Published:Updated:

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!
லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

இந்த வார பசுமை விகடன்: https://bit.ly/2GFYwbl

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

மாந்தோப்பில் பெரும்பாலும் யாரும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதில்லை. ஆனால், தனது மாந்தோப்பில் பலவிதமான பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்து, அசத்தல் வருமானம் எடுத்து வருகிறார், முத்துவேல் பாண்டியன். 

"...முழுமையான இயற்கை விவசாயியா மாறிட்டேன். நாற்பத்தஞ்சு ஏக்கர் நிலத்துல மட்டும் ஊடுபயிர் செய்யலாம்னு முடிவு செஞ்சேன். பலா, தேக்கு, சில்வர் ஓக் மரங்களை வரப்பு ஓரங்கள்ல நடவு செஞ்சேன். 2015-ம் வருஷம், பத்து ஏக்கர் நிலத்துல ஊடுபயிரா எலுமிச்சை நடவை ஆரம்பிச்சேன். ரெண்டு மாமரங்களுக்கு இடையில ஒரு எலுமிச்சை செடினு கிட்டத்தட்ட ஆயிரம் செடிகள் நடவு செஞ்சேன். இப்போ அதெல்லாம் காய்ப்புல இருக்கு. அடுத்தடுத்து மாமரங்களுக்கு இடையில சில்வர் ஓக், தேக்கு, பலா கன்றுகளை நடவு செஞ்சேன். அதெல்லாம் வளர ஆரம்பிச்ச பிறகு அதுல மிளகுக் கொடிகளை ஏத்தி விட்டுருக்கேன். மொத்தம் ஆயிரம் மிளகு கொடிகள் இருக்கு."

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

- `மா, எலுமிச்சை, பப்பாளி, பலா, தென்னை... ஆண்டுக்கு ரூ.38,00,000, ஊடுபயிர் கொடுக்கும் உற்சாக வருமானம்!' தரும் அனுபவங்களையும் உத்திகளையும் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் வழக்கமான பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆர்வத்தோடும், அர்ப்பணிப்போடும் விவசாயம் செய்து, வெற்றிக் கோட்டைக்குள் நுழைந்தவர்களில் ஒருவரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துவேல் பாண்டியன். மேலும் படிக்க க்ளிக் செய்க...

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

ஒரு கணக்குக்கு உலகில் யானை மிதித்து 2,000 பேரும், பாம்பு கடித்து 10,000 பேரும் இறக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இந்த விகிதத்தோடு ஒப்பிட்டால் கொசுக்களால் கடிபட்டு நோய்த்தொற்றுகளுக்குள்ளாகி இறப்பவர்கள் 1,00,000 பேருக்கும் அதிகம். இப்போது முடிவு செய்து கொள்ளுங்கள் உலகில் பலசாலியான உயிரினம் எது என்பதை. இப்படிப்பட்ட பராக்கிரமங்களைக் கொண்டிருப்பதால்தான் பூச்சிகளைப் பற்றிய புரிதல் மனிதர்களுக்கு அவசியம் என்பதாக உள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு மிக மிக அவசியம்...

உணவுகளைச் சிதைக்கும் பூச்சிகளில் கரப்பான் பூச்சிக்கு முக்கியப்பங்கு உண்டு. மனிதன் சாப்பிட்டு மீதமான உணவுகளை, தன் உணவாக எடுத்துக்கொண்டு அதை அப்புறப்படுத்தும் பூச்சி உண்மையில் சிறந்ததுதானே. 'கரப்பான் பூச்சி இருந்தா வீட்டுல செல்வம் சேரும்' என இன்றும் கிராமங்களில் சொல்வதைக் கேட்கலாம். அவை, நமது உணவின் மீதத்தை எடுத்து அப்புறப் படுத்துகின்றன. இதுபோன்ற புரிதல்கள் இல்லாததால், மனிதனுக்கும், பூச்சிகளுக்கும் இடையில் நடக்கும் போரில் பூச்சிகள் அதிகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன...

- வயலில் ஏதாவது பூச்சியைப் பார்த்ததும் உடனடியாகப் பூச்சிக்கொல்லி வாங்க ஓடுபவரா நீங்கள்... அப்படியிருந்தால், உங்களுக்காகத்தான் இந்தப் புதிய தொடர்தான் 'பூச்சிகளும் நம் நண்பர்களே..! - 2.0'. விவசாயிகள் மட்டுமின்றி சூழலியலில் ஆர்வம் மிக்க எவருக்குமானது இந்தத் தொடர் பகுதி.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

"ஆரம்பத்துல பால் விற்பனைக்கு ரொம்பக் கஷ்டப்பட்டோம். `நமக்குத் தேவையில்லாத வேலையாயிடுச்சே'னு கூட வருத்தப் பட்டிருக்கோம். நாங்க அலைஞ்சு ஆர்டர் கேக்குறதைப் பார்த்து... 'நகைக்கடை வெச்சுருக்கீங்க. ஏசி ரூமுக்குள்ள உக்காந்து நோகாம சம்பாதிக்கிறதை விட்டுட்டு பால் விற்பனை செய்றதுக்காக இப்படி அலைஞ்சுட்டு இருக்கீங்களே'னுகூடச் சிலர் கேட்டாங்க. ஆனா, நாங்க அதுக்கெல்லாம் அசரலை."

- 'கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்... ரூ.1,750 லாபம்!' என்கிறார் நாட்டு மாடுகள் மூலம் பால் உற்பத்தி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் எடுத்துவரும் மகேஷ்குமார். வெற்றிச் சூத்திரங்களையும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார். 

இயற்கைச்சீற்றம், விலையின்மை, ஆள் பற்றாக்குறை... எனப் பல காரணங்களால் விவசாயத்தில் வருமானம் குறைகிறபோது, அதை ஈடுகட்டுபவை விவசாயம் சார்ந்த உபதொழில்கள்தான். ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, காடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு... என ஏகப்பட்ட பண்ணைத்தொழில்கள் உள்ளன. 

நமது பண்ணை அமைந்திருக்கும் சூழல், இடவசதி, தண்ணீர் வசதி... போன்ற முக்கியமான காரணிகளை வைத்துச் சரியான பண்ணைத்தொழிலைத் தேர்ந்தெடுத்து ஈடுபட்டால், கண்டிப்பாக நல்ல லாபம் ஈட்ட முடியும். சொல்லப்போனால் இதுபோன்ற விவசாய உபதொழில்கள் மூலம் விவசாயத்தில் எடுக்கும் வருமானத்தைவிட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும். அதுபோன்ற பண்ணைத் தொழில்களை வெற்றிகரமாகச் செய்து வரும் விவசாயிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வெற்றிச்சூத்திரத்தை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் 'பணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள்!' எனும் புதிய தொடரின் நோக்கம். மேலும் படிக்க க்ளிக் செய்க...

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

நிலத்துக்குப் பட்டா வாங்க எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? குடும்ப அட்டைக்கான கட்டணம் எவ்வளவு? இந்த இரண்டு கேள்விகளைச் சிலரிடம் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள். ஆனால், உண்மை வேறு. நாம் வாங்கும் நிலத்தைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, நாம் கட்டும் பதிவுக்கட்டணத்துடனேயே பட்டா மாற்றுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி விடுகிறோம். ஆனால், 'பட்டாவுக்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தனியாகப் பணம் கட்டவேண்டும்' என்று சொல்வார்கள். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்பதும் உண்டு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி நான்கே நான்கு கேள்விகள் கேட்டால் போதும். ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் உங்கள் பெயருக்குப் பட்டா மாறிவிடும். 

- அரசு அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும்... அதாவது பட்டா, நியாய விலைக்கடை அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற எந்தச் சேவைகளாக இருந்தாலும் அவற்றுக்கான அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொண்டால் நம் பணமும் நேரமும் மிச்சமாகும் என வழிகாட்டுகிறது `சட்டப்பஞ்சாயத்து' எனும் புதிய தொடர். மேலும் படிக்க க்ளிக் செய்க...

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

``வெகு நாள்களாக விவசாயமே செய்யாமல் விடப்பட்டிருந்த நிலத்தில் நன்கு உழவு ஓட்டி மூன்று முறை உழவு செய்து அடியுரமாக மட்கிய குப்பையைப் போட்டு நிலத்தை வளப்படுத்தி 40 சென்ட் நிலத்தில் கருத்தக்கார் ரக நெல்லைச் சாகுபடி செய்தேன். அதில் ஓரளவு நல்ல மகசூல் கிடைத்தது. தொடர்ந்து 40 சென்ட் நிலத்தில் சொர்ணமசூரி ரக நெல்லையும், 50 சென்ட் நிலத்தில் 5 வகைக் காய்கறிகளையும் சாகுபடி செய்தேன். அவற்றை இல்லக் குழந்தைகளின் உணவுக்காகப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது, 40 சென்ட் நிலத்தில் அறுபதாம் குறுவை நடவு செய்துள்ளேன். அவை 20 நாள்கள் பயிராக உள்ளன. ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை விதைத்துள்ளேன்.  

40 சென்ட் நிலத்தில் 714 கிலோ சொர்ணமசூரி நெல் கிடைத்தது. இதை அரிசியாக அரைத்தபோது, 503 கிலோ அரிசி கிடைத்தது. அன்பு இல்லம், அமைதி இல்லம் ஆகிய இரண்டு இல்லங்களிலும் மொத்தம் 120 மாணவ, மாணவிகள் உள்ளனர். அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் உணவை சொர்ணமசூரி ரக அரிசியில் சமைக்கிறோம். தற்போது விதைத்துள்ள நிலக்கடலையை அறுவடை செய்து எண்ணெய் ஆட்டி இல்லத்தின் உணவுப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளப் போகிறோம்."

