சிறப்புக்கட்டுரைகள்
Published:Updated:

மணமகளின் மலரும் நினைவுகள்

மணமகளின் மலரும் நினைவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மணமகளின் மலரும் நினைவுகள்

மணமகளின் மலரும் நினைவுகள்

மணமகளின் மலரும் நினைவுகள்

பெண்களின் வாழ்க்கையில் மணியடித்து லைட் எரிகிற காதலைவிடவும் `டும் டும்’ கொட்டுகிற திருமணம் மிகவும் ஸ்பெஷல். உற்றார், உறவினர் முன்னிலையில் தன் ஸ்வீட்மேனின் சுண்டுவிரலுடன் தன் சுண்டுவிரல் சேர்க்கிற அந்த ஐஸ்க்ரீம் தருணத்தை, வாழ்க்கையின் கடைசி நொடி வரை பெண்களால் மறக்கவே முடியாது. அந்த ‘பிக் டே’வில் நடந்த அத்தனை சம்பவங்களுமே பெண்களின் மனதில் ஃபிரேம் பை ஃபிரேமாக பதிந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் இருக்கிற பவ்யா அரவிந்தின் மனதிலும், நான்கு மாதங்களுக்கு முன் நடந்த திருமண நாள் அப்படித்தான் பதிந்திருக்கிறது. அவருடைய திருமணக் கனவுகள், அன்றைக்கு அனுபவித்த ஆனந்தங்கள், சந்தித்த சவால்கள், அவற்றைச் சமாளித்த விதம் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.

மணமகளின் மலரும் நினைவுகள்

“ஆக்சுவலி என் திருமணக் கனவுகள் கொஞ்சம்தான் நிறைவேறிச்சு. சிம்பிளா கோயிலில் வெச்சுக் கல்யாணம் பண்ணிக்கத்தான் எனக்கு ஆசை. கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டே நிக்கிற ரிசப்ஷன் எல்லாம் வைக்காம, ஒரு டின்னர் பார்ட்டி போதும்னு நினைச்சேன். இப்படிக் காசை மிச்சப்படுத்தி நானும் என் ஹஸ்பண்டும் உலகத்தையே சுத்தி வரணும்னு பிளான் வெச்சிருந்தேன். ஆனா, வாழ்க்கையில ஒரு தடவை நடக்கிற கல்யாணத்துல எல்லா சம்பிரதாயங்களும் நடக்கணும்னு அரவிந்த்துக்கு ஆசை. அதனால மெஹந்தி, சங்கீத், ரிசப்ஷன், முகூர்த்தம்னு ‘மூணு நாள்கள் கல்யாணம்’ பண்ணினோம். என் அம்மாகூட, ‘சிம்பிள் வெடிங் சிம்பிள் வெடிங்னு சொல்லிட்டிருந்த... இப்ப என்னாச்சு’ன்னு கேலி பண்ணினாங்க’’ என்று வாய்கொள்ளாத சிரிப்புடன் ஆரம்பிக்கிறார் பவ்யா.

மணமகளின் மலரும் நினைவுகள்

‘`மெஹந்தி பங்ஷனை வீட்டிலேயே வெச்சுக்கிட்டோம். `சங்கீத்’தை சொந்தக்காரங்க, ஃபிரெண்ட்ஸ்னு ஒரே கும்மாளமா டான்ஸ் ஆடி செலிபிரேட் செஞ்சோம். நான் இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துக்கிட்டிருந்தப்போ ஆபீஸ் டான்ஸ் டீமில் நானும் ஒரு மெம்பர். அந்த டீமோட கொரியோகிராபர், ‘உன் சங்கீத்துக்கு நான்தான் உனக்கு டான்ஸ் சொல்லித் தருவேன்’னு அடிக்கடி சொல்லிட்டேயிருப்பாங்க. கடைசியில அதுதான் நடந்துச்சு. ஒரு வாரம் நானும் அரவிந்த்தும் டான்ஸ் பிராக்டீஸுக்குப் போனோம். ஆக, எங்க சங்கீத் செம தூளா நடந்துச்சு!

மணமகளின் மலரும் நினைவுகள்

மேரேஜ் பத்தி எங்கப்பா முதன்முறை என்கிட்டே பேசும்போதே, ‘எனக்கு விடியற்காலை முகூர்த்தம் வேணாம்ப்பா... லேட் முகூர்த்தம்தான் வேணும்’னு சொல்லியிருந்தேன். ‘அதெல்லாம் நம்ம கையில் இல்லடா’ன்னு சொல்லி அப்பா சிரிப்பாரு. கடைசியில நான் ஆசைப்பட்ட மாதிரியே 10.30 - 12 முகூர்த்தம்தான் வெச்சாங்க. அதனால நல்லா தூங்கி ரிலாக்ஸ்டா ஆறரை மணிக்கு எழுந்திருச்சு நிதானமா மேக்கப் பண்ணி ரெடியானேன். டென்ஷனில்லாம கல்யாணம் பண்ணிக்கணும்னா லேட் முகூர்த்தம் பெஸ்ட்டுங்கிறது என் அனுபவம்!

மணமகளின் மலரும் நினைவுகள்

என் குடும்பத்துலேயும் சரி, அரவிந்த் குடும்பத்துலேயும் சரி... கண்ணூஞ்சல், தாய்மாமா தோளில் உட்கார்ந்துக்கிட்டு மாலை மாத்துற வழக்கமெல்லாம் கிடையாது. ஆனா, நான் ஆசைப்பட்டேன் என்கிறதுக்காக அந்த சம்பிரதாயங்களையும்  என் பேரன்ட்ஸ் செஞ்சாங்க. அப்புறம் எனக்கு செண்டை மேளம் ரொம்பப் பிடிக்கும். செண்டை மேளம் வாசிக்க ஆரம்பிச்சவுடன் நான் லைட்டா ரெண்டு ஸ்டெப் வெச்சேன். என் அம்மா, ‘கல்யாணப் பொண்ணா அடக்கமா நடந்துக்கோ’னு காதுக்குள் முணுமுணுக்க, என் மாமியார், ‘ நீ ஆடு பவ்யா’ன்னு சொல்லிட்டாங்க. அப்புறமென்ன, பெண் அழைப்பில் நானும் என் ஃபிரெண்ட்ஸும் செண்டை மேளத்துக்கு டான்ஸ் ஆடிட்டே வந்தோம்னா பார்த்துக்கோங்க!’’ என்று கலகலக்கிறவர், வருங்கால மணமகள்களுக்கு டிப்ஸ் வழங்கவும் மறக்கவில்லை.

மணமகளின் மலரும் நினைவுகள்

•  முகூர்த்தத்துக்குப் பட்டுப்புடவைக் கட்டும்போது ஷேப்பா தெரியுற அளவுக்கு உடலை ஃபிட்டா வெச்சுக்கணும். அப்போதான் கல்யாணத்திலேயும் கல்யாண ஆல்பத்திலேயும் ஹீரோயினா தெரிவோம்!

• பொதுவாகவே கல்யாணம்னா நிறைய கருத்து வேறுபாடுகள் வரும். லவ் கம் அரேஞ்டு மேரேஜ்னா அது அதிகமாகலாம். அதுபோன்ற சூழல்களில் `இதுவும் கடந்து போகும்’னு மணமக்கள் நினைச்சுக்கணும். கோபம் வந்தாலும் அந்த நிமிஷத்தை அமைதியா கடந்துடுங்க.

• கல்யாணத்துக்காக நீங்க பண்ணின பிளான்ஸ், உங்க எதிர்பார்ப்பு எல்லாத்தையும் திருமண நாள் காலையில் மறந்துடுங்க. என்ன நடக்குதோ அதை அப்படியே ஏத்துக்கோங்க. நீங்க வொயிட் அண்டு பிங்க் மாலைக்கு ஆர்டர் பண்ணியிருப்பீங்க. ஆனா, வொயிட் அண்டு ரெட்தான் கிடைச்சிருக்கும். பதற்றப்படாதீங்க... நீங்க பிளான் பண்ணது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். என்ன நடக்குதோ அது மட்டும்தான் மற்றவர்களுக்குத் தெரியும். ஸோ, அந்த ஒரு நாளை அப்படியே அதன் போக்கிலேயே விட்டு என்ஜாய் பண்ணுங்க. உங்க திருமண ஆல்பத்தை புரட்டும்போதெல்லாம் பாசிட்டிவ் மலரும் நினைவுகள் வரணும்னா இதுதான் பெஸ்ட் வழி!

- ஆ.சாந்தி கணேஷ்