Published:Updated:

ஒரு லட்சத்து 30ஆயிரம் காலியிடங்கள்; ஆன்லைனில் விண்ணபிக்கலாம் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

ஒரு லட்சத்து 30ஆயிரம் காலியிடங்கள்; ஆன்லைனில் விண்ணபிக்கலாம் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
ஒரு லட்சத்து 30ஆயிரம் காலியிடங்கள்; ஆன்லைனில் விண்ணபிக்கலாம் - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

ரயில்வேயில் லெவல் 1 மற்றும் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு 1,30,000 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.  காலியாக உள்ள பணியிடங்களில் ஒரு லட்சம் பணியிடங்கள் லெவல் 1 பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 30,000 பணியிடங்கள் தொழில்நுட்பம் சாராத பணிகள், பாராமெடிக்கல் பணிகள், அமைச்சக ரீதியான பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடுடன் உயர்சாதி ஏழைகளுக்கான 10%இட ஒதுக்கீடும் பின்பற்றப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.rrbchennai.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  

தொழில்நுட்பம் சாராத பணிகளில் ஜூனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர், அக்கவுண்ட்ஸ் கிளார்க் மற்றும் தட்டச்சர், ரயில் கிளார்க், பயணச்சீட்டு கிளார்க், ரயில் நிலைய அதிகாரி, போக்குவரத்து உதவியாளர், சீனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர், சரக்கு பாதுகாவலர் ஆகியவை அடங்கும். இந்த பணியிடங்களுக்கு பிப்ரவரி 28 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  செவிலியர், சுகாதார ஆய்வாளர், ஆய்வக உதவியாளர், ஆய்வக கண்காணிப்பாளர், இசிஜி தொழில்நுட்ப வல்லுநர், மருந்தாளுநர் உள்ளிட்ட பாராமெடிக்கல் பணியிடங்களுக்கு மார்ச் 4 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டென்னோகிராபர், மொழி பெயர்ப்பாளர், சட்ட உதவியாளர் உள்ளிட்ட அமைச்சக ரீதியான பணிகளுக்கு மார்ச் 8 முதல் விண்ணப்பிக்கலாம். ஒரு லட்சம் காலியிடங்கள் உள்ள லெவல் 1 பணிக்கு மார்ச் 12 முதல் விண்ணப்பிக்கலாம். இதில் இருப்புப் பாதை பராமரிப்பாளர் (கிரேட் 4), உதவியாளர், இருப்புப் பாதை இணைப்பு மற்றும் கண்காணிப்பாளர் ஆகிய பணிகள் அடங்கும்.  விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500 பட்டியல் இனத்தவர்க்கு ரூ 250 கல்வித்தகுதி ஒவ்வொரு பணிக்கும் கல்வித்தகுதி மாறுபடும். கல்வித் தகுதி குறித்த விவரங்களை www.rrbchennai.gov.in ல் காணலாம்.