Published:Updated:

வெடிச்சா ஓடும்... அசந்தா தாவும்..!

இதுதாண்டா குரங்குசேட்டை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முல்லைப் பெரியாறு பிரச்னையில் போர்ப்பிரளயமாக மாறி இருக்கிறது தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருக்கும் லோயர் கேம்ப்.  குளிர் கிடுகிடுக்கவைக்கும் அதிகாலையில், ஒல்லியான உருவத்தில் நிற்கிறார் ராசுத் தேவர். அவர் தோளில் தொங்கும் படா படா பட்டாசுகளைப் பார்த்ததும் தலைதெறிக்க ஓடுகின்றன குரங்குகள். லோயர் கேம்ப் பகுதியில் உள்ள  எல்லா குரங்குகளும் ராசுத் தேவர் மற்றும் அவரு டைய மகன் சேகரின் விசிலைக் கேட்டாலே, 'அர்ஜுனன் பேரு பத்து’ என்று அலறுகின்றன.

வெடிச்சா ஓடும்... அசந்தா தாவும்..!
##~##

''இந்தக் குரங்குங்க பண்ற சேட்டையை நான் சொல்லி மாளாது... நீங்க எழுதியும் மாளாது. இந்தக் குரங்குங்க இங்க இருக்கிற வாட்டர் பவர் ஹவுஸ் பக்கம் போய், வயர்களைப் பிடிச்சு தொங்குறதால மிஷின் ரிப்பேர் ஆகிடும். அதனால் வர்ற நஷ்டம் லட்சக்கணக்கில் இருக்கும்.  இதனால் நமக்கு நஷ்டத்தோட, சில குரங்குகள் கரன்ட் பாய்ந்து செத்தும் போகும். அப்படி குரங்கு செத்துப்போனா அன்னைக்கு நமக்கு கஞ்சி உடம்புல சேராது. நெஞ்சு நிறைய துக்கத்தோட மாலை மரியாதை செஞ்சு அடக்கம் பண்ணுவோம்.

ரெண்டு பக்கமும் சேதாரம் இருக்கக்கூடாதுனு பத்து வருஷமா என்னையும் என் மகன் சேகரையும் தலைக்கு மாசம் 4,500 ரூபாய் சம்ப ளத்துக்கு வேலைக்கு எடுத்திருக்காங்க. காலையிலே அதுக எழுந்திரிக்கறதுக்கு முன்னாடி நாங்க எழுந்திருச்சிருவோம். விர்ர்ரு விர்ர்ருனு விசில் அடிச்சு விரட்டி, அதுகளை குமுளிப் பக்கம் கொண்டுபோய் விட்ருவோம். விசில்னா சாதாரணமா இல்லை. காது நிஜமாவே கிழியும். தூக்கத்துல திடீர்னு விசில் சத்தம் கேட்குறதால அதுக குழப்பம் ஆகி ஓட ஆரம்பிச்சிரும். கொஞ்ச நேரம்தான், அவுக நிதானத்துக்கு வந்துட்டா ஆட்டத்தை ஆரம்பிச்சிருவாக. நாங்க திரும்பி வர்றதுக்குள்ள, அதுக வந்து நிக்கும். நமக்குக் கிறுக்குப் புடிக்கிற மாதிரி ஆகிடும். அப்போ அதை அடக்குறதுக்கு ஆண்டிப்பட்டி வெடி வெடிப்போம். சும்மா மரம், மலை எல்லாம் அதிரும். தெறிச்சு ஓடிரு வாக. அந்த வெடியை நெதமும் இ.பி.காரங்களே வாங்கிக் கொடுத்துடுவாங்க. பொழுது சாஞ்சு அதுக தூங்கப் போறவரைக்கும் இந்த அக்கப்போர்தான்!'' என் கிறார் ராசுத் தேவர்.

வெடிச்சா ஓடும்... அசந்தா தாவும்..!

தொடர்ந்து அவருடைய மகன் சேகர், 'இங்க இருக் கிற குடியிருப்புல மறந்தாப்புல கதவைத் திறந்து போட்டுட்டா சோலி முடிஞ்சுது. ஒரு தடவை ஒரு வீட்டுல புகுந்த குரங்கு, மனுசன் மாதிரியே குங்கு மத்தை அள்ளி முகம் முழுக்கப் பூசி, கண்ணாடியில அழகு பார்த்துச்சு. கூடி இருந்த பொம்பளைக பயம் மறந்து சிரிச்சுட்டாங்க. நம்ம எல்லாம் என்ன சார் லவ் பண்றோம்?  பொண்ணுங் களைப் பாத்துட்டா ஆம்பிளை குரங்குங்களுக்கு ஜிவ்வுனு செவக்கும் பாருங்க முகம். அதுதான் லவ்வு. குரங்கு பிடினு எதுக்குச் சொல்வாங்க தெரியுமா? கையில எதைப் பிடிச்சாலும் விடவே விடாதுங்க. குட்டிசெத்துட் டாக்கூட ஒரு வாரமோ, பத்து நாளோ கீழே விடவே விடாது. தாவும்போது தெரியாமக் கீழே போட்டாத்தான் உண்டு. அந்த அளவுக்குப் பாசக்காரனுங்க. நாங்க அதுகளைப் பாதிக்கிற மாதிரி எதுவும் செய்ய மாட் டோம் சார். அதுக பூமியில ஜனிக்கும் போதே சேட்டை செய்றதுக்குன்னே பிறந்ததுக. அதுக வேலையை அதுக பாக்குது. நம்ம வேலையை நாம பாப்போம் சார்!'' என்றபடி மறுபடியும் குளிர்காற் றில் வீறிடவைக்கும் விசில் அடிக்கிறார். சற்றே அதிர்ந்து பயந்து கிளைவிட்டு கிளை தாவ ஆரம்பிக்கின்றன குரங்குகள்!

வெடிச்சா ஓடும்... அசந்தா தாவும்..!

-ஜெ.பேச்சிமகன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு