திருமணத்தின்போது கூந்தலை நடுவகிடு எடுத்து, நெற்றிச்சுட்டி அணிந்து, குஞ்சம்வைத்து அலங்கரித்த பின்னல் முழுக்க பூச்சூடி... இதுதான் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மணமகளின் ஹேர்ஸ்டைலாக இருந்தது. ஆனால், இப்போது ஹை பன் (high bun), பிஷ்டெயில் (fishtail), பிரெஞ்சு பிரைடு (French braid), மெஸ்ஸி பன் (messy bun) என மணப்பெண்ணின் ஹேர்ஸ்டைல்கள் நவீனமாகிவருகின்றன. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் சலூன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் சங்கீத், முகூர்த்தம், ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெரைட்டியான, அதேநேரம் மணப்பெண்ணின் முக அமைப்புக்கு ஏற்ப ஹேர்ஸ்டைல்கள் செய்து வாடிக்கையாளர்களின் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர், சென்னையைச் சேர்ந்த ஹேர்ஸ்டைலிஸ்ட் விஜயராகவன். இவர் ராகவன் என்று அழைக்கப்படுகிறார். 18 ஆண்டுகளாக ஹேர்ஸ்டைலிங் செய்து வரும் ராகவன், இந்தத் துறைக்கு வந்தது பற்றியும், முக அமைப்புகளுக்கு ஏற்ற மற்றும் ட்ரெண்டில் உள்ள ஹேர்ஸ்டைல்கள் பற்றிய தகவல்களையும் பகிர்கிறார்.

‘பூவே உனக்காக’ சங்கீதா மேடம் தந்த வாய்ப்பு!

எனக்குச் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். பள்ளிப் படிப்பு முடித்ததும் விக் தயாரிக்கும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு விக் ஆர்டர் கொடுக்க வரும் நிறைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுகளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் அவர்களிடம் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்தேன். அப்போதுதான் ‘பூவே உனக்காக’ படத்தின் கதாநாயகி சங்கீதா மேடத்துக்கு அசிஸ்டென்ட் ஹேர்ஸ்டைலிஸ்ட்டாகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து சில ஹேர்ஸ்டைலிஸ்ட்டுகளுக்கு உதவியாளராகப் பணிபுரிந்ததன் மூலம் ஹேர்ஸ்டைலிங்கில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். சினி ஹேர்ஸ்டைலிஸ்ட் என்பதால் ட்ரெண்டுக்கு ஏற்ப அப்டேட் செய்துகொள்ள முடிந்தது. மூன்று வருடப் பயிற்சிக்குப் பிறகு, முழுமையான ஹேர்ஸ்டைலிஸ்ட்டாகச் செயல்பட ஆரம்பித்தேன். என்னுடைய நுணுக்கமான ஸ்டைலிங் பிடித்துப்போக த்ரிஷா, நயன்தாரா, எமி ஜாக்சன், ஷார்மி, ரேணுகா மேனன் உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு ஹேர்ஸ்டைலிஸ்ட்டாகப் பணிபுரியும் வாய்ப்பைத் தந்தனர். 10 வருடங்கள் சினி ஹேர்ஸ்டைலிஸ்ட்டாக வேலை பார்த்தேன். தொழிலில் ஒரு மாற்றம் வேண்டும் எனத் தோன்றியது.

பிரைடல் ஹேர்ஸ்டைலிங்கில் என்ட்ரி!

மாற்றம் தேவைப்பட்டதால் பிரைடல் ஹேர்ஸ்டைலிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பொதுவாக மணப்பெண் என்றாலே, ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல் தான் வழக்கத்தில் இருந்தது. ஆனால், சினிமாவில் எனக்குக் கிடைத்த அனுபவம் மூலம், மணமகள்களுக்குப் புதிது புதிதான ஹேர்ஸ்டைல்கள் செய்து அசத்தினேன். நியூ லுக் வேண்டும் என ஆசைப்பட்ட வாடிக்கையாளர்கள் என்னைத் தேடிவர ஆரம்பித்தனர். மணப்பெண்ணின் முக அமைப்புக்கு என்னென்ன ஸ்டைல்கள் செட் ஆகும் என்பதை முதலில் விளக்கிவிடுவேன். பின்னர், அவர்கள் அணியும் ஆடை, என்ன நிகழ்ச்சி, அவர்கள் தேர்வு செய்த மேக்கப், அவர்களின் பாரம்பர்யம் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு ஹேர்ஸ்டைலைத் தேர்வு செய்வேன்’’ என்ற ராகவன் தற்போது ட்ரெண்டில் உள்ள பிரைடல் ஹேர்ஸ்டைல்கள் பற்றி விவரிக்கிறார்.

சங்கீத்

“நீங்கள் அணியப்போகும் ஆடை லெஹங்கா எனில் ஃப்ரென்ட் பஃப் வித் கர்லி ஃப்ரீ ஹேர் (front puff with curly free hair), சைடு ஃபிஷ்டெயில் பிரைடு (side fishtail braid) போன்றவை பொருத்தமாக இருக்கும். உங்கள் சாய்ஸ் கவுன் அல்லது சராரா எனில் டவுஸில்டு வேவி சைடு போனிடெயில் (tousled wavy side ponytail) பொருத்தமாக இருக்கும். டிசைனர் புடவைகள் எனில் டிவிஸ்டட் பன் (twisted bun), ட்ரெடிஷனல் பின்னலிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரைடு லோ சைடு பன் (braid low side bun with flowers) போன்ற ஹேர்ஸ்டைல்கள் நீட் லுக் கொடுக்கும். நீங்கள் அனார்க்கலி ஆடையைத் தேர்வு செய்கிறீர்கள் எனில் டவுஸில்டு வேவி சைடு போனிடெயில் (tousled wavy side ponytail), மெஸ்ஸி பன் (messy bun) போன்ற ஹேர்ஸ்டைல்களைத் தேர்வு செய்யலாம்.

மெஹந்தி

மெஹந்தி நிகழ்ச்சிக்கு ட்ரெடிஷனலான பின்னல்கள் பெஸ்ட் சாய்ஸ். இதனால் அடிக்கடி கூந்தலைச் சரிசெய்ய வேண்டிய பிரச்னை இருக்காது. எனினும் டிசைனர் ஆடையில் தனித்துத் தெரிய விரும்பும் பெண்கள் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் களைத் தேர்வு செய்யலாம். உங்கள் ஆடை லெஹங்கா அல்லது சிம்பிளான சல்வார் எனில் சைடு ஃபிஷ்டெயில் பிரைடு (side fishtail braid), டைட் ஃபிஷ்டெயில் பிரைடு (tight fishtail braid) போன்ற ஸ்டைல்களைத் தேர்வுசெய்ய, ட்ரெண்டி லுக் கிடைக்கும். அனார்கலி, சராரா போன்ற ஆடை எனில் மெஸ்ஸி சைடு பன் (messy side bun), லோ பன் (low bun) போன்ற ஹேர்ஸ்டைல்களைத் தேர்வு செய்யலாம். போஹோ (boho) லுக் விரும்பும் பெண்களுக்கு ஃப்ரீ ஹேர் (free hair) பெஸ்ட் சாய்ஸ்.

முகூர்த்தம்

முகூர்த்தத்துக்கு ட்ரெடிஷனல் டச் கொண்ட ஹேர்ஸ்டைல்கள்தான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். கூந்தலின் நடுவில் வகிடு எடுத்து ஃப்ரென்ட் அல்லது சைட் பஃப் உடன் கூடிய பின்னல்கள் இட்டு வேணி (ஜடை மாலை) அலங்காரம் செய்து கொள்ளலாம். அல்லது பூக்கள் சுற்றிய ஹை பன் (high bun) ஹேர்ஸ்டைல் பொருத்தமாக இருக்கும்.

ரிசப்ஷன்

உங்களின் ரிசப்ஷன் ஆடை கவுன் எனில் டிவிஸ்டட் லோ பன் (twisted low bun), ப்ரென்ட் பஃப் வித் ஃப்ரீ வேவி ஹேர்ஸ்டைலைத் தேர்வுசெய்யலாம். ட்ரெடிஷனல் டச் புடவைகள் எனில் நடுவகிடு எடுத்து, பூக்களுடன் கூடிய லோ பன் (mid partition low bun with flower) ஹேர்ஸ்டைலும், டிசைனர் புடவை எனில் வேவி பஃப் வித் சைடு டிவிஸ்ட் (wavy puff with side twist) ஹேர்ஸ்டைலும் பொருத்தமாக இருக்கும்” என்றவர் முக அமைப்புக்கு ஏற்ப ஹேர்ஸ்டைல் தேர்வு செய்வது பற்றிக் கூறுகிறார்.

முக அமைப்பும் ஹேர்ஸ்டைலும்!

‘`வட்டவடிவ முகம் எனில் நடுவகிடு (middle partition) மற்றும் ஃப்ரென்ட் பஃப் பொருத்தமாக இருக்கும். இவர்கள் முழுவதுமான ஃப்ரீ ஹேர்ஸ்டைல் மற்றும் இறுக்கமான பின்னலைத் தவிர்ப்பது நல்லது. ஹை பன், சைடு ட்விஸ்ட் செய்யப்பட்ட பன் ஹேர் ஸ்டைல் இவர்களைக் கூடுதல் அழகில் காட்டும். நீள் வடிவ முகம் எனில் சைடு வகிடு எடுத்து ஃபிஷ் டெயில் (side partition fishtail) போட்டுக்கொள்ளலாம்’’ என்ற ராகவன், இந்தத் துறையில் இருக்கும் சவால்கள் பற்றிச் சொன்னார்.

குறைந்த நேரத்தில் சூப்பர் ஹேர்ஸ்டைல்!

“மணப்பெண்ணின் முக அமைப்பு, அவர் என்ன மாதிரியான ஸ்டைலை விரும்புகிறார் என்பதை அறிந்து அதற்கேற்ற அக்ஸசரீஸ் என்னென்ன வேண்டும் என்பதை முன்பே சொல்லிவிடுவேன். இதனால் கடைசி நேரப் பதற்றங்களைத் தவிர்க்க முடியும். சில பெண்கள் தங்களுக்கு இந்த ஹேர்ஸ்டைல்தான் வேண்டும் என உறுதியாக இருப்பார்கள். அது அவர்களுக்குப் பொருந்தாது என்பதைப் புரியவைப்பதே மிகப் பெரிய டாஸ்க்காக இருக்கும். திருமணப் பரபரப்பில் ஹேர்ஸ்டைல் செய்யக் குறைந்த அவகாசமே கிடைக்கும். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு, ஒரே நாளில் வெவ்வேறு ஸ்டைல் செய்யும்போது ஏற்கெனவே செட் செய்த ஹேரை இன்னொரு ஸ்டைலுக்கு மாற்றுவதும் கொஞ்சம் சிரமமாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சமாளிப்பதில்தான் ஹேர்ஸ்டைலிஸ்ட்டின் திறமை இருக்கிறது. 18 வருடங்களாக இதில் கற்றலைத் தொடந்துகொண்டே வருவதுதான் நான் இன்னும் ஃபீல்ட் அவுட் ஆகாமல் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம்” என நிறைவாக முடித்தார் ராகவன்.

சு.சூர்யா கோமதி

டிப்ஸ் டிப்ஸ்!

* உங்களுடையது மிக வறண்ட கூந்தல் எனில் திருமணத்துக்கு முன் ஒரு முறை ஸ்மூத்தனிங் செய்து கொள்ளலாம். வறண்ட கூந்தல் உடையவர்கள் ஃப்ரீ ஹேர், மெஸ்ஸி பன் போன்ற ஹேர்ஸ்டைல்களைத் தவிர்க்கலாம்.

* சில்க்கி ஹேர் எனில் ஹேர்ஸ்டைல் செய்வதற்கு முன் அயனிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். சில்க்கி ஹேருக்கு எனக் கடைகளில் கிடைக்கும் க்ளாஸ் பவுடர் (glass powder) வாங்கி, ஸ்கால்பில் படாமல் ஒவ்வொரு லேயரிலும் அப்ளை செய்து, அதன் பின் ஹேர்ஸ்டைலிங் செய்துகொள்ளலாம். அல்லது புளோ டிரை செய்துகொள்ளலாம். ஹேவி ஹேர் ஸ்டைல், பிரெஞ்சு பிரைடு போன்றவை பொருத்தமான தேர்வாக இருக்கும். சில்கி ஹேர் உடையவர்கள் இறுக்கமான பின்னல்களைத் தவிர்க்க வேண்டும்.

* உங்களுடையது நார்மல் ஹேர் எனில் நீங்கள் எல்லாவிதமான ஹேர் ஸ்டைலையும் முயற்சி செய்யலாம் .

* நீங்கள் முன்பே ஹேர் கலரிங் செய்திருந்தால் உங்கள் கலரிங்க்கு தகுந்த ஹேர்ஸ்டைல்களைத் தேர்வு செய்வது அவசியம்.

* தரமான ஹேர் ஸ்பிரே, ஜெல் வகைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் ஹேர்ஸ்டைலிங் செய்த பின், தூங்கச் செல்வதற்கு முன் ஹேர் வாஷ் செய்வது அவசியம்.

* ஹேர்ஸ்டைலிங் செய்த உங்கள் கூந்தலைக் கைகளைப் பயன்படுத்தி கலைத்த பின்பே, சீப்பைப் பயன்படுத்த வேண்டும்.

* ஹேர் ஜெல், ஸ்பிரே போன்றவற்றைப் பயன்படுத்தும்போது அவை ஸ்கால்ப்பில்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* ஆடைக்கு மேட்ச்சான ஹேர் கலரிங் விரும்பும் பெண்கள், எக்ஸ்டன்ஷன் பயன்படுத்திக்கொள்ளலாம். நிரந்தர கலரிங் செய்திருப்பவர்கள் அதற்குரிய ஷாம்புகளைப் பயன்படுத்துவது அவசியம்.

* உங்களைத் தனித்துவமாகக் காட்டும் ஹேர்ஸ்டைல்களைத் தேர்வுசெய்தால் நீட் லுக்கில் அசரடிக்கலாம்.