Published:Updated:

குரல் கொடுக்கும் நடிகர்கள்! - சின்னத்தம்பிக்காக டிரெண்டாகும் #NoCaptivity4Chinnathambi ஹேஷ்டேக்

குரல் கொடுக்கும் நடிகர்கள்! - சின்னத்தம்பிக்காக டிரெண்டாகும் #NoCaptivity4Chinnathambi ஹேஷ்டேக்
குரல் கொடுக்கும் நடிகர்கள்! - சின்னத்தம்பிக்காக டிரெண்டாகும் #NoCaptivity4Chinnathambi ஹேஷ்டேக்

சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, #NoCaptivity4Chinnathambi ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சின்னத்தம்பி யானை கடந்த மாதம் கோவை பகுதியிலிருந்து, டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட சில நாள்களிலேயே சின்னத்தம்பி யானை தனது வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டான். தொடர்ந்து 100 கி.மீ-க்கு மேல் பயணித்தும், எந்த சேதங்களையும் ஏற்படுத்தாமல், வனவிலங்குகளின் வாழ்விடத்தில் உள்ள பிரச்னைகளை உரக்கப் பேசி வைத்திருக்கிறான் சின்னத்தம்பி.

இதனிடையே, “சின்னத்தம்பி யானையைக் காட்டுக்குள் விரட்டுவதில் சிக்கல் உள்ளது. எனவே, அதை முகாமுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று நீதிமன்றத்தில் வனத்துறை கூறியிருந்தது. இதையடுத்து, ‘எதற்காக சின்னத்தம்பியை முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? அதற்கு மீண்டும் இயற்கை உணவுகளைக் கொடுத்து ஏன் காட்டுக்குள் விடக் கூடாது? சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, #NoCaptivity4Chinnathambi ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிரெண்டாகி வருகிறது. சின்னத்தம்பியைக் கும்கியாக மாற்றக் கூடாது என்று வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா, மதுக்கரை மகராஜா கூண்டில் உயிரிழந்த படத்துடன், #NoCaptivity4Chinnathambi, #SaveChinnathambi, #SaveElephants  என்று ஸ்டேட்டஸ் போட, அதை நடிகர்கள் ஆர்யா, சிபிராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.