Published:Updated:

இந்திய ஆட்டோமொபைல்துறை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன?

இந்திய ஆட்டோமொபைல்துறை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன?

*ஒரே பிளாட்பார்மில் பலவகையான கார்களைத் தயாரிப்பதன் வாயிலாக, பயன்படுத்தப்பட்ட உதிரிபாகங்களின் எண்ணிக்கை மற்றும் வாகனத்தின் விலை ஒருசேரக் குறையும்!

இந்திய ஆட்டோமொபைல்துறை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன?

*ஒரே பிளாட்பார்மில் பலவகையான கார்களைத் தயாரிப்பதன் வாயிலாக, பயன்படுத்தப்பட்ட உதிரிபாகங்களின் எண்ணிக்கை மற்றும் வாகனத்தின் விலை ஒருசேரக் குறையும்!

Published:Updated:
இந்திய ஆட்டோமொபைல்துறை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன?

இந்திய ஆட்டோமொபைல்துறை தற்போது பல்வேறு திசையிலிருந்தும் புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து, ICRA India (Investment and Credit Rating Agency of India Limited) அமைப்பு ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் உதிரிபாகத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. 

*மாசுக் கட்டுப்பாடு, எலெக்ட்ரிக் வாகனங்கள், வாகனப் பாதுகாப்பு, ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் ஆகியவை பெரிய பேசுபொருளாகியிருக்கின்றன. இதனால் புதிய வாகனங்களில் கனெக்ட்டிவிட்டி மற்றும் ADAS (Advanced Driver Assistance System) சார்ந்த அம்சங்கள் இடம்பெறும் என்பதுடன், Shared Mobility குறித்த விழிப்புஉணர்வும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், பலதரப்பட்ட வாகனங்கள் பலவகையான பிளாட்பார்மில் தயாராவதற்கு, வாகனத் தயாரிப்பாளர்களுக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. மேலும், ஒவ்வொரு பிரிவிலும் மாதாந்தர விற்பனையில் பலத்த போட்டி நிலவிவருகிறது.

*வரும் ஏப்ரல் 1 - 2020 முதலாக, BS 4-லிருந்து BS-6 மாசு விதிகளுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் அப்கிரேடு ஆகவிருக்கிறது. இதனால் டூ-வீலர்களில் கார்புரேட்டர் வழக்கொழிந்துவிடும் என்பதுடன், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும். மேலும் அதற்குத் தேவையான OBD1/OBD2 (On Board Diagnostics), வாகனத்தின் திறனுக்கேற்ப இணைக்கப்படும். இதனால் டூ-வீலர்களின் விலை 5-10% வரை அதிகரிக்கும். 

*கார்களின் இன்ஜினில் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் மற்றும் SCR (Selective Catalytic Reduction) - DPF (Diesel Particulate Filter) போன்ற Exhaust After-Treatment தொழில்நுட்பங்கள் சேர்க்கப்படும். இதனால் பெட்ரோல் கார்களின் விலை 3-4% மற்றும் டீசல் கார்களின் விலை 10% வரை உயரும். கனரக வாகனங்களில் EGR & DPF தவிர, DOC (Diesel Oxidation Catalyst) - EGR (Exhaust Gas Recirculation) - Advanced Turbocharging - HPDI (High Pressure Direct Injection) ஆகியவை பொருத்தப்படும். இதனால் அவற்றின் விலை 8% மேலாக ஏற்றம் காணும்.

*அரசின் விதிமுறைகளைத் தாண்டி, கட்டுபடியாகக்கூடிய விலைக்கு வழிவகுக்கும் மானியம் மற்றும் பரவலாகக் கிடைக்கும் திறன் இருந்தால், மாற்று எரிபொருளுக்குச் சர்வதேச சந்தைகளில் வரவேற்பு கிடைக்கும். எலெக்ட்ரிக் வாகனத்தைத் தயாரிக்கத் தேவைப்படும் உதிரிபாகங்களுக்கு, பெரும்பாலும் சீனாவை நம்பியே பலர் இருக்கிறார்கள். மேலும், உலகளவில் இதற்குத் தேவையான Charging Infrastructure குறைவாகவே உள்ளது. எனவே, இன்ஜின்களால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு 2025 - 2030 காலகட்டத்தில் அதிகத் தேவை நிலவும்; தவிர இது 2040 வரை நீடிக்கும் என்றாலும், அதன் பின்னர் மாற்று எரிபொருள் மற்றும் மின்சக்தியால் இயங்கக்கூடிய வாகனங்கள் மெல்ல தலைத்தூக்க ஆரம்பிக்கும்.

