Published:Updated:

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

Published:Updated:
நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

விடுமுறைக்காலம் இது. பசி, தூக்கம் மறந்து விளையாட்டில் திளைத்திருப்பார்கள் குழந்தைகள். அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும், சிறுபசியை அடக்க நொறுக்குத்தீனிகள் சாப்பிடவும் மட்டுமே வீட்டுக்குள் வருவார்கள். உணவைத் தவிர்த்து நொறுக்குத்தீனிகளை நாடும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பண்டங்களைக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பல்லவா? அவற்றை வீட்டிலேயே சுத்தமாக, சுகாதாரமாகத் தயாரித்துக்கொடுப்பதுதானே சிறப்பாகவும் இருக்கும்?

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

``கைப்பக்குவம் வராதே.... அதுக்கெல் லாம் யாருக்கு டைம் இருக்கு'' என்றெல்லாம் சாக்கு சொல்கிற அம்மாக்களுக்குத் தீர்வுகள் வைத்திருக்கிறார் சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த சிவகாமி.  பாரம்பர்யப் பலகாரங்கள் செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிற சிவகாமி, அவற்றைச் சுலபமாகச் செய்வதில் நிபுணர்.

``எனக்குச் சொந்த ஊர் கரூர். எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அம்மா வும் மாமியாரும் என்னைவிடவும் நல்லா சமைப்பாங்க. அவங்ககிட்டருந்து பாரம்பர்யமான உணவுகளைச் செய்யக் கத்துக்கிட்டேன். எங்க வீட்டுல எப்போதும் நான் செய்யற பலகாரங்கள்தான் இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் அதைத்தான் கொடுப்பேன். பாராட்டறவங்க, கூடவே அவங்களுக்கும் கொஞ்சம் செய்து தரமுடியுமானு ஆர்டர் கொடுத்துட்டுப் போவாங்க. இப்படிச் சின்ன அளவுலதான் இந்த பிசினஸ் ஆரம்பமாச்சு. இன்னிக்கு கல்யாணம், வளைகாப்பு உள்ளிட்ட விசேஷங்களுக்கு மொத்தமா ஆர்டர் எடுத்துப் பண்ற அளவுக்கு பிசினஸ் வளர்ந்திருக்கு'' என்பவரின் லட்டு, புழுங்கலரிசி முறுக்கு, கோதுமை கலகலா, அதிரசம், ராகி பக்கோடா போன்றவற்றுக்கு டிமாண்டு அதிகமாம்.

நீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்! - சிவகாமி

``தினசரி சாப்பாட்டையே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் கலாசாரம் பெருகிட்டி ருக்கும்போது பாரம்பர்யப் பலகாரங்கள் செய்யவெல்லாம் யாருக்கு நேரமும் பொறுமையும் இருக்குன்னு கேட்கறவங்கதான் அதிகம்.  பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி இவற்றைச் செய்யறது அப்படியொண்ணும் பெரிய விஷயமில்லை. ஆர்வமிருக் கிறவங்களுக்கு ரொம்பவே சுலபம்'' என்கிறார். ``லட்டுன்னா சூடா இருக்கும்போதே உருண்டை பிடிக்கணும்னு நினைப்பாங்க. ஆனா, நான் கத்துக்கொடுக்கிற முறையில் ஆறின பிறகும் அழகா உருண்டை பிடிக்கலாம். 20 நாள்கள் வரை கெட்டுப்போகாது. `கலகலா'ன்னா மைதாவும் முட்டையும்தான் பிரதானம்னு நினைக்கிறவங்களுக்கு, அவை இல்லாம கோதுமை மாவில் செய்யக் கத்துக்கொடுக்கறேன்!'' - பாரம்பர்யத்தோடு ஆரோக்கியத்தையும் சொல்லித் தருபவர், வீட்டளவில் செய்ய நினைப்பவர்களுக்கு மட்டுமன்றி, இதையே பிசினஸாகச் செய்ய நினைப்பவர் களுக்கும் வழிகாட்டுகிறார்.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

லட்டுக்கு கடலை மாவு, சர்க்கரை, நெய் உள்ளிட்ட பொருள்கள்; கலகலாவுக்கு கோதுமை மாவு, வெண்ணெய்; முறுக்குக்கு புழுங்கலரிசி; அதிரசத்துக்கு அரிசி மாவு, வெல்லம்; ராகி பக்கோடாவுக்கு கேழ்வரகு மாவு - இப்படி முக்கியமான பொருள்கள் தேவை. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. வீட்டுக்குச் செய்து பார்க்கலாம். அக்கம்பக்கத்தினருக்கு சாம்பிள் கொடுத்துப் பார்த்து ஆர்டர் பிடிக்கலாம்.

எதில் கவனம் தேவை?

மூலப்பொருள்களைத் தேர்வு செய்வதில் தொடங்கி, பதம் வரை ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் தேவை. சித்திரம் மட்டுமல்ல; சமையலும் கைப்பழக்கம்தான். அடிக்கடி செய்து பார்த்தால்தான் பதமும் சுவையும் சரியாக வரும். ஆர்டருக்கேற்ப அவ்வப்போது தயாரித்துக் கொடுப்பது முக்கியம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தயாரிக்கலாம்?

செய்முறை சரியாக வந்துவிட்டால் வேகம் தானாக வரும். ஒரு கிலோ பொருள்கள் உபயோகித்துச் செய்தால் 25 லட்டுகள் செய்யலாம். ஒருநாளைக்கு 20 கிலோ வரை செய்ய முடியும். நாளொன்றுக்கு ஒரு பலகாரம் என்று திட்டமிட்டுக்கொண்டால் சுலபமாக இருக்கும். செய்முறையைச் சரியாகப் பின்பற்றினால் யார் வேண்டுமானாலும் செய்துவிடலாம்.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

முதல் இலக்கு அக்கம்பக்கத்து வீடுகளாக இருக்கட்டும். அடுத்தகட்டமாக சின்னச் சின்ன கடைகளுக்கு சப்ளை செய்யலாம். அப்படியே பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், கல்யாண ஆர்டர் என வளரலாம். சீர்வரிசைக்கு ஆர்டர் பிடிக்கலாம்.

அதிரசம், முறுக்கு, கலகலா போன்றவற்றை கிலோ 400 ரூபாய்க்கும், லட்டை கிலோ 450 ரூபாய்க்கும் விற்கலாம். உணவுப்பொருள் தயாரிப்பில் எப்போதுமே 50 சதவிகித லாபம் நிச்சயம் கிடைக்கும்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் ஐந்து வகையான பாரம்பர்யப் பலகாரங்கள் செய்யக் கற்றுக்கொள்ளலாம். பயிற்சிக் கட்டணம் 1,000 ரூபாய்.

-சாஹா

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்