ரெசிப்பிஸ்
Published:Updated:

மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!

மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!
பிரீமியம் ஸ்டோரி
News
மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!

மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!

மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!

வேப்பம்பூ - ஒரு பிடி, சுண்டைக்காய் - ஒரு பிடி, மணத்தக்காளி - ஒரு பிடி... இவை மூன்றையும் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வெடிக்க வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பொடித்த பொடியைச் சிறிதளவு சூடான சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுவலியும் நீங்கும்.

மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!

சலைக்கீரையை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர்விட்டு நன்றாக அலசி அலம்பிவிட்டு பிறகு நறுக்க வேண்டும். நறுக்கிய பிறகு அலம்பினால் கொழகொழவென்றாகிவிடும். நேரடியாகத் தண்ணீர்விட்டு வேகவிட்டால் சத்துகள் போய்விடும். அதனால் ஸ்டீம் செய்யலாம். அதாவது நீராவியில் வைக்கலாம்.

மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!

பசலைக்கீரை ரத்தத்தில் ஹீமாக்குளோபின் அதிகரிக்க உதவி செய்கிறது. பார்வைக் கோளாற்றைத் தடுக்கிறது. வெறும் பசலைக்கீரையை மட்டும் மசித்துத் தந்தால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். இந்த Florentine செய்து சீஸ், சாஸ் முதலிய அலங்காரங்களுடன் பரிமாறுங்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் ஆசையாகச் சாப்பிடுவார்கள்.

மெனுராணி செல்லம் வழங்கும் கிச்சன் கைடு!

காய்கறிகள் நறுக்க இரும்புக் கத்தி உபயோகிக்க வேண்டாம். காய்கறிகள் கறுப்பதுடன் அதில் இருக்கும் துருவும் உடலுக்குக்கேடு விளைவிக்கும். அரிவாள்மனை தேங்காய்த் துருவி எல்லாவற்றுக்கும்
இது பொருந்தும்.