Published:Updated:

ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!

ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!

ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சார்பில் ஓசூர் மற்றும் பெங்களூரு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடந்தது. முதலீட்டு மந்திரங்கள் என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்களின் முதலீட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!

ஓசூரில் நடந்த கூட்டத்தில் முதலில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி தலைவர் கே.எஸ்.ராவ் பேசினார்.

“நாம் பேசும் மொழிகள் பலவாக இருந்தாலும், பணம் பேசும் மொழி ஒரே  மொழிதான். அந்த மொழி ‘இன்றைக்கு நீ என்னைச் சேமித்தால், நாளைக்கு நான் உன்னைக் காப்பாற்றுவேன் (If you save me today, I will save you Tomorrow) என்பதாக இருக்கிறது” என்றார்.

 அடுத்ததாக ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி பேசும் போது, “தேவையில்லாத செலவுகளைக் குறைத்தாலே அதிகமாகச் சேமித்து வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள முடியும்.  ஒருவர் தினசரி 50 ரூபாய் வீதம் 30 ஆண்டு களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்து, அதற்கு 12% வருமானம் கிடைத்தால் அவருக்கு மொத்தம் ரூ.44 லட்சம் சேர்ந்திருக்கும். சிறுதுளி பெருவெள்ளம் என்பது இதுதான்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இறுதியாக முதலீட்டு ஆலோசகர் வ. நாகப்பன் பேசினார். “நம்மில் பலருக்கு வணிகம் செய்வது பற்றி யாரும் சொல்லித் தரவில்லை. தட்டுத்தடுமாறி அதில் வெற்றி பெற்றுவிடுகிறோம். ஆனால், முதலீட்டில் அந்த விஷயத்தைக் கடைப்பிடிப்ப தில்லை. முதலீடு குறித்து தெரிந்துகொள்ள இதுபோன்ற கூட்டங்களில் அவசியம் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும்” என்றவர், தங்கம் ஒரு லாபகரமான முதலீடு இல்லை என்பதை விளக்கிச் சொன்னார்.

ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!

“பங்குகளை வாங்கும்போது, பி/இ விகிதம், இ.பி.எஸ், புத்தக மதிப்பு போன்றவற்றைப் பார்த்து வாங்குகிறோம் அதேபோல், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது எதையாவது பார்த்து வாங்க வேண்டுமா” என்று முதலீட்டாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“டெக்னிக்கலாகப் பார்த்தால், ஆல்ஃபா, பீட்டா, ஸ்டாண்டர்டு டிவியேஷன் போன்ற பலவற்றைப் பார்க்க வேண்டும். ஆனால், இது குறித்தெல்லாம் முதலீட்டாளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. நம் இலக்கு என்ன, அதற்கு ஏற்ற ஃபண்டுகள் எவை, அந்த ஃபண்டுகள்  மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு என்பது போன்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலீடு செய்யப்போகும்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எத்தனை ஆண்டுகளாக இந்தத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்தக் குறிப்பிட்ட ஃபண்டை  நிர்வகிக்கும் நிதி மேலாளர் திறமை யானவரா என்பது போன்ற விஷயங்களைக் கவனித்தால் போதும்’’ என்றார்.

ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!

பெங்களுரூ நிகழ்ச்சியில் வ.நாகப்பன், கே. எஸ்.ராவ் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவி துணைத் தலைவர் எஸ்.குருராஜ் ஆகியோர் பேசினார்கள். பெங்களூரு கூட்டம்,  2018 - 19-ம் நிதியாண்டில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நடத்தும் 100-வது நிகழ்ச்சி என்பதால், முதலீட்டாளர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

எஸ்.குருராஜ் பேசும்போது, “மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் கிடைக்கும் வருமானம்,  அந்த ஃபண்ட் செயல்படுவதைப் பொறுத்து இல்லை. முதலீட்டாளர் எப்படிச் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. சந்தையின் ஏற்ற இறக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருபவர்கள்தான் உண்மையில் அதிக லாபத்தைப் பெற்றிருக்கிறார்கள்” என்றார்.

முதலீடு பற்றி பலருக்கும் தெளிவை உருவாக்குவதாக இருந்தன ஓசூர், பெங்களூரில் நடந்த விழிப்பு உணர்வுக் கூட்டங்கள்!

சி.சரவணன் - படங்கள்: வ.யஷ்வந்த்