ள்ளிப் பருவத்தை முடித்து திசைக்குஒன்றாகச் சிறகடித்த பறவைகள், 30வருடங் களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடினால்..? அப்படி ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

'இன்னாள்களான முன்னாள்கள்!'
##~##

1978-ல் 'ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தப் பள்ளியில் எஸ்-1 வகுப்பில் 53 பேர் 'ப்ளஸ் ஒன்’ படித்தார்கள். இவர்கள்தான் கடந்த 30-ம் தேதி காரைக்குடியில் ஒன்று கூடினார்கள். இவர்களுக்காகவே சென்னை யில் இருந்து வந்திருந்தார் முன்னாள் தலைமை ஆசிரியர் வில்லியம் துரைராஜ். ''என்னுடைய வாழ்நாளில் இது ஒருபொன் னான நாள். அதற்காகத்தான் சென்னையில் இருந்து ஓடோடி வந்தேன்'' என்றார்.

அரங்க முகப்பில், தங்களுக்குக் கற்பித்த அத்தனை ஆசிரியர்களின் படங்களையும் ஃப்ளக்ஸ் போர்டாக வைத்திருந்தவர்கள், அவர்களில் 11 பேரை தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து நினைவுப் பரிசுகளும் வழங்கி திக்குமுக்காடவைத்தார்கள். இவர் களின் பாசப் பாராட்டுதலுக்கு, பள்ளியின் முன் னாள் கிளார்க் முனியசாமியும் தப்பவில்லை. ''தங்களை ஏற்றிவிட்ட ஏணிகளை மறக்காத இந்த மாணவர்கள், இன்றைக்கு எங்களுக்குக் கொடுத்திருக்கும் மரியாதையை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது'' என்று கண்கலங்கி னார்முன்னாள்இயற்பியல்ஆசிரியர்கதிர்வேல்.  

பள்ளியில் தங்களுக்கு வழங்கப்பட்ட அட் மிஷன் கார்டு, தாங்கள் படித்த புத்தகங்கள், பழைய போட்டோக்கள் உள்ளிட்டவைகளை சில மாணவர்கள் பத்திரப்படுத்தி எடுத்து வந்து இருந்தார்கள். மதிய உணவுக்குப் பிறகு விளை யாட்டு, ஆட்டம், பாட்டம் என இன்னாள் மாணவர்களாகிப் போனார்கள் முன்னாள்கள். நிறைவில், தங்களுடைய வகுப்பறையில் 30 வருடங்களுக்கு முன்பு தாங்கள் உட்கார்ந்திருந்த அதே இருக்கைகளில் அமர்ந்தபோது, 'அந்த நாட்கள் அப்படியே நகராமல் இருந்திருக்கக் கூடாதா?’ என்ற ஏக்கம் அத்தனை பேர் முகத் தையும் ஆக்கிரமித்துக்கொண்டது.

''வெறுமனே கூடிக் கலையுறது மட்டும் எங்கள் நோக்கம் இல்லை. நாங்கள் 'எஸ்- 1 பேட்ச் ரீ-யூனியன் அறக்கட்டளை’னு ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருக்கோம். அதன் மூலம் எங்களுக்குள் திரட்டிய நிதியைக்கொண்டு நாங்கள் படித்த பள்ளிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் ஒரு வகுப்பறைக்குத் தேவையான பெஞ்ச் மற்றும் டெஸ்க்குகளை வாங்கிக் கொடுத்து இருக்கோம். மீதி இருக்கும் ஒரு லட்சத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து ஆண்டுதோறும் ஏழை மாண வர்களின் படிப்புக்கு உதவி செய்யவும் தீர்மா னிச்சு இருக்கோம்'' என்கிறார் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியரும் முன்னாள் மாணவருமான சுந்தர்ராமன்.

ஆண்டின் முடிவில் அற்புதமான தொடக்கத் துக்கு அடித்தளம் அமைத்து இருக்கிறார்கள் இந்த முன்னாள் மாணவர்கள்!

'இன்னாள்களான முன்னாள்கள்!'

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு