Published:Updated:

இந்தப் படத்தில் இருப்பவர்களை எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? #AI

இந்தப் படத்தில் இருப்பவர்களை எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? #AI

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் யாருமே உண்மையான மனிதர்கள் கிடையாது! பின்பு எப்படி இந்த போட்டோக்கள் உருவாயின?

இந்தப் படத்தில் இருப்பவர்களை எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? #AI

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் யாருமே உண்மையான மனிதர்கள் கிடையாது! பின்பு எப்படி இந்த போட்டோக்கள் உருவாயின?

Published:Updated:
இந்தப் படத்தில் இருப்பவர்களை எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? #AI

ன்றைய யுகத்தை, பின்னாளில் செயற்கை நுண்ணறிவு (AI) யுகம் என்றே பலரும் அழைக்க வாய்ப்புள்ளது. அந்தளவுக்கு அனைத்து துறைகளிலும் பங்காற்றிவருகிறது AI. இந்தத் தொழில்நுட்பத்தில் 10 வருடங்களுக்கு முன்பு வரை பெரும்பாலும் தியரியாகவே இருந்த பல விஷயங்கள் இன்று செயலுக்கு வந்துள்ளன. புகைப்படங்களை ஆராயும் `Image Processing’ தொழில்நுட்பமும் பல மைல்கற்களைத் தொட்டுள்ளன. `Facial recognition’ இன்று சாதாரண ஒன்றாகிவிட்டது. AI உதவியுடன் புகைப்படங்களை மாற்றியமைக்கும் முறைகளும் நல்ல ஒரு வளர்ச்சியை அடைந்துவிட்டன. உங்களது தற்போதைய புகைப்படத்தைக் கொடுத்தால் நீங்கள் சிறுவராக இருந்தால் எப்படி இருப்பீர்கள், மற்ற பாலினத்தவராக இருந்தால் எப்படி இருப்பீர்கள், வயதானால் எப்படி இருப்பீர்கள் என்பதை எல்லாம் காட்டும் Faceapp போன்ற மென்பொருள்கள் யாவும் இந்தத் தொழில்நுட்பம் போட்ட விதையின் விளைச்சல்கள்தான். இதில் சேர்த்திருக்கும் ஒன்றைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

ThisPersonDoesNotExist.com என்ற தளத்துக்குச் சென்றால் இந்த விளைச்சலை நீங்கள் காணலாம். அப்படி என்ன விஷயம் இருக்கிறது இந்த இணையதளத்தில் என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு முறை இந்தத் தளத்தை ரீலோடு செய்யும்போதும் ஒவ்வொருவரது புகைப்படம் கிடைக்கும். விஷயம் இதில் இல்லை. இந்தப் புகைப்படங்களில் இருக்கும் முகங்கள் நிஜத்தில் பார்க்கவே முடியாது என்கின்றனர். இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தானாக உருவாக்கப்படும் செயற்கை புகைப்படங்கள். இன்னும் சில பிசிறுகள் இருந்தாலும் நாள்கள் செல்லச் செல்ல இவற்றைச் செயற்கை நுண்ணறிவே திருத்திக்கொள்ளும் என்கின்றனர்.

இந்தத் தளத்தை பிலிப் வாங் என்னும் மென்பொருள் பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டின் இறுதியில் Nvidia வெளியிட்ட ஆராய்ச்சியைப் பயன்படுத்தி இதைச் செய்திருக்கிறார் அவர். இந்த அல்காரிதம் உண்மையான நபர்கள் பலரின் கோடிக்கணக்கான படங்களை எடுத்துக்கொள்ளும். பின்பு generative adversarial network (GAN) என்னும் நீயூரல் நெட்வொர்க் மூலம் புது முகங்கள் கொண்ட புகைப்படங்களை உருவாக்குகிறது. இதுதானே கற்றுக்கொள்ளும் (machine learning) வழிமுறையின் மூலம் இதைச் செய்கிறது. ``இது வெறும் ஆரம்பம்தான். வருங்காலத்தில் இந்தப் புகைப்படங்கள் தொடர்பான விஷயங்களில் செயற்கை நுண்ணறிவு எந்தளவு வளர்ச்சி அடையப்போகிறது என்று இன்னும் பலருக்குப் புரியவில்லை’’ என்கிறார் வாங்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Nvidia இந்த GAN-ஐ ஓபன் சோர்ஸாக (யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்) வெளியிட இதைக்கொண்டு மனித முகங்கள் மட்டுமல்லாமல் அனிமே கதாபாத்திரங்கள், எழுத்துவடிவங்கள் எனப் பலவற்றையும் முயற்சி செய்துள்ளனர். முடிவுகள் நன்றாகவே வந்துள்ளன.

