Published:Updated:

பாதாம் உண்டு... பருத்தி உண்டு... ஓடு ராஜா!

பாதாம் உண்டு... பருத்தி உண்டு... ஓடு ராஜா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தை பிறந்தால் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் பிரியர்களுக்கு மஜாதான். வரிந்துகட்டி மாடுகளோடு கிளம்பிவிடுவார்கள்.  

பாதாம் உண்டு... பருத்தி உண்டு... ஓடு ராஜா!
##~##

ரேக்ளா மாடுகள் ஓட்டுவதை கௌரவத்தின் அடையாளமாக வைத்திருக்கும் மாட்டுக்காரர்களுக்குப் பொங்கலை ஒட்டி, ரேஸில் கலந்து கொள்ள வெற்றிலை பாக்கு மரியாதையோடு அழைப்பு போகும். இதற்காகவே காத்திருப்பவர்கள் ரேக்ளா பந்தயம் எந்த மூலையில் நடந்தாலும் வண்டி கட்டி கிளம்பிவிடுவார்கள். காரணம், ஜெயித்தால் கிடைக்கும் பரிசுப் பணம் அல்ல. ஜெயிப்பதால் கிடைக்கும் கௌரவம். ஆயிரக்கணக்கில் கிடைக்கும் பரிசுப் பணத்துக் காக, லட்சக்கணக்கில் செலவழித்து காத்திருப்பார்கள்.

ரேக்ளா ரேஸ் பிரியர்களில் ஒருவரான மதுரை - கருப்பாயூரணியைச் சேர்ந்த சரவண பாண்டியன், ''பத்து வருஷத்துக்கு முந்தி, என்னோட தம்பி  வெளையாட்டா ஒரு காளைக் கன்றை வாங்கினான். அதை ரேக்ளா ரேஸ்ல விடலாமானு ஒரு யோசனை வந்துச்சு.  ராமநாதபுரத்துக்குப் பக்கத்துல சனவேலி கிராமத்துல நடந்த ரேஸ்ல விட்டுப் பார்த்தோம். கன்று தோத்ததுனால வெறியாகிட்டேன். அடுத்த

பாதாம் உண்டு... பருத்தி உண்டு... ஓடு ராஜா!

ரேஸ்ல ஜெயிச்சே ஆகணும்னு ஆகிப் போச்சு. ரெண்டே வாரத்துல சிவகங்கையில நடந்த ரேஸ்ல எங்க மாடு ஃபர்ஸ்ட்டா வந்து ருச்சு'' என்று ஃபிளாஷ் பேக் ஓட்டினார்.சரவண பாண்டியனின் மாட்டுக் கொட்டடியில் இப்போது ஐந்து ஜோடி ரேக்ளா மாடுகள் ஃபேன், மூலிகை கொசுவத்தி என ராஜ உபசரிப்பில் இருக்கின்றன. ரேக்ளா காளைகளைப் பராமரிக்கும் விதத்தை விவரித்தார் ரேக்ளா சாரதி ராமச்சந்திரன்.

''ரேக்ளா மாடுகளை ரொம்பச் சூதானமா பராமரிக்கணும். குளிர்ச்சிக்கு அகத்திக் கீரை கொடுப்போம். அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் ஏரித் தண்ணியில குளியல். குளிச்சு முடிச்சதும் உழவுக்கு விட்டு உடற்பயிற்சி. காலை 11 மணிக்கு, பேரிச்சம்பழமும் பாதாம்பருப்பும் உண்டு. சுவாசக் கோளாறு, கால் வலி வராம இருக்க மதியம்நாட்டு மருந்து குடுப்போம். சாயந்தரம், பருத் திக் கொட்டை, கொள்ளு கொடுக்க ணும். ஒரு மாட்டைப் பராமரிக்க ஒரு நாளைக்கு 500 ரூபா பிடிக்கும். வாரத் துல ரெண்டு நாள் மாடுகளை வண்டி யில் பூட்டி 10 கிலோ மீட்டர் தூரம் நடத்தியே ஓட்டுவோம்.'' என்கிறார்  

ரேக்ளா மாடுகளைப் பெரிய ஜோடி, நடுமாடு, கரைச்சான் ஜோடி என்று மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். பெரிய ஜோடி 16 கி.மீ, நடுமாடு 12 கி.மீ, கரைச்சான் ஜோடி 10 கி.மீ  ஓடவேண்டு மாம். ''மாடுகளுக்குப் பயிற்சி குடுக்கும்போதே அது எந்த ஜோடியில ஓடும்னு கணிச்சிருவோம். ரிட்டையர்டு ஆன காளையை 'கொக்கி’னு சொல்லுவோம். அதுதான் புதுசா வர்ற காளை களுக்குப் பயிற்சி கொடுக்கும். பந்தயத்தில் ஓடு றப்ப பக்கத்து வண்டியை மறிக்கிறது, இடிக்கிறதுனு எல்லாத்தையும் கொக்கியே பக்காவா பாத்துக்கும். அந்த அளவுக்குகில்லாடி. புதுசா வர்ற காளைகள அதோட ஜோடி போட்டுத்தான் முதலில் பழக்குவோம்'' என்கிறார் ராமச்சந்திரன்.

பாதாம் உண்டு... பருத்தி உண்டு... ஓடு ராஜா!

தொடர்ந்து பேசிய சரவண பாண்டியன், ''எங்ககிட்ட இருக்கிற ஒரு காளையை 12 லட் சத்துக்கு வாங்க ஆள் இருக்கு. காளைகள் அமையறது கஷ்டம். 10 லட்சத்துக்குக் காளையை குடுத்துட்டு, 20 லட்சம் செலவழிச்சும் புது காளை அமையாமப் போனவங்க உண்டு. போட்டியில ஜெயிச்சு இந்தக் காளைகள் சம்பாதிச்சுக் குடுக்குற பேருக்கும் புகழுக்கும் நிகரா எத்தனை லட்சத்தைக் கொட்டினாலும் நிக்காது சார்!'' சிலிர்க்கிறார் சரவணபாண்டியன்.  

பாதாம் உண்டு... பருத்தி உண்டு... ஓடு ராஜா!

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு