Published:Updated:

ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் ஹீரோ!

ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் ஹீரோ!
ராஜமெளலி இயக்கத்தில் நடிக்கும் பாலிவுட் ஹீரோ!

'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ரோமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஹீரோயினாக நடிக்க ஆலியா பட், பர்னீதி சோப்ரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், இன்னும் அப்படத்தின் ஹீரோயின் யார் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

சமுத்திரக்கனி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவரது நடிப்பில் 'டோட்டல் தமால்', 'தே தே பியார் தே' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. தவிர, ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வந்தது. ஆனால், அவர் ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. மேலும், இந்தப் படத்தின் இரண்டாவது ஷெட்யூலில் ஆயிரம் பேர் இடம்பெறும் ஒரு பிரமாண்ட சண்டைக் காட்சியை எடுக்க உள்ளனர். அதற்கான வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.