பத்தைத் தவிர்த்து அடுத்தகட்ட முன்னேற்றம் என்பது இன்றைக்குச் சாத்தியமே இல்லை.

நமது எஸ்.எம்.இ-கள் புதுப்புது தொழில்நுட்பங்களை நடைமுறையில் கொண்டுவராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. தொழில் செய்வதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு போதிய அளவுக்கு இல்லை; தொழில்நுட்பங்களை வாங்கத் தேவையான பணமும் பல எஸ்.எம்.இ-களிடம் இல்லை; தங்கள் தொழிலில் புத்தாக்கங் களைக் கொண்டுவர வேண்டும் என்கிற சிந்தனையும் பல எஸ்.எம்.இ-களிடம் இல்லை எனப் பல காரணங்களைச் சொல்ல முடியும்.   என்ன காரணம் இருந்தாலும், அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தின் உதவி தவிர்க்க முடியாததாக இருக்கும்’’ என்றவர், ஒன்பது முக்கியமான தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துச் சொன்னார்.

1. மொபைல் இன்டர்நெட், 2. இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், 3. நாலேஜ் வொர்க்  ஆட்டோமேஷன், 4. க்ளவுட் டெக்னாலஜி, 5. அட்வான்ஸ்ட் ரொபாட்டிக்ஸ், 6. அட்டானமஸ் வெஹிக்கிள், 7.   நெக்ஸ்ட்ஜென் ஜெனோமிக்ஸ், 8. எனர்ஜி ஸ்டோரேஜ்,  9. அட்வான்ஸ் ஆயில்/கேஸ் எக்ஸ்ஃப்ளோரேஷன் என ஒன்பது துறைகளிலும் நடக்கும் புதுமையான கண்டுபிடிப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார். அவர் சொன்ன ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஹாலிவுட் படத்தில் வருகிறமாதிரி இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் அவை நம்மூரிலும்  நடைமுறையில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்து, சென்னையின் பிரபல ஆடிட்டரும், டைக்கூன் பிளஸ் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனருமான எம்.சத்திய குமார், இன்று சிறிய அளவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், எதிர் காலத்தில் பெரிய நிறுவனங் களாக வளர என்ன செய்ய வேண்டும் என்கிற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது... 

சிறிய நிறுவனம் To பெரிய நிறுவனம்... வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்!

‘‘எஸ்.எம்.இ-களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். காரணம், மத்திய அரசாக இருந் தாலும் சரி, மாநில அரசாக இருந் தாலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கின்றன. அரசின் நலத் திட்டங்கள் பற்றி இன்னும் பல எஸ்.எம்.இ-களுக்குச் சரியாகப் போய்ச் சேரவில்லை. இதனால்தான் பல எஸ்.எம்.இ-கள் அரசு அளிக்கும் வங்கிக் கடன் உதவித் திட்டங்களையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது’’ என்றவர், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகள் பலவற்றுக்கும் விரிவான பதிலைச் சொன்னார். 

இந்தக் கூட்டத்தில் மூன்றாவதாகப் பேசிய ஜோஹோ  கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இன்ஜினீயரிங் பிரிவின் இயக்குநரான ராஜேந்திரன் தண்டபாணி, நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் வளர்வதற்கு சரியான தொழில்நுட்பங்களைத் தேர்வுசெய்வது எப்படி என்பது குறித்துப் பேசினார். அவர் பேசியதாவது...

‘‘இன்றைக்கு நமக்குப் பல விதமான தொழில்நுட்பங்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு தொழில்நுட்பமும் ஒருவிதத்தில் சிறப்பானதாக இருந்தாலும், சில அசெளகர்யங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு தொழில்நுட்பமும் ஒவ்வொருவிதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, குழப்புவதாக இருக்கின்றன. இவற்றின் விலை பெரிய அளவில் மாறுபடுகின்றன.

இத்தனைக் குளறுபடிகளுக்கும் ஒரு தீர்வாகத்தான் ஜோஹோ நிறுவனத்தின் சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. மனிதவளம், நிதி, மார்க்கெட்டிங் என ஒவ்வொரு துறையிலும் எஸ்.எம்.இ-களுக்குப் பெரிய அளவில் உதவுவதற்காக 47 சாஃப்ட்வேர்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இந்த சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்து வதற்கான கட்டணத்தையும் நியாயமான அளவிலேயே நிர்ணயம் செய்திருக்கிறோம். எனவே, அடுத்தகட்டத்துக்குத் தங்கள் தொழிலை முன்னேற்றிக்கொண்டு செல்ல விரும்புகிற வர்கள் எங்கள் சாஃப்ட்வேர்களைத் தாராளமாகப் பயன்படுத்தத் தொடங்கலாம்’’ என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தின் ஓர் அங்கமாக நான்ஸ்டாப் கூரியர் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் முகமத் சையத் உசேன், தனது நிறுவனம் வழங்கும் தொழில் வாய்ப்பைக் குறித்து எடுத்துச் சொன்னார்.

இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் ஜோஹோ நிறுவனம் அளிக்கும் சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் பற்றி விளக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். எஸ்.எம்.இ-களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்தக் கூட்டத்தினைத்
தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் நடத்த வேண்டும் என இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த சிறு தொழில்முனைவோர்கள் கோரிக்கை வைத்தனர்!

ஏ.ஆர்.குமார் - படங்கள்: ஆயிஷா அஃப்ரா ஷே