*இந்தியாவில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் கார்களில், மஹிந்திராதான் முன்னிலையில் இருக்கிறது! ரேவா நிறுவனத்தைக் கையகப்படுத்திய பிறகு e20, e20 +, e-verito வரிசையில் e-suv ஒன்று இந்த நிறுவனத்திடமிருந்து வெளிவரும். மாருதி சுஸூகி மற்றும் டொயோட்டா கூட்டணியில், Badge Engineering கார்களைத் தவிர எலெக்ட்ரிக் கார்களையும் எதிர்பார்க்கலாம். CKD முறையில் கோனா EV மற்றும் CBU முறையில் லீஃப் EV ஆகிய கார்களை, இந்தியாவுக்குக் கொண்டுவரும் முடிவில் ஹூண்டாய் மற்றும் நிஸான் உள்ளன. இவற்றின் விலை எதிர்பார்த்தபடி பிரிமியமாகவே இருக்கும். இதனுடன் டிகோர் EV மாடலை டாடா மோட்டார்ஸ் களமிறக்கும்.

*டூ-வீலர்களில் AHO (Auto Headlight On) வசதியைத் தொடர்ந்து, ஏப்ரல் 1, 2019 முதலாக இன்ஜின் திறனுக்கு ஏற்ப CBS/ABS (Combined Braking System அல்லது Anti-Lock Braking System) இடம்பெறும். இதனால் தற்போதைய சூழ்நிலையில் அவற்றின் 5-10% விலை உயரும். கனரக வாகனங்களில் ABS, SLD (Speed Limiting Device), ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெறும். தவிர மக்களுக்காக இயக்கப்படும் கனரக வாகனங்களில் Vehicle Tracking &Emergency Button சேர்க்கப்படும். இதனால் அவற்றின் விலையும் ஏறும் (2-20 ஆயிரம்).

*கார்களில் ஜூலை 1 - 2019 முதலாக Speed Warning - Seatbelt Reminder - Driver Side Airbag - Rear Parking Sensors - Manual Locking Override - ABS ஆகிய வசதிகள் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதனால் அவற்றின் விலை 10 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரிக்கும். அக்டோபர் 2019 முதலாக Crash Test Certification (Pedestrial Crast Test உட்பட) மற்றும் வாகனத்துக்கு ஏற்ப AES (Autonomous Emergency Braking), ESC (Electronic Stability Control) வழங்கப்படலாம்.

*ஏப்ரல் 1, 2020 முதலாக அமலுக்கு வரவிருக்கும் BS-6 மாசு விதிகள் காரணமாக, வாகனத்தில் இருக்கும் எலெக்ட்ரானிக் அம்சங்கள் கணிசமாக உயரும். பாதுகாப்பு, மாசுக்கட்டுப்பாடு, இன்ஜின், கனெக்ட்டிவிட்டி, வசதிகள் இதில் பெரும்பங்கை வகிக்கும். எனவே 2030-ம் ஆண்டில், வாகனத்தில் இருக்கும் எலெக்ட்ரானிக் அம்சங்களின் அளவு 25-40% வரை இருக்கும். 

*சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், 2007-2016 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 30 ப்ளாட்ஃபார்ம்களைக் கொண்டு பல்வேறு கார்களைத் தயாரிக்கிறது. இதுவே ஃபோர்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், 2007-ல் 27 ஆக இருந்த ப்ளாட்ஃபார்ம்களின் எண்ணிக்கை, 2016-ல் 10 ஆகக் குறைந்திருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் 2007-ல் 25 ப்ளாட்ஃபார்ம்களைக் கொண்டிருக்க, 2016-ல் அது 13 ஆகக் குறைந்துவிட்டது. ஹூண்டாய் 2007-ல் 23 ப்ளாட்ஃபார்ம்களைக் கொண்டிருந்த நிலையில், 2016-ல் இது 8 ஆக மாறிவிட்டது! முன்னே சொன்ன கார் தயாரிப்பாளர்கள் அனைவரும், ப்ளாட்ஃபார்ம்களின் எண்ணிக்கையை ஐந்திற்கும் கிழே கொண்டுவரும் திட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

*மேலே சொன்ன விஷயங்கள் பிரச்னையில்லாமல் நடைபெற, புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு தேவைப்படும். எனவே அதன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு, ஒரே துறையில் இருக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்து பணியாற்றலாம். இல்லையேனில் சர்வதேச அளவில் அந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனத்திடமிருந்து அதனைப் பயன்படுத்துவதற்கான காப்புரிமையைப் பெறலாம்.

*இந்தியாவைப் பொறுத்தவரை, மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் மீதான வரவேற்பு சீரற்ற நிலையிலேயே உள்ளது. சீனாவில் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட்/ஃப்யூல் செல் கார்கள் குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்திருப்பதால், 2020 முதலாகவே இன்ஜின்கள் கொண்ட கார்களின் விற்பனை அங்கே சரிவடையத் தொடங்கும். 2029-ல் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை, சீனாவில் 31% என்ற உச்சத்தை அடைந்திருக்கும். இதனால் பல்வேறு வகையான கார்களைக் கொண்ட தயாரிப்பாளர்கள், உலகளவில் சிறந்துவிளங்குவர்.

* தற்போதைய சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை குறைவாக இருப்பதால், தயாரிப்பாளர்களுக்கும் அவற்றால் கிடைக்கும் லாபம் குறைவாகவே இருக்கிறது. ஒரே நேரத்தில் அதிக அளவில் பாதுகாப்பு அம்சங்கள் பல்வேறு திசையிலிருந்தும் தேவைப்படும் என்பதால், உற்பத்தி வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனால் அவற்றின் அடக்க விலையும் குறையும். மேலும் இவற்றை உள்நாட்டுப் பாகங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கும்போது, விலை இன்னும் சரியும். Exhaust After-Treatment அமைப்பைப் பன்னாட்டு நிறுவனங்களே பெருமளவில் தயாரிப்பதால், அவர்களுக்கான வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.

*மாடர்ன் கார்களில் டிரைவர் டிஸ்பிளே, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை எல்லாம் ஸ்க்ரீன் மயமாகிவிட்டன. TPMS (Tyre Pressure Monitoring System), ESC, AEB, ABS, ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் ஆகியவை எல்லாமே சென்சார்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. ADAS தொழில்நுட்பத்தால், ரேடார் அமைப்பு இந்தியாவில் அறிமுகமாகலாம். சீனா மற்றும் தைய்வானில் இருந்தே முன்னே சொன்னவை எல்லாம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன (60-70%). எனவே அவர்களின் சந்தை மதிப்பு இன்னும் உயரும்.

*ஒரே ப்ளாட்ஃபார்மில் பலவகையான கார்களைத் தயாரிப்பதன் வாயிலாக, பயன்படுத்தப்பட்ட உதிரிபாகங்களின் எண்ணிக்கை மற்றும் வாகனத்தின் விலை ஒருசேரக் குறையும்; இதனால் காரின் ஒட்டுமொத்த தரமும் சிறப்பாக இருக்கும். இன்ஜின்களால் இயங்கும் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் பாகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு (1/100 விகிதம்) என்பதால், அவற்றின் பராமரிப்புச் செலவுகள் குறைவாக இருக்கும். ஒரு பாகத்துக்கு ஒரு அசெம்பிள் என இருந்த காலம்போய், தற்போது ஒரே பாகம் பல்வேறு Sub Assembly-களைக் கொண்டிருக்கிறது. இதனால் அது சேதமடையும்போது, ஒட்டுமொத்தப் பாகத்தையும் மாற்றாமல், தேவையான பகுதியை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் Customisation ஆப்ஷனும், வாடிக்கையாளர்களுக்குத் தானாகவே கிடைக்கும்.