புள்ளிவிவரங்களுடன் அமைந்த ‘தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்’ கட்டுரை நிறைய அதிர்ச்சியைக் கொடுத்தது. மக்களுக்கான அரசு என்பவர்கள் மக்களுக்காகச் செய்யவேண்டிய அடிப்படை விஷயங்களைக்கூடச் செய்யாமல் தவிர்ப்பது அரசுக்கு இழுக்கே. 
 
- தங்கவேல் பழனிச்சாமி, பெரியகள்ளிவலசு. 

கடிதங்கள்: விகடனிசம்!

ரியான கோணத்தில் சுண்டினால் நாம் விருப்பப்படும் காய்ன் பாக்கெட் அடிக்கும் என்றுணர்த்திய கார்ட்டூன்... ஹாசிப் ஸ்பெஷல் டச்!

 - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பி
ரதமரைத் தீர்மானிக்கும் விஷயங்களாக நீங்கள் குறிப்பிட்டவை ஒவ்வொன்றும் நச். தேர்தல் முடிந்ததும் இதை மீண்டும் ஒருமுறை படித்து, எவையெவை நடந்திருக்கின்றன என்று பார்க்கப்போகிறேன்!

- என்.பாலகிருஷ்ணன், மதுரை

ந்தியாவின் முதல் பெண் மரைன் பைலட் ரேஷ்மாவின் பேட்டி உத்வேகமாகவும், உற்சாகமாகவும் இருந்தது.

- ஆர்.ஜே.கலியாணி, நெல்லை.

சௌ
ந்தர்யா விசாகனின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி... வாவ். அவரது வாழ்க்கையின் பாசிட்டிவ், வார்த்தைகளிலும் ஜொலித்தது.

- ராபா, காஞ்சி

கேந்திரனுக்கான அஞ்சலிப்பக்கங்கள் நெகிழ்ச்சி. திரைத்துறையில் அவர் பதித்த தடம், இன்னும் நீண்ட தூரத்துக்குப் பலரைப் பயணிக்க வைக்கும்.

- அ.குணசேகரன், புவனகிரி

தே
ர்தல் வந்துவிட்டாலே விகடனுக்கு குஷிதான். அது ஜோக்குகளில் பிரதிபலிக்கிறது!

- தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.

தேர்
தல் 2019 கட்டுரையில் அ.தி.மு.க குறித்த அலசல் அருமை. நிறை, குறை இரண்டையும் சரியாக அலசியிருந்தார் கட்டுரையாளர்.

- என்,ஃபாரூக், திருச்சி.

கே
ம் ஆஃப் த்ரோன்ஸ் கட்டுரையும் அதற்கான தலைப்பும்... அக்மார்க் விகடனிசம்!

- சூரியதாஸ், சிலட்டூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு