பொதுவாக, தேர்தல்களில் தோல்வியைத் தழுவும் கட்சியின் தலைவர்கள், `ஜனநாயகம் தோற்றுவிட்டது; பணநாயகம் வென்றுவிட்டது' என்று அறிக்கை விடுவது வழக்கம். ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால், பணநாயகமே ஜனநாயகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

கூட்டணிகள் முடிவானதுமே `பேரம் படிந்துவிட்டது' என்றுதான் பொதுமக்களே பேசிக்கொள்கிறார்கள். எல்லாக் கட்சிகளின் வேட்பாளர் நேர்காணலிலும் முதலில் கேட்கப்படும் கேள்வியே, `எவ்வளவு செலவு பண்ணுவீங்க?' என்பதுதான். செலவு செய்வதற்குத் தகுதியுள்ளவர்கள்தாம், இப்போது களத்தில் இறக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் . இவற்றையெல்லாம் ஒருபடி தாண்டி, கட்சிகளுக்கு நிதி வழங்கிக்கொண்டிருந்த பல தொழிலதிபர்களே கட்சிகளின் வேட்பாளர்களாகக் களமிறங்குகிறார்கள்.

மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். அதேபோல, சட்டமன்றத் தேர்தலுக்கு 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் உச்சபட்சத் தொகையை நிர்ணயித்துள்ளது. தேர்தல் ஆணையமே இவ்வளவு பெரிய தொகையைச் சொல்லியிருக்கிறது என்றால், உண்மையில் ஒவ்வொரு பெரிய கட்சியின் வேட்பாளரும் எவ்வளவு செலவழிப்பார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தலா 2 செலவினப் பார்வையாளர்களை நியமிக்கிறது. காவலாளி எட்டடி பாய்ந்தால் திருடன் பதினாறு அடி பாய்கிறான் என்பதைப்போல, தேர்தல் ஆணையத்தை எல்லாம் மீறி, இருபது ரூபாய் டோக்கன்கள் போல ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு புது உத்தியை வேட்பாளர்கள் உருவாக்கி, வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் செய்கிறார்கள். திருமங்கலம் பார்முலா தொடங்கி சமீபத்திய ஆர்.கே.நகர்த் தேர்தல்வரை ஒவ்வொரு தேர்தலிலும் செலவு செய்யப்படும் பணத்தின் அளவு உயர்ந்துகொண்டேதான் போகிறது.

பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. ஆனால், மீண்டும் அங்கு தேர்தல் நடந்தபோது பணப் பட்டுவாடா குறைந்துவிடவில்லை. பணத்தைப் பட்டுவாடா செய்த அமைச்சர்களைப் பற்றித் தேர்தல் ஆணையம் செய்தி வெளியிட்டதே தவிர அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் கறாராகச் செயல்படுவதும், எல்லாக் கட்சிகளும் ஜனநாயகத்தை மதிப்பதுமே இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள். இது நடக்காதபோது ஜனநாயகத்தை வெல்ல வைக்க வேண்டிய கடமை வாக்காளர்கள் கையில்தான் இருக்கிறது. `யார் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டேன்; என் வாக்கை விற்க மாட்டேன்' என்று தமிழக வாக்காளர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டிய தருணம் இது.