Published:Updated:

மெட்ரோ ரயில்நிலையத்தில் பாலூட்டும் அறை! - கேரள அரசின் புது முயற்சி

மெட்ரோ ரயில்நிலையத்தில் பாலூட்டும் அறை! - கேரள அரசின் புது முயற்சி
மெட்ரோ ரயில்நிலையத்தில் பாலூட்டும் அறை! - கேரள அரசின் புது முயற்சி

ந்தியா முழுவதும், ரயில்வே நிலையங்களில் குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதில் புது முயற்சியாகக் கேரள அரசு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப்பட்ட, பாலூட்டும் அறையை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகக் கேரள மாநிலம் ஆலுவா மெட்ரோ ரயில் நிலையத்தில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையைக் கேரள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகமது கனிஷ் கடந்த வாரம் திறந்து வைத்துள்ளார் இது தொடர்பாக ஆலுவா ரயில் நிலையத்தில் அன்றாடம் பயணம் செய்யும் சில பெண்களிடம் கருத்துக் கேட்டோம்.

இக்‌ஷா

``மின் விசிறிகள், நாற்காலிகளுடன் பெண்கள் வசதியாக அமர்ந்து பாலூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாலூட்டும் அறை உண்மையில் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கெனவே அரசின் சார்பாக மெட்ரோ பணிக்கான ஒதுக்கப்பட்ட 700 பணியிடங்கள், சினிமா துறையில் பெண்களின் வளர்ச்சிக்காகப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 3 கோடி ரூபாய் போன்றவை கேரள அரசுக்குப் பெண்களின் வளர்ச்சி மீதுள்ள அக்கறையைக் காட்டுகிறது. பெண்களின் நலனுக்காக யோசிக்கும் கேரள அரசுக்கு நன்றி’’ என்கிறார்.

ரேணுகா தேவி  :

``மெட்ரோவைப் பொறுத்தவரை சில மணி நேரப் பயணம் என்றாலும், கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள், குழந்தைகளுக்குப் பாலூட்ட சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால், தாய்மார்களைக் கருத்தில் கொண்டு அரசு எடுத்த இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. ஆலுவா போன்று மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாலூட்டும் அறைகளின் தொடக்கத்தைப் பெண்கள் எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள்."