Published:Updated:

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!
பிரீமியம் ஸ்டோரி
கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

ஒரு ஏக்கர் கரும்பு... ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சம்!மகசூல்

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

ஒரு ஏக்கர் கரும்பு... ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சம்!மகசூல்

Published:Updated:
கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!
பிரீமியம் ஸ்டோரி
கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

துரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், தர்மபுரி புளி, கிணத்துக்கடவு தக்காளி, சோழவந்தான் வெற்றிலை... என்று ஒவ்வோர் ஊருக்கும் ஒரு விவசாயம் சார்ந்த பெருமை இருக்கும். அந்த வரிசையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி எனும் ஊருக்குப் பெருமை சேர்த்து வருகிறது, நாட்டுச்சர்க்கரை. இப்பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில்... பாகைச் சுத்திகரிப்பதற்காகவும் நிறத்துக்காகவும் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுவதுண்டு. அதே நேரத்தில், எந்த ரசாயனக் கலப்புமின்றி இயற்கை முறையில் நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யும் இயற்கை விவசாயிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான், கவுந்தப்பாடி அடுத்துள்ள பட்டைக்காளி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிராமச்சந்திரன். கரும்பு வயலில் களத்து மேட்டிலேயே ஆலை அமைத்து நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்து வருகிறார், ஹரிராமச்சந்திரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

ஒரு முற்பகல் நேரத்தில் ஹரிராமச்சந்திரனின் வயலுக்குச் சென்றோம். கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த கரும்புகளை எந்திரத்தில் கொடுத்துச் சாறு பிழியும் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. 

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

கரும்புச்சாற்றைக் காய்ச்சும் பணி இன்னொரு புறம் நடந்து கொண்டிருந்தது. இப்பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஹரிராமச்சந்திரனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.“எனக்குப் பூர்வீகம் இந்த ஊருதான். பரம்பரையான விவசாயக்குடும்பம். 6 ஏக்கர் நெலம் இருக்கு. கீழ்பவானி வாய்க்கால் பாசனம்தான் பிரதானம். இதோடு கிணத்துப்பாசனமும் உண்டு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்க பகுதியில கரும்புச் சாகுபடி நடக்குது. இந்தப்பகுதியில கரும்பை வெட்டிச் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பமாட்டாங்க. கரும்பு வயல்லயே நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்றதுதான் எங்க பகுதியோட சிறப்பு. பழநியில் தயாரிக்கப்படுற பஞ்சாமிர்தம் சுவையா இருக்குறதுக்குக் காரணம், கவுந்தப்பாடி சர்க்கரையும், விருப்பாச்சி வாழைப்பழமும்தான். பஞ்சாமிர்தம் உற்பத்தி செய்றவங்க எங்க பகுதியிலதான் ரொம்ப வருஷமா சர்க்கரை வாங்குறாங்க. 

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

எங்க பாட்டன், பூட்டன் காலத்துல பாரம்பர்ய முறையில்தான் கரும்புச் சாகுபடி செஞ்சுருக்காங்க. பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான், ரசாயன உரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் மாதிரியான இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்னால, பலபேர் இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டுருக்காங்க.

அந்த மாதிரி இயற்கை இடுபொருள்களை மட்டும் பயன்படுத்திக் கரும்பு உற்பத்தி செய்ற விவசாயிகளும் எங்க பகுதியில நிறைய பேர் இருக்காங்க. நானும் அஞ்சு வருஷமா இயற்கை முறையிலதான் கரும்புச் சாகுபடி செஞ்சு நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்றேன். இயற்கை அங்காடிகள் வெச்சுருக்குறவங்க என்கிட்ட வந்து நாட்டுச்சர்க்கரை வாங்கிட்டுப் போறாங்க” என்ற ஹரிராமச்சந்திரன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

“ஆடி-ஆவணி மாதங்கள்ல ஒருமுறை, தை-மாசி மாதங்கள்ல ஒருமுறைனு சுழற்சி முறையில கரும்புச் சாகுபடி செய்றேன். ஒரு ஏக்கர்ல இருந்து 40 டன் அளவுக்குக் குறையாம கரும்பு கிடைக்கும். இங்க விளையுற அவ்வளவு கரும்பையும் மதிப்புக் கூட்டி நாட்டுச் சர்க்கரையாத்தான் விற்பனை செய்றேன். 800 கிலோ கரும்பிலிருந்து 500 லிட்டர் சாறு எடுக்கலாம். 500 லிட்டர் சாறு மூலம் 100 கிலோ சர்க்கரை கிடைக்கும். அந்த வகையில ஒரு ஏக்கர் நிலத்துல கிடைக்கிற 40 டன் கரும்பு மூலமா 5 டன் அளவுக்கு நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்யலாம். கரும்பு அரைச்சதுக்குப் பிறகு கிடைக்கிற சக்கையைப் பாகைக் காய்ச்ச எரிபொருளாகப் பயன்படுத்திடுவோம். கரும்புப் பாலைக் காய்ச்சுறப்போ, அழுக்கு கசடுகளை நீக்குறதுக்காகச் சோடா உப்பு போடுவாங்க. நான், அதைப் பயன்படுத்தாம பொடியாக்குன கல் சுண்ணாம்பைத்தான் பயன்படுத்துறேன்.

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

தற்சமயம், ஒரு கிலோ நாட்டுச்சர்க்கரை 80 ரூபாய் அளவுக்கு விற்பனையாகுது. அந்த வகையில ஒரு ஏக்கர் கரும்புச் சாகுபடி மூலமா 4,00,000 ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. அதுல 1,60,000 ரூபாய் செலவு போக, மீதி 2,40,000 ரூபாய் லாபமா நிக்கும்” என்றார், ஹரிராமச்சந்திரன்.

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!


நிறைவாகப் பேசிய ஹரிராமச்சந்திரன், “இயற்கை விவசாயத்தில் விளைஞ்ச கரும்புல இருந்து தயாரிக்கிற நாட்டுச்சர்க்கரைக்கும் ரசாயன உரம் போட்டு விளைஞ்ச கரும்புல இருந்து தயாரிக்கிற நாட்டுச்சர்க்கரைக்கும் சந்தையில் ஒரே விலைதான் கிடைக்குது. உழவர் சந்தைகள், தினசரி மார்க்கெட்கள்ல இயற்கை விளைபொருள்களுக்காகத் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தா விற்பனை செய்யச் சுலபமா இருக்கும். எங்களுக்கும் கூடுதலா லாபம் கிடைக்கும். அரசாங்கம் அதுக்கு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

தொடர்புக்கு ஹரிராமச்சந்திரன், செல்போன்: 99427 56497.

ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

கலக்கும் கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை!

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் கரும்புச் சாகுபடி செய்யும் முறை குறித்து ஹரிராமச்சந்திரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்றாக உழுது, 5 டன் ஆட்டு எரு, 5 டன் தொழுஉரம் ஆகியவற்றைக் கொட்டிப் பரப்பி, ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் பார்களை அமைத்து, அவற்றில் அரையடி இடைவெளியில் விதைக்கரணைகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 7,000 விதைக்கரணைகள் தேவைப்படும். கடந்த போகத்தில் விளைந்த கரும்பிலிருந்து விதைக்கரணைகளை வெட்டி அவற்றை 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலில் விதைநேர்த்தி செய்து ஈர நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் எனத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 45 மற்றும் 65-ஆம் நாள்களில் களை எடுக்க வேண்டும். 100 முதல் 120-ஆம் நாளுக்குள் களை எடுத்து வேர்ப்பகுதியில் மண் அணைத்து விட வேண்டும். மண் அணைத்தால்தான் கரும்பு சாயாமல் நேராக வளரும். நடவு செய்த 5-ஆம் மாதத்தில் தோகைகளை உரித்து வயலில் மூடாக்காகப் பரப்ப வேண்டும்.

நடவு செய்ததிலிருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் அமுதக்கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். வாரம் ஒருமுறை 180 லிட்டர் வேஸ்ட் டீ கம்போஸரைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். மாதம் ஒருமுறை 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வர வேண்டும். குருத்துப்புழு தாக்குதல் தென்பட்டால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம். நடவு செய்த 6-ஆம் மாதத்திலிருந்து 7-ஆம் மாதம்வரை ஒட்டுண்ணி அட்டைகளை வயலில் வைத்தால் இடைக்கணுப்புழுக்கள் தாக்குதல் இருக்காது. 10-ஆம் மாதத்துக்கு மேல் அறுவடை செய்யலாம்.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism