Published:Updated:

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!
பிரீமியம் ஸ்டோரி
News
பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

டாக்டர் ஜெ.பாஸ்கரன், ஓவியங்கள்: வேலு

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!
பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

டிபன் வகைகளிலேயே பூரிக்கு தனி இடம் உண்டு. தங்கப் பழுப்பு நிறத்தில் ஆவி பறக்க `புசு... புசு’வென உப்பிய பூரியும், உடன்வரும் மசாலாவோ, சென்னாவோ கண்களுக்கும் நாவுக்கும் நல்ல விருந்துதான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

`பூரி’ என்கிற சொல், சம்ஸ்கிருதத்தில் `பூரிகா’ அல்லது `பூரா’ (filled) என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம் என்கிறது கூகுள். இருந்தாலும், தமிழ்நாட்டில் பூரிக்கு இன்னும் மவுசு குறையாமல் இருப்பது, பூரியின் மகத்துவத்தையும், வடக்கு - தெற்கு பேதமில்லாமல் எல்லா நாவுகளுக்கும் இசைவாக இருப்பதையும் காட்டுகிறது.

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

தெற்காசிய நாடுகளில் அறிமுகமானதே பூரி.நேபாள், பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் - குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படுவதாகப் பூரி விற்பன்னர்கள் `பூரி’க்கிறார்கள்!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

கோதுமை மாவில் செய்யும் பூரிக்கே நம் ஓட்டு. மைதாவில் செய்யப்படும் பூரியை, சில நேரங்களில் ரப்பர்போல இழுக்க வேண்டியிருக்கும். கையின் வலுவையும் பற்கள் மற்றும் தாடைத் தசைகளின் பலத்தையும் சோதிக்கும் இந்த வகை பூரிகளை, அடிக்கடி நம்மை இம்சிக்கும் விருந்தினர்களுக்கு ஸ்பெஷலாகப் பரிமாறலாம். பாத ரட்சைகளுக்கு `சோல்’ தைக்க இந்த பூரி உதவுமா என்கிற ஆராய்ச்சி நடந்துவருவதாக விவரமறிந்த பூரி வட்டாரங்களில் கேள்வி!

நல்ல கோதுமை மாவில் அளவான உப்புடன் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரிட்டுப் பிசைந்து, சிறிய வட்ட வட்ட பூரிகள் இடும் அளவுக்குச் சிறிய மாவு உருண்டைகள் தயார் செய்வது ஒரு கலை. `கொஞ்சம் வெண்ணெயோ, தேங்காய்ப்பாலோ சேர்த்தால், பூரி சாஃப்டாக உப்பிக்கொண்டுவரும்’ என பத்திரிகை குறிப்பு ஒன்று சொல்கிறது. ஒட்டாமல் இருக்க, கொஞ்சம் உதிரி மாவில் புரட்டி, அப்பளம் இடுவதைப்போல இடுவது, தேர்ந்த இன்ஜினீயர் வேலை. வட்டம், கோணல்மாணலாக ஒரு ஷேப் இன்றி வருவது நல்ல பூரிக்கு அழகல்ல.

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

எல்லா நகைச்சுவை எழுத்தாளர்களுக்கும், `ஜோக்’கர்களுக்கும், கார்டூனிஸ்ட்களுக்கும் பிடித்தது `பூரிக்கட்டை’. அவர்கள் கற்பனை மனைவிகள், கணவனைத் தாக்கும் ஆயுதம் இதுதான்! (நிஜ வாழ்க்கையில், மனைவிக்கு இது மிகவும் அற்பமான ஆயுதம்! `இப்படிச் சொன்ன வாய்க்கு `பூரி’ கிடைக்காது’ என்கிறார்கள் கையில் தோசைத் திருப்பியுடன்!)

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

மூன்று இன்ச் விட்டத்திலிருந்து ஆறு இன்ச் விட்டம் வரை உள்ள சைஸுகளில் பூரிகள் (ஹோட்டலின் சைஸுக்கும் இதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை) இரண்டு அல்லது மூன்று வீதம் பரிமாறப்படுகின்றன. சிறியதோ, பெரியதோ, உப்பாத பூரி, ஆறிய பூரி, எண்ணெய் அதிகம் உறிஞ்சிய பூரி... இவை யாவும் நிராகரிக்கப்படும். சாஃப்டாகவும் க்ரிஸ்பாகவும் சூடாகவும் உப்பலாகவும் உள்ள பொன்னிறப் பூரிகளுக்கே டிமாண்டு அதிகம்.

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

காலையிலோ, மாலையிலோ டிபனுக்கும், மதிய, இரவு வேளையில் உணவுக்கு முன் ஸ்டார்டர்போலவும் எல்லா வேளைக்குமான உணவு, பூரியே!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

பூரி கிழங்கு, பூரி மசால் என்றே வழங்கப்படுவதால், பூரியின் பூர்வாஸ்ரம ஜோடி, உருளைக்கிழங்கு மசால்தான்! இந்த மசால், கொஞ்சம் கெட்டியாகவோ, சிறிது ஓடும்படியாகவோ இருக்கலாம். சின்ன வயதில் சிதம்பரம் கீழ சந்நிதியில் இருந்த நச்சு ஐயர் க்ளப்பில் ஓட ஓட ஒரு பூரி மசால். உருளை நன்கு கரைந்து, இஞ்சி, பச்சை மிளகாயுடன் சேர்ந்து, மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில்  இருக்கும் (குழிக்கரண்டியில் எடுத்து `ஊற்று’வார்கள்). பூரிக்கும் இந்த மசாலுக்கும் இணையான பூரி மசாலை வேறெங்கும் நான் இன்றுவரை ருசித்ததில்லை!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

பூரியுடன் குருமா, கடைந்த பருப்பு, சென்னா மசாலா (வெள்ளை கொண்டைக்கடலை), எல்லாம் அவ்வப்போது ஜோடி சேர்ந்துகொள்ளும். தி.நகர் சாந்தா பவனில் உருளைக்கிழங்கில் செய்யும் `சப்ஜி’ - கொஞ்சம் பழுப்பு நிறத்தில், ஓரிரண்டு உருளைத் துண்டுகளுடன், ஓடுகின்ற பதத்தில், மோரில் செய்யப்படும் துணை பதார்த்தம்! `சாகு’, சப்பாத்திக்கேயானாலும் சில வேளைகளில் பூரியுடனும் சேரும்!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

சட்னியுடனும் வெங்காய சாம்பாருடனும் சாப்பிடுவது, பூரிக்குச் செய்யப்படும் துரோகமாகவே கருதப்படும். இருந்தாலும் பூரியின் நல்ல குணம், இவற்றுடனும் இணைந்து வாய்க்கும் வயிற்றுக்கும் நல்லதைச் செய்யும். `கெட்சப்’, சாஸ் தொட்டு பூரி சாப்பிடுபவர்களை, பசித்த புலிகூட சீண்டாது. குழந்தைகள் மட்டும் சர்க்கரையுடன் பூரி சாப்பிடலாம்.

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

பொதுவாகவே, பூரிக்கு சைவ சைடிஷ்தான். அதுவும் ஆந்திரா பக்கங்களில் பூரிக்கு அசைவம் கிடையாது. ஹவுஸ் சர்ஜன் மெஸ்ஸில், பூரிக்கு `புல்ஸ் ஐ’ (half boiled egg) தொட்டுச் சாப்பிடும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்யலாம்!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

பூரியுடன் கேசரி, அல்வா, பாதாம்கீர் சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் சிலருக்கு உண்டு. நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் ஏலம், பாதாம், முந்திரி சேர்த்து, அதில் பூரியை ஊறவைத்துச் சாப்பிடும் பழக்கம் (பால் போளி) உண்டு. வசனகர்த்தா ஆரூர்தாஸ், தன் புத்தகத்தில் எம்.ஜி.ஆர், பூரியை இரண்டாகப் பிய்த்துப் பாலில் தோய்த்துச் சாப்பிடும் அழகை இனிமையாக வர்ணித்திருப்பார்!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

பதமாகக் கொதிக்கும் எண்ணெய் அல்லது நெய்யில் (ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கவனம்) பொரிக்கப்படும் பூரி நன்கு உப்பி வர வேண்டும். பொன்னிறத்தில் இரண்டோ, ஆயுத எழுத்து போல மூன்றோ வைத்து, சரியான சைடிஷ் உடன் கொடுக்கப்படும் பூரிக்கு ஒரு ராஜ்ஜியத்தை எழுதி வைக்கலாம்! பூரி பொரியும்போது மாவில் இருக்கும் நீர் ஆவியாகிப் பரவுவதால்தான் உப்புகிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

உப்பும் பூரியை ஃபோர்க்கால் குத்தித் தட்டையாகச் செய்து, பேல் பூரியில் உதிர்த்துச் சேர்க்கவும், ஸ்பூன்போல உபயோகிக்கவும் ரோட்டோர சாட் கடைகளில் கற்றுக்கொள்ளலாம்.