- 'கருத்தக்கார்... சொர்ண மசூரி... காய்கறிகள்! - அருட்தந்தையின் அற்புதச் சாகுபடி' அனுபவங்களும் கடந்து வந்த பாதையும் நிச்சயம் பலருக்கும் வழிகாட்டும். மேலும் படிக்க க்ளிக் செய்க...

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

`பல பயிர்ச் சாகுபடி மற்றும் நேரடி விற்பனை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தால்தான் விவசாயம் லாபகரமாக இருக்கும்' என்று பல ஆண்டுக் காலமாக வலியுறுத்தி வருகிறார்கள், விவசாய வல்லுநர்கள். அவற்றைக் கடைப்பிடித்து வெற்றிகரமாக விவசாயம் மேற்கோள்ளும் விவசாயிகள் பலர் உண்டு. அத்தகையோரில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்துள்ள கெருடமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்முத்து. இவர் தன் மனைவி கோமதியுடன் இணைந்து இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து நேரடி விற்பனை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார். 

``இப்போதைக்கு... தக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு எல்லாம் சேர்த்து தினமும் 100 கிலோவுக்கும் அதிகமா காய்கறிகளை அனுப்பிட்டுருக்கோம். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூருனு நிறைய ஊர்கள்ல முப்பது வாடிக்கையாளர்கள் இருக்காங்க."

- 'தக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி... 3 ஏக்கரில் தினமும் ரூ.3,000 வருமானம்!' என்பது சாத்தியமானதன் பின்புலத்தையும் முயற்சியையும் விளக்கி வழிகாட்டுகிறார் பொன்முத்து. மேலும் படிக்க க்ளிக் செய்க...

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

வேப்பங்கொட்டைச் சாறு: 5 கிலோ வேப்பங்கொட்டையை உரலில் இட்டு இடித்து, சல்லி சாக்கு அல்லது மெல்லிய துணியில் கட்டி, 10 லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாற்றினைப் பிழிந்து எடுத்து வடிகட்டி 190 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். 

இதனுடன் 100 மில்லி காதிசோப்புக் கரைசலையும் ஒட்டும் திரவமாக கலந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் வெள்ளை ஈ, காய்ப்புழுக்கள், அசுவினி, இலைச்சுருட்டுபுழு, குருத்துப்புழு, கதிர்நாவாய் பூச்சி, தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

- இது மட்டுமின்றி பூண்டுக் கரைசல், பெருங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய்க் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, வில்வம், சுக்கு அஸ்திரா மற்றும் அரப்பு மோர் கரைசல் ஆகிய இயற்கைப் பூச்சிவிரட்டி செய்யும் முறைகளையும், அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் எடுத்துரைத்து வழிகாட்டுகிறது 'செலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்!' எனும் பகுதி.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

லாபமும் சூழலும்: 6 நிமிட வாசிப்பில் பசுமை விகடன் 8 பகுதிகள்!

`இந்திய முந்திரி ஏற்றுமதி விருத்தியகக் கூட்டமைப்பு' (The Cashew Export Promotion Council of India) எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்தால்தான் முந்திரியை ஏற்றுமதி செய்ய முடியும். இந்த அமைப்பின் அலுவலகம் கேரள மாநிலம், கொல்லம் நகரில் உள்ளது. முந்திரிச் சாகுபடி குறித்தும் இவ்வமைப்பு வழிகாட்டி வருகிறது. www.cashewindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இவ்வமைப்பில் உறுப்பினராக முடியும். இந்த அமைப்பு 1955-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது...

...தேங்காய்க் கொப்பரைக்கும் ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது. சோப், அழகு சாதனப் பொருள்கள், ஹேர் ஆயில் ஆகியவற்றின் உற்பத்தியில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் ஏற்றுமதிக்கு 5 சதவிகிதம் மானியம் உண்டு. `தென்னை வளர்ச்சி வாரிய'த்தில் (Coconut Development Board) உறுப்பினராக இருந்தால்தான் தேங்காயை ஏற்றுமதி செய்ய முடியும்...

- 'இந்தியத் தேங்காய்களை விரும்பும் அரபு நாடுகள்... வறுத்த முந்திரிக்கு வளமான வர்த்தக வாய்ப்பு!' என ஏற்றுமதிக்கான வெற்றி சூத்திரங்களைத் தெளிவாகத் தருகிறது 'அள்ளித்தரும் அக்கரைச் சீமை' தொடர் பகுதி. மேலும் படிக்க க்ளிக் செய்க...

இந்த வார பசுமை விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2GFYrEz