Published:Updated:

`விண்வெளி உங்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது...’ அமெரிக்காவை கடுமையாகச் சாடும் சீனா

`விண்வெளி உங்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது...’ அமெரிக்காவை கடுமையாகச் சாடும் சீனா
`விண்வெளி உங்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது...’ அமெரிக்காவை கடுமையாகச் சாடும் சீனா

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு ஒன்று விண்வெளியில் ஆபத்தான ஆயுதங்களின் பயன்பாட்டைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மூலமாக விண்வெளியை ராணுவமயமாக்க முயல்கின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராகக் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியிருக்கிறது சீனா.

``நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன், விண்வெளி என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. அதன் மீது எந்த ஒரு தனி நாடும் உரிமை கோர முடியாது. குறிப்பாக, அது ஒன்றும் அமெரிக்காவின் தனிப்பட்ட சொத்து கிடையாது’’ எனச் சீன அரசின் வெளியுறவுச் செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் (Hua Chunying) தெரிவித்துள்ளார். மேலும் அவை ஆதாரமற்ற முற்றிலும் தேவையில்லாத கருத்துகள் என்ற அவர் சீனா விண்வெளியை அமைதியாகவே பயன்படுத்த விரும்புகிறது ராணுவமயமாக்கலுக்கு எதிராகவே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.