உடனே சூடாகப் பரிமாறாமல், பிறகு கொஞ்சம் கடினமான பூரியாக (உடன் ரவை சேர்ப்பதால்), உள்ளே காரமான ஜீரா ரசம் அல்லது வெல்லம் இஞ்சி கலந்த சிரப் ஊற்றி, மேலே உருளை, வெங்காய கறி வைத்து செய்யப்படும் சிறிய சைஸ் பூரி, `பானி’ பூரி, ஜீரணத்துக்கு நல்லதாம் - நண்பன் சொன்னான்.

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

முழு பூரியையும் ஒரே வாயில் போட்டுத் தின்னவேண்டிய அவசியம் இருப்பதால், சிறிய வாய் உள்ளவர்கள் பானி பூரி முழுங்குவதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது.

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

சாதா பூரியைப்போல நான்கைந்து சைஸ் பெரிய பூரி, பெரிய தட்டில் பிரவுன் கலரில் ஆவி பறக்க, சென்னா மசாலா, வெங்காயத் துண்டுகள், எலுமிச்சையுடன் கொடுக்கப்படுவது `சோலெ பதூரா’. இது, இந்திப்படமோ, முஸ்லிம் பெயரோ அல்ல... கோதுமை, மைதா மாவில் செய்த பெரிய்ய்ய பூரியின் பெயர்தான்!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

மசாலாவை உள்ளே வைத்துப் பொரித்த `மசாலா பூரி’ வித்தியாசமாக இருக்கும். ஒடிசாவில் `துங்கா’ பூரி, உ.பி-யில் `பேட்வி’ பூரி (புதினாவுடன்), மேற்கு வங்காளத்தில் `லுட்சி’ பூரி (உருளை, கத்திரிக்காய் மசாலாவுடன்) மிகவும் பிரசித்தம்.

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

புதிய `பம்கின்’ பூரி (பறங்கிப் பூரி) - அரைத்த பறங்கி, கோதுமை மாவு, பருப்பு, உப்பு, எண்ணெய் எல்லாம் சேர்த்துச் செய்வது (தக்காளிச் சட்னியுடன் சாப்பிடுவது) சுவையாலும், எளிமையான செய்முறையாலும் பிரபலமாகி வருவது. மார்கழியில் வாசலில் பறங்கிப்பூ வைத்து மகிழ்ந்தவர்கள் இனி, வாயிலில் பறங்கிப் பூரி தின்று மகிழலாம்!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

ஹோட்டல்களுக்குச் செல்லாத அந்தக் காலங்களில் வீடுகளில் எப்போதாவதுதான் பூரி செய்வார்கள். குழந்தைகள் குஷியுடன் ரசித்துத் தின்பார்கள். இன்று அப்படி இல்லை. எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உடனே கிடைக்கும் டிபன், பூரி!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

ஆறினது, எண்ணெயில் ஊறினது, பப்படம் போல் நொறுங்குவது எல்லாம் நல்ல பூரிக்கு இழுக்கு!

பூரிக்கிழங்கு பாரு இதுவே எனக்கு ஜோரு!

மகாபாரதக் காலத்திலேயே பூரி இருந்திருக்கிறதா என யாராவது ஆராய்ச்சி செய்து, `பூரி முனைவர்’ பட்டம் பெறலாம். (கடோத்கஜன் வேடத்தில் ரங்காராவ், திருச்சி லோகநாதன் குரலில் `பூரி கிழங்கு பாரு, இதுவே எனக்கு ஜோரு’ன்னு `மாயா பஜார்’ படத்துல பாடியிருக்கிறாரே!) எது எப்படியானாலும், பூரி ஒரு நல்ல டிபன் என்பதில் சந்தேகமில்லை!