இதனால் என்ன பயன்?

இந்த GAN தொழில்நுட்பம் மூலம் மெய்நிகர் உலகங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் முடியும். டிஜிட்டல் கலைஞர்களுக்கு கிரியேட்டிவான விஷயங்களில் பயனுள்ளதாக அமையலாம். இதைக்கொண்டு ஏற்கெனவே புதிய ஆர்ட் வொர்க்குகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரையப்பட்ட AI ஓவியம் ஒன்றுகூடச் சமீபத்தில் 3.16 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

AI ஓவியம்

Credit: twitter/DrBeef_ (Robbie Barrat)

பிரச்னைகள் என்ன?

இது ஆரம்பகட்டத்தில் இருந்தாலும் இதனால் பல பிரச்னைகள் வரலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஏற்கெனவே கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் போலிக் கணக்குகளுக்கு இந்தப் புகைப்படங்கள் இனி அடையாளம் ஆகும். இதனால் இந்தக் கணக்குகளின் நம்பகத் தன்மை அதிகரிக்கலாம். மேலும் `Deepfake’ என்ற தொழில்நுட்பம் இதை மையமாகக் கொண்டுதான் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன்மூலம் ஒருவரது முகத்தை அவரின் விருப்பம் இல்லாமலேயே ஒரு புகைப்படத்திலோ, வீடியோவிலோ இருக்கும் இன்னொரு நபரின் முகத்தின் மேல் பொருத்த முடியும். இன்னும் முழுதாக வளர்ச்சிபெற்றுவிடவில்லை என்றாலும். நாளடைவில் இதுவும் துல்லியமாக வேலையைச் செய்யத்தொடங்கும்போது வேறு மாதிரியான பிரச்னைகள்கூட வரலாம் எனக் கூறுகின்றனர். மேலும், நீதி வழங்கும் நேரங்களில் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை நம்ப முடியாமல்போகும். எப்படி வேண்டுமானாலும் அது மாற்றப்பட்டிருக்கலாம். மேலும், அரசியல் ரீதியான பரப்புரைகள் மற்றும் போலி செய்திகளைப் பரப்பவும் இது கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

குறிப்பாக, இந்த இணையதளம் பற்றி பார்க்க வேண்டும் என்றால், இதில் வரும் புகைப்படத்தில் இருப்பவர் இந்த உலகத்திலேயே இல்லை என்கிறார்கள். அதை எப்படி நிரூபிக்க முடியும். செயற்கை நுண்ணறிவு ஏன் பூமியில் இருக்கும் ஒருவரைப் போன்ற முகத்தை இதன்மூலம் தயாரிக்க முடியாது. இப்படி ஒருவர் இருக்கிறார் என்றுகூட நிரூபித்துவிட முடியும் இல்லையென்று நிரூபிப்பது கடினம். அது நாள்போக்கில்தான் தெரியவரும். அப்படி யாரைப்போன்றும் இருக்கக் கூடாதென்றால் இன்னொன்றைச் செய்யலாம். உலகில் இருக்கும் அனைவரின் புகைப்படங்களையும் இந்த அல்காரித்திடம் கொடுக்க வேண்டும். அது சாத்தியமில்லாத ஒன்று.  

2014-ல் AI உருவாக்கிய முகங்கள்

கடந்த நான்கு வருடங்களில் மட்டும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது இந்தத் தொழில்நுட்பம். இதற்கு அதிகரிக்கும் மக்கள் டேட்டாவும் தொழில்நுட்பங்கள் மேலும் மேம்பட்டுக்கொண்டிருப்பதும்தான். இன்று ஜாலியாக ஓர் இணையதளமாக வரும் இந்த தொழில்நுட்பம் நாளை உலகையே மாற்றியமைக்கக்கூடும். உஷாராக இருப்போம்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism