Published:Updated:

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!
பிரீமியம் ஸ்டோரி
காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் மெர்சிடீஸ் பென்ஸ் V க்ளாஸ்

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் மெர்சிடீஸ் பென்ஸ் V க்ளாஸ்

Published:Updated:
காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!
பிரீமியம் ஸ்டோரி
காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

பென்ஸில் A, B, C, E, G, S என வெரைட் டியான க்ளாஸ்கள் உண்டு. ஹேட்ச்பேக்கில் ஆரம்பித்து செடான், எஸ்யூவி, கூபே என எல்லா மாடல்களிலும் கலந்துகட்டிக் கலக்குகிறது மெர்சிடீஸ் பென்ஸ். லேட்டஸ்ட்டாக `V’ க்ளாஸ் எனும் எம்பிவி-யையும் பென்ஸ் களமிறக்கிவிட்டது. இங்கே `V’ என்பது பென்ஸின் 'வியானோ' எனும் காரைக் குறிக்கலாம். காரணம், ப்ரென்ட் வீல் டிரைவான வியானோ எம்பிவியின் ப்ளாட்ஃபார்மில்தான் ரெடியாகி இருக்கிறது `V’ க்ளாஸ்.

பார்ப்பதற்கு மினி வேன்போல் இருந்தாலும், பென்ஸுக்கே உரிய அந்த லக்ஸூரித்தனம் பளிச்சிடுகிறது. இந்த எம்பிவி-யில் 7 பேர்தான் உட்காரலாம். வேன் என்றால் இன்னும் அதிகமானோர் பயணிக்கலாமோ என நினைத்தால்?

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

2+2+2 மற்றும் 2+2+3 என்று வழக்கமான அதே இரண்டு சீட்டிங் பொசிஷன்களில்தான் வருகிறது `V’ க்ளாஸ். பாடி அளவுகளிலும் அப்படியே! 5,140 மிமீ ஸ்டாண்டர்டு நீளம் ஒன்று. 5,370 மிமீ கொண்ட எக்ஸ்ட்ரா வெர்ஷன் ஒன்று. நாம் டெஸ்ட் செய்தது 6 சீட்டர். நிச்சயம் கார்ப்பரேட் முதலாளிகள் ஒரு மினி மீட்டிங் போட்டுக்கொண்டே பயணிக்கலாம். டிரைவர் சீட்டும் பயங்கர சொகுசு. காரை ஓட்டுவதற்கு வசதியாக வெளிச்சாலை அற்புதமாகத் தெரிகிறது. 4 மீட்டர் செடானை ஓட்டுவதுபோ லத்தான் உள்ளது. 5 மீட்டருக்கு மேலே உள்ள எம்பிவி-யை ஓட்டுவதுபோல் ஒரு பதற்றம் ஏற்படவில்லை.

இன்டீரியரில் பல விஷயங்கள் `C’ க்ளாஸில் இருப்பவைதான். கார்தான் பெருசு. உள்ளே டச்  சிஸ்டம் வழக்கமான அதே 7 இன்ச் ஸ்க்ரீன்தான். பென்ஸுக்கு இது அவுட்டேட்டட் டிசைன்தான். மற்றபடி வழக்கமான ஹீட்/கூல்டு சீட்கள், இரண்டு USB போர்ட்டுகள், 15 ஸ்பீக்கர் பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகள் இங்கும் தொடர்கின்றன.

இது மெர்சிடீஸ் பென்ஸ். அதனால் பின் சீட்களுக்குப் போய் வர மற்ற எம்பிவி-கள்போல் இருந்துவிடக்கூடாது. அதற்காகத் தான் டோர்கள் ஸ்லைடிங் வசதியுடன் இருக்கின்றன. இவை எலெக்ட்ரானிக் ஆபரேட்டட்... உள்ளே இருந்தபடி ஒரு பட்டனைத் தொட்டால் போதும், கதவுகள் தானாக ஸ்லைடு ஆகி திறக்கும்... மூடும்! இந்த வசதி பின்பக்கப் பயணிக்கும் டிரைவருக்கும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

எம்பிவியாச்சே... அதனால் ஹெட்ரூம் தாராளம்! கேபினுக்குள் ஓடி ஆடி விளையாடலாம்போல! பின் சீட்களும் சொகுசு + தாராளம். இங்கு எல்லாமே பேஸிங் சீட்கள். அதாவது, எதிரெதிர் பார்த்தபடி அமர்ந்து வர வேண்டும். உறவுகள் என்றால் பரவாயில்லை. அலுவலக மீட்டிங் என்றால், கால்கள் எதிரில் இருப்பவர்மேல் படாமல் கொஞ்சம் பதற்றத்தோடுதான் பயணிக்க வேண்டும். கடைசி வரிசை சீட்களின் டிராவல், கொஞ்சம் குறைவுதான்.

நடுவரிசை சீட்களை 180 டிகிரியில் சுற்றிக் கொள்ளலாம். ஆனால், சீட்களை சுலபமாக ரெக்லைன் செய்துகொள்ள முடியவில்லை. காரணம், மூன்றாவது வரிசையில் மடிக்கும் வசதிகொண்ட ட்ரேக்கள். இதில் சீட்கள் இடிக்கும். ஆனால், மினி கான்ஃபரன்ஸ் ரூம்போல் இந்த ட்ரேக்களில் பைல்கள், லேப்டாப், உணவுப் பொருள்கள் வைத்துக் கொள்ளலாம். அதேநேரம் லேப்டாப் சார்ஜ் செய்துகொள்ள ஏசி அவுட்புட்டோ, USB போர்ட்டோ இல்லை. அதற்குப் பதில் இரண்டு 12V ஸாக்கெட்கள் இருக்கின்றன. பின்பக்கம் ஸ்ப்ளிட் டெயில்கேட், மேல்நோக்கித் தூக்கும்படியான டிசைன். பொருள்களை ஏற்றி இறக்கும் லோடிங் பாயின்ட் வசதியாகவே இருக்கிறது.

இதில் இருப்பது 2.1 லிட்டர் டர்போ டீசல் 220d இன்ஜின், பவர் 163 bhp. இந்த 3,100 கிலோ எம்பிவி-யை இழுக்க, இந்த பவர் எப்படிப் போதும் என்றுதான் நினைத்தோம். ஆனால், 6 பேரை நிரப்பிவிட்டு, த்ராட்டில் பெடலில் கால் வைத்த அடுத்த 10.9 விநாடியில் 100 கி.மீ வேகத்தைத் தொட்டுவிட்டது என்பது ஆச்சர்யம்தான். எந்த இடத்திலும் பவர் டெலிவரியில் சுணக்கமே தெரியவில்லை. டர்போ சார்ஜர் பக்காவாக வேலைசெய்கிறது. கடைசி வரிசை மீட்டிங் பார்ட்டிகள், சில நேரங்களில் திடீர் ஆக்ஸிலரேஷனால் பைல்களையும் டாக்குமென்ட்களையும் பறக்கவிடலாம்.

காருக்குள் கான்ஃபரன்ஸ்... இந்த பென்ஸில் சாத்தியம்!

வேன் மாடலாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் அத்தனை ஸ்டெபிலிட்டி. ஓவர்டேக்கிங்கும் செம ஈஸி. காரணம், ஆட்டோமேட்டிக்காக இயங்கும் 7 ஸ்பீடு கியர்பாக்ஸ், நமது அவசரத்தை உணர்ந்து பக்காவாக இன்ஜினுடன் பார்ட்னர்ஷிப் வைக்கிறது. 4,000 rpm-க்குமேல் கொஞ்சம் வெளிச்சத்தம் கேபினுக்குள் கேட்கிறது. இன்ஜின் ரிபைன்மென்ட் ஓகேதான். ஆனால், லேட்டஸ்ட் பென்ஸ்களில் இருக்கும் OM654 2.0 லிட்டர் இன்ஜின்போல ஸ்மூத்தாக இல்லை எனச் சொல்லலாம்.

ஓட்டுதல் தரம், பட்டுப்போன்ற மென்மை. மோசமான சாலைகளைத் திணறடிக்கிறது இதன் மெக்பர்ஸன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் செட்-அப். சில மேடு பள்ளங்களில் மட்டும் லேசான ஏற்ற இறக்கங்களை உணர முடிகிறது. ஆனால், இது பின்பக்க கான்ஃபரன்ஸ் மீட்டிங்கை எந்தவிதத்திலும் பாதிக்காது. சிட்டிக்குள் பயன்படுத்த இதன் ஸ்டீயரிங் செம ஜாலியாக இருக்கிறது. ஆனால், இவ்வளவு பெரிய காரைத் திருப்பி வளைத்து பார்க் செய்ய உங்களுக்குத்தான் சாதுர்யம் அதிகமாக வேண்டும். ஆம்! இதன் டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் 11.8 மீ...ட்டர். ஒரு பெரிய டெம்போ டிராவலரை மனதில் நினைத்துக்கொண்டுதான் `V’ க்ளாஸைத் திருப்ப வேண்டும்.  இத்தனை சொகுசில், இவ்வளவு ஸ்மூத்தான இன்ஜின் ரிபைன்மென்ட்டில், தாராளமான இடவசதியுடன் ஒரு எம்பிவி அல்லது மினிவேன் இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது. அதேபோல், இவ்வளவு காஸ்ட்லியாகவும்தான். இந்த `V’ க்ளாஸை ஓட்ட பென்ஸ் அக்கவுன்ட்டுக்கு, 83.31 லட்சம் - 1 கோடி ரூபாய்வரை (ஆன்ரோடு) டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

தொகுப்பு:  தமிழ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism