`இயற்கைச் சூழலில், சில நிமிடங்கள் இருந்தால், மன அழுத்தம் குறையும்’ என்கிறது உளவியல். ``அடுக்குமாடிக் குடியிருப்புகள், சின்னஞ்சிறு வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டின் உள்பகுதியில் குறுகிய இடமாக இருந்தாலும், அதில் `இண்டோர் பிளான்ட்ஸ்’ (Indoor Plants) வைப்பதன் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்’’ என்கிறார் இண்டோர் பிளான்ட் டிசைனர் ஸ்ரீனிவாசன்.

1. அறையின் உள்ளே சோற்றுக் கற்றாழை வளர்த்தால் அது, காற்றிலுள்ள நச்சுத் தன்மையை தன்னுள் உட்கிரகித்துக்கொண்டு காற்றைச் சுத்தப்படுத்திவிடும்.

2. மற்ற செடிகளைப்போல் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் ஆக்ஸிஜனை வெளியேற்றக்கூடியது ஸ்நேக் பிளான்ட். படுக்கை அறையில் இந்தச் செடியை வைப்பதால், இரவில் தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

3. படர்ந்த இலைகளைக்கொண்ட செடிகள், நம்மைப் புத்துணர்வுடன் செயல்படவைக்கும். பணியிடங்களில் இவற்றை வளர்த்தால், மன அழுத்தமின்றி வேலைகளை வேகமாகச் செய்ய முடியும்.

4. செடிகள் வளர்ப்பதால், நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், தீவிரமான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இண்டோர் பிளான்ட்ஸைப் பராமரிப்பதன் மூலம் அவற்றிலிருந்து எளிதில் விடுபடலாம்.

5. சத்தத்தை உட்கிரகிக்கும் சக்தி சில செடிகளுக்கு உண்டு. ஒலி மாசு நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் வீட்டின் மூலைகளில் அளவில் பெரிய செடிகளை வளர்ப்பதன் மூலம் இந்த மாற்றத்தை உணரலாம்.

ஜெ.நிவேதா