Published:Updated:

காமமும் கற்று மற 9 - நாட்டமின்மைக்கு சில முக்கியக் காரணங்கள்!

காமமும் கற்று மற

கூடற்கலை - 9

காமமும் கற்று மற 9 - நாட்டமின்மைக்கு சில முக்கியக் காரணங்கள்!

கூடற்கலை - 9

Published:Updated:
காமமும் கற்று மற

`நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான்…
வாழ்வோம் வா கண்ணே...’

- கங்கை அமரன்

``டாக்டர்... கொஞ்ச நாளா எனக்கும் என் மனைவிக்கும் செக்ஸ் ஆர்வமே வர மாட்டேங்குது. கல்யாணமாகி அஞ்சு வருஷம்தான் ஆகுது. `ரெண்டாவது குழந்தைக்கு சில வருஷம் போகட்டும்’னு பிளான் பண்ணியிருந்தோம். ஆனாலும், தாம்பத்யத்துக்கு குறைவில்லாமப் பார்த்துக்கிட்டோம். இப்போ அவளும் நானும் நெருங்கியே ஒரு வருஷம் ஆகப்போகுது. மத்த பொண்ணுங்களைப் பார்த்தாலோ, நண்பர்களோட `அந்த’ விஷயங்களைப் பேசினாலோ செக்ஸ்ல ஆர்வம் வருது. `இது கொஞ்சம் சீரியஸான பிரச்னை’னு ஃபிரெண்ட்ஸ் சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது. என் பிரச்னையைத் தீர்த்து வைங்களேன்...” ஆதங்கத்தோடு பேசினார் அந்த இளைஞர்.

காமமும் கற்று மற 9 - நாட்டமின்மைக்கு சில முக்கியக் காரணங்கள்!

அவர் மனைவியை அழைத்து வரச் சொன்னேன். பேசிப் பார்த்ததில், இருவரிடமும் குறையில்லை என்பது தெரிந்தது. அவர்களுக்கு ஆசை தீர்ந்து போகிற வயதும் இல்லை. விஷயம் இதுதான்... வேலை காரணமான மன அழுத்தமும், அதன் தொடர்ச்சியாக இருவருக்குமிடையே உருவான அன்புக் குறைபாடும் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையை உப்பு சப்பில்லாமல் ஆக்கிவிட்டிருந்தன. அலுவலகப் பணி, சொந்த ஃப்ளாட் வாங்குவதற்காக வாயையும் வயிற்றையும் கட்டிக்கொண்டு உழைத்தது, ஈ.எம்.ஐ நெருக்கடி, குடும்பத்தோடு நேரம் செலவழிக்க முடியாமல் போனது... என லைஃப்ஸ்டைல் மாற்றங்கள் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையைப் பதம் பார்த்திருந்தது.

மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் பேசி அவரது மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். குடும்பச் சிக்கல்கள், பொருளாதாரம் தொடர்பான குறைகளென்றால், அவற்றைத் தீர்த்துவைக்க முயலலாம். அவருக்கு உற்ற துணையாக நீங்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்; அவர் உங்களை முழுமையான துணை என நம்பும்படி மனம்விட்டுப் பேசுங்கள். இதுதான் உளவியல் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் முதல் மருந்து.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். இது, பல வீடுகளிலும் நடக்கக்கூடியதுதான். என்ன… பலரும் இதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. இது இப்படியே வளர்ந்தால் ஒரு கட்டத்தில், தகாத உறவுவரை சென்றுவிடும் அபாயமிருக்கிறது. ஆணோ, பெண்ணோ... உடலுறவில் நாட்டமில்லாமல் இருப்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். உடல் பிரச்னையோ, உளவியல் அல்லது உணர்வு சிக்கலோகூட இணையின் மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

அவற்றில் சில முக்கியக் காரணங்கள்...

உளவியல் சிக்கல்

ஆரோக்கியக் குறைபாடு

ரத்த ஓட்டம் தொடர்பான நோய்கள், நீரிழிவு, ஹைப்போதைராய்டிசம், இதயநோய்கள், ஹார்மோன் குறைபாடுகள் இருந்தால், செக்ஸ் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

சுய இன்பப் பழக்கம்

சில ஆண்கள்/பெண்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ள ஆசை இருக்கும். ஆனால், மனத்தடை, பயம் போன்ற காரணங்களால் உடலுறவைத் தவிர்ப்பார்கள். அதே நேரத்தில், சுய இன்பத்தில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். இது தவறில்லை. ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகக் கூடாது. மனத்தடைகளைத் தகர்த்துவிட்டு, இதிலிருந்து விடுபட்டால், இருவரும் திருப்தியடையலாம்.

காமமும் கற்று மற 9 - நாட்டமின்மைக்கு சில முக்கியக் காரணங்கள்!

பாசக் குறைபாடு

கணவன், மனைவிக்கு இடையில் தாம்பத்ய உறவு செழித்திருக்க ஒருவர் மீது மற்றொருவர் காட்டும் அன்பும் பாசமும் முக்கியம். அந்தப் பிணைப்புதான் அவர்களை இணைத்து வைத்திருக்கும். குடும்பப் பிரச்னைளை அவ்வப்போது களைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், காலப்போக்கில் தன்னாலேயே துணையுடனான உடலுறவு ஆர்வம் குறைந்து போகும்.

போதைப் பழக்கம்

நிக்கோடின், மார்ஃபைன் போன்ற போதைப் பொருள்கள், உடலுறவில் நாட்டமில்லாமல் செய்யக்கூடிய ஆன்டிடிப்ரஸ்ஸன்ட் (Antidepressant) மருந்துகளை உட்கொள்வதும், தாம்பத்யக் குறைபாட்டை உண்டாக்கும்.

மேலே குறிப்பிட்டதுபோல, தனியான ஒரு காரணம் அனைவருக்கும் பொருந்தாது. இருவருக்குமிடையிலான உண்மையான, தெளிவான உரையாடல்தான் இந்தச் சிக்கலைத் தீர்க்கும் முதல் மருந்து. மேற்கண்ட பிரச்னைகள் ஏற்பட்டால், நீங்களாகவே சுய பரிசோதனை செய்து, சரிப்படுத்திக்கொள்ள முயலலாம். அவை பலனளிக்காத பட்சத்தில் மருத்துவரை அணுகலாம்.

- கற்போம்...