Published:Updated:

கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன?

கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன?
பிரீமியம் ஸ்டோரி

“உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பாக வளைகாப்பு நடத்துகிறோம்” என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி! ஆனால், அவரது ஆட்சியில்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்தின்போதான அலட்சிய மரணங்களும் அதிகரித்துவருகின்றன. கோவை மாவட்டத்தில், எந்த அடிப்படை வசதியும் இல்லாத பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுயமாக குழந்தையைப் பிரசவித்த நிலையில், கவனிப்பாரின்றி இறந்துபோயிருக்கிறார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன?

கோவை மாவட்டத்திலுள்ள 20-க்கும் மேற்பட்ட பழங்குடி கிராம மக்கள் மின்சாரம், கழிவறை, கல்வி, மருத்துவம் என்று அடிப்படைத் தேவைகளுக்காக அவதிப்படுகின்றனர். ஆழியாறு அணையிலிருந்து நான்கு கி.மீ தூரத்திலிருக்கும் நெல்லித்துறை மன்னன் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ரேகா, காலைக் கடன் கழிக்கச் சென்ற பின்பு ரத்தக்கோலத்தில் பிணமாகத்தான் மீட்கப்பட்டார். காட்டுப் பகுதியில் எந்தவித வசதிகளும் இல்லாமல் ரேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தை மட்டுமே உயிரோடு பிறந்திருக்கிறது. ரேகாவின் கணவர் சுப்பிரமணியிடம் பேசினோம். “எங்க பகுதியில கழிப்பறை வசதி இல்லை. அன்னைக்கு விடியக்காலை மூணு மணிக்கு காலைக் கடன் கழிக்க காட்டுப் பக்கம் ஒதுங்கினா. ‘துணைக்கு நானும் வரட்டுமா’னு கேட்டேன். ‘வேணாம்’னுட்டா. ஒரு மணி நேரம் ஆகியும் ரேகா வீடு திரும்பலை. டார்ச் லைட் எடுத்துட்டுத் தேடிப்போனேன். கொஞ்ச தூரத்துல குழந்தை அழும் சத்தம் கேட்டுச்சு. பதறியடிச்சுப்போய் பார்த்தேன். ரேகா பக்கத்துல குழந்தை இருந்துச்சு. தானாகவே குழந்தையை பிரசவிச்சுட்டு ரத்த வெள்ளத்துல உயிரை விட்டிருக்கா ரேகா. ஏற்கெனவே, ரெண்டு பெண் குழந்தைகளை வெச்சிக்கிட்டு சிரமப்படுறேன். இப்ப இந்தப் பச்சைக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்க முடியாம, தவிச்சிட்டு இருக்கோம்” என்றார் கண்ணீருடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன?
கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன?

பழங்குடி மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் ‘ஏக்தா பரிசத்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தனராஜ், “எரவாளர், மலசர் பழங்குடி மக்கள் வசிக்கும் இந்த கிராமத்துக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் கிடையாது. ஒரு வருடத்துக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டப் பொது கழிப்பறை, இன்னமும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. உலக வங்கியின் உதவியுடன் தேசிய கிராமப்புற சுகாதாரப்பணி திட்டத்தின்படி, ஆரம்பச் சுகாதார நிலையச் செவிலியர்கள், அருகில் உள்ள கிராமங்களில் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து, மருத்துவச் சோதனை செய்யவேண்டும். ஆனால், இந்தப் பணி இங்கே சரியாக நடப்பதில்லை. கழிப்பறை வசதியும், மருத்துவச் சேவையும் கிடைத்திருந்தால், இப்படி ஒரு சோகம் நிகழ்ந்திருக்காது. தாயை இழந்து தவிக்கும் இந்தக் குடும்பத்துக்கு அரசு உரிய நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நலத்திட்டங்கள்... பழங்குடி பெண்ணின் மரணத்துக்கு பதில் என்ன?

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் பேசினோம். “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

- இரா.குருபிரசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism