Published:Updated:

ரோஜாப் பூவுடன் பூங்காவில் வலம்வந்த இளைஞர்! - காதலர் தினத்தில் திருப்பூரில் நடந்த சம்பவம்

உலக காதலர் தினமான இன்று தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேடி திருப்பூர் பூங்காவில் வாலிபர் ஒருவர் ரோஜா பூவுடன் சுற்றித்திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

திருப்பூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள மாநகராட்சிப் பூங்காவில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். கல்லூரி மாணவர்கள், திருமணமான தம்பதிகள் எனப் பூங்கா முழுவதும் காதல் ஜோடிகளால் நிரம்பி வழிந்த நிலையில், ஒரேயொரு இளைஞர் மட்டும் காலையில் இருந்தே தனியாகக் கையில் ரோஜா பூவை ஏந்தியபடி பூங்கா வளாகத்தைச் சுற்றி வந்த வண்ணம் இருந்திருக்கிறார். அத்துடன் பூங்கா வளாகத்தில் தென்பட்ட இளம் பெண்களிடம் அந்த ரோஜா பூவை நீட்டி தன் காதல் ஆசையை வெளிப்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார். இளைஞரின் அச்செயலால் பூங்காவுக்கு வந்திருந்த பெண்கள் பலரும் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். மேலும், அந்த இளைஞரைக் காண அப்பகுதியில் கூட்டமும் கூடியிருக்கிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நாம் சென்றோம். காதல் வலைவீச்சில் மும்முரமாக இருந்த அந்த இளைஞரிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது, ``என் பெயர் சண்முக பிரகாஷ். நான் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவன். பல்லடத்தில் தங்கி செல்போன் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறேன். மாதம் 15,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை. பல வருடங்களாகப் பெண் தேடியும் இன்னும் அமையவில்லை.

ரோஜாப் பூவுடன் பூங்காவில் வலம்வந்த இளைஞர்! - காதலர் தினத்தில் திருப்பூரில் நடந்த சம்பவம்

கல்யாண புரோக்கருக்கே இதுவரைக்கும் பல ஆயிரங்களைச் செலவழித்தாகிவிட்டது. ஆனாலும், ஒரு தீர்வு கிடைக்கவில்லை. அந்தநேரத்தில்தான் காதலர் தினத்தன்று இப்படியொரு முயற்சியை செய்து பார்க்கலாம் என எனக்குத் தோன்றியது. இந்தப் பூங்காவுக்குள் எனக்குப் பிடித்தமான பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். அவரிடம் இந்த ரோஜாப் பூவைக் கொடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு என்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கக் காத்துகொண்டு இருக்கிறேன்’’ என்றார்.

இப்படியே பல மணி நேரங்களாக தன் காதல் தேவதைக்காகக் காத்திருந்தவரை பூங்கா ஊழியர்கள் திட்டி துரத்தியனுப்பி வைத்தார்கள்.