Published:Updated:

`முழுமையாகத் தடை செய்ய வேண்டாம்; மாற்றம் செய்யுங்கள்!’ - டிக் டாக் பிரபலத்தின் கோரிக்கை

`முழுமையாகத் தடை செய்ய வேண்டாம்; மாற்றம் செய்யுங்கள்!’ - டிக் டாக் பிரபலத்தின் கோரிக்கை
`முழுமையாகத் தடை செய்ய வேண்டாம்; மாற்றம் செய்யுங்கள்!’ - டிக் டாக் பிரபலத்தின் கோரிக்கை

`டிக் டாக்கை முழுமையாகத் தடை செய்ய வேண்டாம் அதில் மாற்றங்கள் கொண்டு வரலாம்' என டிக் டாக் பிரபலங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

டிக் டாக்' செயலியைத் தடை செய்ய வேண்டுமெனச் சட்டசபையில் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் மணிகண்டன் அந்த செயலியைத் தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை  செய்வோம் என தெரிவித்திருக்கிறார். இது சமூக வலைதளங்களில் டிக் டாக் செயலிக்குத் தடை என்கிற ரீதியில் பரவி டிக்டாக் தேவையா, கூடாதா என உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த டிக் டாக் பிரபலம் பிரனிகாவிடம் பேசினோம். ``டிக்டாக் ஆப்பை தடை செய்யப் போறாங்க என்ற செய்தி என்னைப் பொறுத்தவரை மிகவும் வருத்தமான செய்தி. நான் டிக் டாக் பயன்படுத்த ஆரம்பித்தபோது 1 மில்லியன் வியூஸ் கடந்தது. இதனால், அடுத்தடுத்த பதிவுகளைச் செய்ய ஆர்வம் கொடுத்தது. தொடர்ந்து பதிவுகள் போடவே, சினிமாத் துறையினரின் தொடர்புகளும் கிடைத்தது. `ஜில்லுனு ஒரு காதல்' படத்தில் வரும் சில காட்சிகளை டிக் டாக் செய்திருந்தேன் அதைப் பார்த்துவிட்டு நடிகர் பார்த்திபன் போன் செய்து வாய்ப்புகள் வழங்குவதாகத் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு சினிமா வாய்ப்புகளும் எனக்கு வர ஆரம்பித்தது. என்னுடைய திறமை எனக்கே தெரிய ஆரம்பித்துள்ளது. மதுரை கலாசாரம் தொடர்பான ஆல்பம் சாங்கில் நடித்துள்ளேன். இப்படியாக பலரும் டிக் டாக் மூலம் தங்களின் திறமைகளை வளர்த்துவருகின்றனர். இந்தநிலையில், டிக் டாக்கில் சிலர் செய்யும் தவறுகளுக்காக முழுமையாக இந்த ஆப்பை தடை செய்ய வேண்டியதில்லை. தவறான பதிவுகளைச் செய்யும் நபர்களின் ஐ.டியையும், வீடியோக்களையும் தடை செய்யலாம். முழுமையாகத் தடை செய்ய வேண்டாம்’’ என்றார்.