Published:Updated:

சிறிய ஏற்காடான ஏலகிரி மலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- காடுகள் எரிந்து நாசம் !

சிறிய ஏற்காடான ஏலகிரி மலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- காடுகள் எரிந்து நாசம் !
சிறிய ஏற்காடான ஏலகிரி மலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- காடுகள் எரிந்து நாசம் !

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரி மலை மிகப் பெரிய சுற்றுலாத் தலம் ஆகும். ஏலகிரி மலை வேலூர் மாவட்டத்தில் இருக்கக் கூடிய பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்று இம்மலை 14 கொண்டை ஊசி வளைவைக் கொண்டது. இந்த மலையில் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகம் முழுவதும் கோடைக்காலம் துவங்கியுள்ளது.

சிறிய ஏற்காடான ஏலகிரி மலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- காடுகள் எரிந்து நாசம் !



வேலூர் மாவட்டத்தில் சாதாரணமாகவே வெயில் அதிகமாகக் காணப்படும். அதிக வெயிலின் காரணமாக மலைவாழ் மக்கள், கிராம மக்கள் குடிசைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஏரி, குளம், கிணறு என அனைத்து நீர் ஆதாரமும் வற்றிப்போய் இருக்கும். இந்த நிலையில் ஆடு மாடுகள் அனைத்தும் குட்டி ஏற்காடான ஏலகிரி மலையையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது.

சிறிய ஏற்காடான ஏலகிரி மலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- காடுகள் எரிந்து நாசம் !



இந்த  மலையில்  மூலிகைச் செடிகள், பலா மரங்கள் என  வளர்க்கப்பட்டு வருகிறது. இதை அழிக்கும்  வகையில் சமூக விரோதிகள் சிலர்  மலையில் உள்ள மரங்களை வெட்டுவது, தீ வைப்பது எனக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதைத் தடுக்கும் வகையில் வனத்துறை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதையும் மீறி மர்ம நபர்கள் காட்டுக்குத் தீ வைத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு இல்லா நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிய ஏற்காடான ஏலகிரி மலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- காடுகள் எரிந்து நாசம் !


இதுகுறித்து வனத்துறை அலுவலரிடம் கேட்டதற்கு, ``வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தற்போது 10வது கொண்டை ஊசி வளைவு வரை தீயை அணைத்துள்ளதாகவும், விரைவில் தீயை அணைக்க முயற்சிகள் செய்து வருவதாகவும், கோடைக் காலம் என்பதைக் கருத்தில் கொண்டு எந்த நேரமும் ரோந்துப் பணியில் கண்காணித்துவருவதாகவும் கூறினார்.