புது வருடத்தின் முதல் நாள் அன்று மாலை, வாக்கிங் செல்ல பார்க் வந்தவர்களை, 'நடந்தால் வியாதிகள் ஓடும்’, 'எடுப்பான தோற்றத்துக்கு மிடுக்கான நடை’ என்பது போன்ற வாசகங்களை தாங்கிய அட்டைக்களை உயர்த்திப் பிடித்தபடி 'டாக்டர் விகடன்’ சார்பாக கல்லூரி மாணவர்கள் வரவேற்றார்கள்.  மதுரை தல்லாக்குளம், கோரிப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்டு, விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டு என பல இடங்களில் டாக்டர் விகடன் டீம் கொடுத்த  புதுவருட வாழ்த்து அட்டைகள் மற்றும் பாடி மாஸ் இன்டெக்ஸ் கணக்கிடும் அட்டைகளை இன்முகத்தோடு வாங்கிக்கொண்டவர்கள், ''இதிலே ஏன், டாக்டர் விகடனின் சந்தா விவரம் பற்றி குறிப்பிடவில்லை? எந்த நம்பருக்கு போன் பண்ணா விவரம் கிடைக்கும்?'' என்று ஆர்வமாக கேள்வி எழுப்பினார்கள். (சந்தா விவரங்களுக்கு: 044- 28411679)

இனி எல்லாம் சுகமே!
##~##

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அருகே சிக்னலில் நின்றுகொண்டு இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆர்வத்துடன் வந்து விசாரித்தபோது, அவருக்கு பாடி மாஸ் இன்டெக்ஸ் பற்றி விளக்கினோம். 1.6 மீட்டர் உயரம் உள்ள அவர் 75 கிலோ எடையுடன் இருந்ததை அவருக்கு சுட்டிக் காட்டினோம். 'கொஞ்சம் ஓவராத்தான் தொப்பை போட்டுருச்சோ? சரி... அதை குறைக்க இனிமேல் வாக்கிங் போக வேண்டியதுதான்...’ என்றார் தொப்பையைத் தடவியபடியே.

அந்த போலீஸ்காரரைப் போலவே அத்தனை பேரும் வாக்கிங் கிளம்ப சபதம் எடுத்துவிட்டால் 'இனி எல்லாம் சுகம்’தான்!

- குள.சண்முகசுந்தரம், ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு