Published:Updated:

நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா
பிரீமியம் ஸ்டோரி
நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

Published:Updated:
நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா
பிரீமியம் ஸ்டோரி
நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

ரபரப்பாக இயங்கும் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், ஒரு பழைய கட்டடம். அதன் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு சிறிய அறையில் கணினி முன் உட்கார்ந்து, அரசுத் துறைக்கு மின்னஞ்சல் செய்து கொண்டிருக்கிறார் கீதா.

ஃப்ளாஷ்பேக்... அது 1975-ம் ஆண்டு. டெல்லியிலுள்ள பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த இளம் பெண் கீதா, அன்றைய அரசியல் சூழலில் ஏற்பட்ட உத்வேகத்தில் படிப்பை விட்டு விளிம்புநிலை மக்கள் சேவைக்காக தமிழகம் நோக்கி ஓடிவந்தார்.

சேவைக்குச் சென்ற மகளை பெற்றோர் ஏதும் சொல்லவில்லை. கீதாவின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், மகளின் அக உணர்வைப் புரிந்துகொண்டு வழிவிட்டார்.

நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

1979-ம் ஆண்டு, கட்டடத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தினார். ஒருநாள் அடையாளப் போராட்டம் என்கிற அளவில் இல்லாமல், தொடர்ந்து அம்மக்களுக்காகப் போராடினார். 1981-ல் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு இவரே முக்கியக் காரணமாக இருந்தார். கீதாவின் பணிகள் தொடர்ந்தன. இடையே தொடங்கிய மண வாழ்க்கையோ முறிந்துபோனது. இரண்டு பெண் குழந்தைகளுடன் தத்தளித்த போதிலும், விளிம்புநிலை மக்களுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை.

வீட்டுவேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், உப்பளத் தொழிலாளர்கள், மண்பாண்டம் செய்பவர்கள், கல்குவாரியில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள், குறிப்பாக, கட்டடத் தொழிலாளர்கள் என இவர்களின் நல்வாழ்வுக்காக ஓட ஆரம்பித்த கீதாவின் கால்கள், இடைவிடாமல் 45 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், நலவாரியத்தைத் தொழில்கள் அடிப்படையில் பிரித்துக்கொடுக்க வேண்டுமெனப் போராடி, அதை நடைமுறைப்படுத்துவதற்காகக் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம்... அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்தது, அவர்களுக்கென சங்கம் அமைத்து நெறிப்படுத்தியது, நலவாரியம் அமைக்கக் காரணமாக இருந்தது எனப் பல நல்ல காரியங்களின் பின்னணியில் கீதாவின் பங்கு முக்கியமானது. விளிம்புநிலை மக்களுக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்தும், ஓயாமல் சிறைக்குச் சென்றும் ஒரு பழுத்த ஆலமராக இன்று கிளைபரப்பி இருக்கிறார் கீதா.

இவரின் இரண்டு மகள்களும் திருமணம் முடிந்து அவரவர் வீட்டில் இருக்கிறார்கள். “ `இவ்ளோ வயசாகிருச்சு... இன்னமும் நீ இந்த வேலையைச் செய்யணுமா'ன்னு பொண்ணுங்க கேட்டுட்டே இருப்பாங்க” என்கிறவரிடம், `நீங்க என்ன பதில் சொல்லுவீர்கள்' எனக் கேட்டதற்கு, “அவங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்னு தெரியும். ஆனாலும் கேப்பாங்க” என்று சிரிக்கிறார்.

“என் வாழ்கையில் மகிழ்ச்சி என்பதே, மக்கள் போராட்டத் துக்காக சிறைக்குச் செல்லும்போதும், ஒரு கட்டத்தில் அவர்களுடைய நலன் உறுதிப்படும்போதும் ஏற்படுகிற நிறைவுதான்” என்கிறார், உள்ளத்தில் உறுதிகொண்ட இந்த மனுஷி.

“இன்னும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் நிறைய இருக்கு. அதையெல்லாம் அறிக்கையாகத் தொகுத்து அரசியல் கட்சிகள்கிட்ட ஒரு கோரிக்கையாக சமர்ப்பிக்க இருக்கிறோம். தேர்தல் நேரத்துல கொடுத்தாத்தான் குறைந்தபட்சம் அதை வாங்கவாவது செய்வாங்க” என மீண்டும் சிரிக்கிறார் கீதா.

-தமிழ்ப்பிரபா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம் : சொ.பாலசுப்ரமணியம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism