Published:Updated:

மேக்ஸ்வெல் நிதானம்; பௌலர்கள் போராட்டம் வீண் - `திரில்' வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவை பேட்டிங் செய்யப் பணிந்தது. அதன்படி ரோஹித் ஷர்மா - கே.எல் ராகுல் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். ரோஹித்  5 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி - கே.எல்.ராகுலுடன் இணைந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி சுழற்பந்துவீச்சாளர் சம்பா பந்துவீச்சில் இறக்கி சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆகி வெளியேறினார். கோலி 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார்.

மேக்ஸ்வெல் நிதானம்; பௌலர்கள் போராட்டம் வீண் - `திரில்' வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

ராகுலுடன் தோனி கைக்கோத்தார். நிதானமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ராகுல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் இந்தியாவுக்கு இறங்கு முகம்தான். வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். தோனி மட்டும் விக்கெட்டை இழக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி எக்ஸ்ட்ராஸ் வகையில் 11 ரன்களை வாரி வழங்கியது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் 3 விக்கெட்டுகளைப் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா வெற்றிக்கு 127 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மேக்ஸ்வெல் நிதானம்; பௌலர்கள் போராட்டம் வீண் - `திரில்' வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

இதையடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரில் ஸ்டோன்ஸ் ரன் அவுட் ஆனார். உமேஷ் யாதாவின் அடுத்த ஓவரில் ஆரோன் பின்ச் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 5 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து மேக்ஸ்வெல் - ஷார்ட் ஆகியோர் இணைந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினர். இந்தக்கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதானமாக விளையாடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார்.

மேக்ஸ்வெல் நிதானம்; பௌலர்கள் போராட்டம் வீண் - `திரில்' வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

இந்திய அணியை அச்சுறுத்திக்கொண்டிருந்த இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். அவரின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் வெளியேறினார். இதையடுத்து இந்திய வீரர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நிதானமாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் ஷார்ட்டும் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக பும்ரா மிரட்டினார். 19-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 6 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். பேட் கம்மின்ஸ் - ரிச்சர்ட்சன் கூட்டணி தித்திப்பாக இலக்கை எட்டியது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.