Published:Updated:

ஹோண்டா பிரியோ காரை நிறுத்திவிட்டார்களே... ரீ-சேல் வேல்யூ குறையுமா? #AutoAnswers

சில கார்களுக்கு மட்டுமே விதிவிலக்காக ரீ-சேல் மதிப்பு குறையாது. உதாரணத்துக்கு ஹோண்டா சிவிக் இப்போது செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் ஹாட் செல்லராக இருக்கிறது. ஆனால், பிரியோ...

ஹோண்டா பிரியோ காரை நிறுத்திவிட்டார்களே... ரீ-சேல் வேல்யூ குறையுமா? #AutoAnswers
ஹோண்டா பிரியோ காரை நிறுத்திவிட்டார்களே... ரீ-சேல் வேல்யூ குறையுமா? #AutoAnswers

`நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரியோ கார் வைத்திருக்கிறேன். ஹோண்டா,  பிரியோ காரின் தயாரிப்பை நிறுத்தப்போவதாக, செய்தித்தாள்களில் படித்தேன். இது உண்மையா? காரின் தயாரிப்பை நிறுத்துவதால் ரீ-சேல் வேல்யூ பாதிக்கப்படுமா?’

ஆமாம். ஹோண்டா, கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்துவந்த பிரியோவின் தயாரிப்பை நிறுத்திவிட்டது. இனி பிரியோ இந்தியாவில் விற்பனையாகாது. ஒரு காரின் தயாரிப்பு நின்றுவிட்டால் நிச்சயமாக அதன் ரீ-சேல் மதிப்பு குறையும். சில கார்களுக்கு மட்டுமே விதிவிலக்காக ரீ-சேல் மதிப்பு குறையாது. உதாரணத்துக்கு ஹோண்டா சிவிக் இப்போது செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் ஹாட் செல்லராக இருக்கிறது. ஆனால், பிரியோ அப்படியல்ல. சிறிய காரான பிரியோவின் ரீ-சேல் மதிப்பு மாருதி கார்களுடன் ஒப்பிடும்போது ஏற்கெனவே மிகவும் குறைவு. இப்போது முழுமையாக தயாரிப்பும் நிறுத்தப்பட்டிருப்பதால் ரீ-சேல் மதிப்பு இன்னும் குறையும். அதனால் இந்த காரை விற்பது பற்றி யோசிக்காமல், இதை முழுமையாகப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும். 

`ஸ்கூட்டர் வாங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய பட்ஜெட் 60,000 ரூபாய். ஆனால், ஸ்கூட்டர் கொஞ்சம் பவர்ஃபுல்லாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். எந்த ஸ்கூட்டர் வாங்கலாம்?’

பவர்ஃபுல் ஸ்கூட்டர் என்று இந்தியாவில் எதுவும் இல்லை. இந்தியாவில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களிலேயே அதிக பவர்கொண்டது பியாஜியோ வெஸ்பாதான். இதன் அதிகபட்ச பவரே 11.5bhpதான். ஆனால், இது 150சிசி திறன்கொண்ட ஸ்கூட்டர். இதன் விலை சென்னையில் கிட்டத்தட்ட 1,20,000 ரூபாய். இதற்கு அடுத்தபடியாக ஏப்ரில்லியா 150சிசி ஸ்கூட்டர் இருக்கிறது. அதன் விலையும் 90,000 ரூபாய்க்குமேல். பவர்ஃபுல்லாகவும் இருக்கவேண்டும், விலையும் கொஞ்சம் குறைவாக இருக்கவேண்டும் என்றால், டிவிஎஸ் என்டார்க் வாங்கலாம். இதன்விலை சென்னையில் 81,000 ரூபாய். உங்கள் பட்ஜெட்டைக் கொஞ்சம் உயர்த்தினால் என்டார்க் வாங்கலாம். அப்படியில்லையென்றால், யமஹா ரே-Z அல்லது ஹோண்டா ஆக்டிவா i ஸ்கூட்டரை வாங்கலாம்.

`என்னுடைய பட்ஜெட் 5 லட்சம் ரூபாய். என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார் வாங்கலாம் என இருக்கிறேன். இடவசதி அதிகமாக இருக்கவேண்டும், கொஞ்சம் பவர்ஃபுல்லாக, மைலேஜ் அதிகம் தரக்கூடிய காராகவும் இருக்கவேண்டும். என்ன கார் வாங்கலாம்?


டாடா டியாகோ, மாருதி வேகன் -ஆர் ஆகிய கார்கள்தான் இந்த செக்மென்ட்டில் அதிகம் விற்பனையாகின்றன. டியாகோ, வேகன்-ஆர் இரண்டில் வேகன்-ஆர்தான் பெஸ்ட் சாய்ஸ். ஆனால், இப்போது டட்ஸன் கோ காரில் பல புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

டட்ஸன் கோ காரின் பலமே இடவசதியும், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும்தான். 5 லட்சம் ரூபாய் காராக இல்லாமல் பார்ப்பதற்குப் பெரிய கார் தோற்றத்தை இது கொடுக்கும். பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மிரர்ஸ், 7 இன்ச் டச்ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் பிளே எனப் பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது டட்ஸன் கோ. அதிக வசதிகள்கொண்ட மாடலின் விலை சென்னையில் 6 லட்சம் ரூபாயை நெருங்கும். டட்ஸன் கோ காரின் மெயின்டனன்ஸ் செலவுகள் குறைவு என்பதோடு இது லிட்டருக்குச் சராசரியாக 14 கி.மீட்டர் மைலேஜ் தரும்.  டட்ஸன் கோ வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்கும். மூன்று கார்களையும் ஒரு டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு முடிவெடுங்கள்.