Published:Updated:

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

உணவு, உடற்பயிற்சி, உறக்கம், இசை, பயணம், விளையாட்டு, நட்பு, மகிழ்ச்சி, மன அமைதிஹெல்த்

ரெனி லேனக் என்ற கிரேக்க மருத்துவர் கண்டுபிடித்த `ஸ்டெதாஸ்கோப்’ இன்று மருத்துவர்களின் அடையாளம். இதயத் துடிப்பு, சுவாசம், குடல் அசைவு, ரத்த நாளங்களின் ஒலி ஆகியவற்றின் மூலம் மனிதனின் ஆரோக்கியத்தை, மருத்துவருக்குத் தெரிவிக்கும் முதல் மற்றும் முக்கிய உபகரணம் `ஸ்டெதாஸ்கோப்.’  எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், நோயாளிகளின் இதயம் பேசுவதை மருத்துவரின் காதுகளுக்குக் கொண்டு செல்லும் கருவி!

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

எதிலும் அவசரம், மேற்கத்திய உணவு முறை, தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, பணி அழுத்தம் என இன்றைய வாழ்க்கைமுறை மாறிப் போய்விட்டது. இதனால் தனது வாழ்நாளின் 50 சதவிகிதத்தை, `மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ (Metabolic Syndrome) என அழைக்கப்படும் வாழ்க்கைமுறை நோய்களுடன் கழிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதயநோய், உடல் பருமன், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, குழந்தையின்மை, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். இந்த பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கவேண்டியிருக்கும். அதாவது, `ஸ்டெதாஸ்கோப்’ மூலம் பரிசோதனை செய்யப்படுவதால் மருத்துவரின் காதுகளும், நோயாளியின் இதயமும் தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்ற நோய்கள் வந்த பிறகு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதுதான் ஆரோக்கியம். இருந்தாலும், அவை வராமல் தடுப்பதுதான் உண்மையான ஆரோக்கியம். தான் கற்ற கல்வி, தொழில்நுட்பம், செல்வம் போன்றவற்றைப் பாதுகாப்பாக வைக்கத் தெரிந்த மனிதனுக்கு, ஏனோ ஆரோக்கியத்தை மட்டும் காப்பாற்றத் தெரியவில்லை என்பதுதான் உண்மை. சாதாரண மனிதனின் இதயமும், மருத்துவரின் காதுகளும் இணையாமலிருக்கப் பல வழிகள் இருக்கின்றன. நாம் மருத்துவமனைக்கே செல்லாமல் பார்த்துக்கொள்ளும் வழிகள் அவை. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்...

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!உணவு

`அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து...’


உண்ணும் நேரம், உணவின் அளவு, உணவு உட்கொள்ளும் கால இடைவெளி ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது இந்தத் திருக்குறள். நன்றாகப் பசித்த பிறகே உணவை உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. `அந்த உணவும் வெறுமனே பசியை ஆற்றும் உணவாக இல்லாமல், உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும், தேவையான விகிதத்தில் கிடைக்கும்படி இருக்க வேண்டும்’ என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றில் எவை, எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும், சமச்சீர் உணவின் விகிதங்களையும் முக்கியத்துவத்தையும் நமக்குச் சொல்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். `இதுதான் நமது சாப்பாட்டு வாய்ப்பாடு’ என்கிற அவர்கள், ஆரோக்கிய உணவுமுறைக்கு சில எளிய வழிமுறைகளைக் கூறுகிறார்கள்.

* காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.

* பசித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

* திருப்திநிலை வந்தவுடன்,  உணவு உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.

* தினசரி உணவில் ஐந்து நிறங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

* தினசரி மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

* உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் இரவு உணவை முடித்துவிட வேண்டும்.

* நீண்ட நேரமாக உணவு உட்கொள்ளாமல்  இருப்பதும், ஒரே வேளையில் அதிகமாக உட்கொள்வதும் உடல் பருமனை அதிகரிக்கும்.

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

ஆக, உடலுக்கு ஏற்ற உணவுகளை அறிந்து, அவற்றைப் பழக்கப்படுத்துவதுதான் நோயற்ற வாழ்வுக்கான முதல் வழி.

உடற்பயிற்சி

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு உணவு மட்டுமல்ல, உணர்வுகளும் காரணம் என்பதை நாம் அறிவோம். உடல் மற்றும் மன அழுத்தத்தின்போது, கார்டிசால், எபிநெப்ரின் என்ற அழுத்த ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கும். இவற்றால் ஏற்படும் பாதிப்புகளே இத்தகைய நோய்களுக்கான காரணங்கள் என்று கூறும் உடலியல் மருத்துவத்துறை, அவற்றைக் குறைப்பதற்கான வழியாக உடற்பயிற்சியைப் பரிந்துரைக்கிறது. உடற்பயிற்சியின்போது கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறையும்; மூளையின் எண்டார்பின்கள் மற்றும் என்கெபலின்கள் அதிகமாகச் சுரக்கும். இதனால் மன அழுத்தம் குறைந்து, நீண்ட உறக்கம், புத்துணர்ச்சி, வலி நிவாரணம், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதாகச் சொல்கிறது மருத்துவ அறிவியல்.

மேலும், வேகமாக நடப்பது, ஓடுவது, நீச்சல், சைக்கிளிங், டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகள், யோகா ஆகிய அனைத்து ஏரோபிக் மற்றும் அனரோபிக் பயிற்சிகளிலும், கிளைக்கோஜென் என்ற குளூக்கோஸ் சேமிப்பு எரிக்கப்படும். உடற்பயிற்சியின்போது அதிகமாகச் சுரக்கும் வியர்வை, உடலின் நச்சுப் பொருள்களை வெளியேற்றும். தினமும் 30 நிமிடங்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் எனத் தவறாமல் செய்யும் உடற்பயிற்சிகள் அல்லது துரித நடை, இதயநோயிலிருந்து பெருமளவில் பாதுகாப்பதாகக் கூறுகிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன். `உடற்பயிற்சி செய்வோம்;  உடல்நலன் காப்போம்’ இது நோயற்ற வாழ்வுக்கான இரண்டாவது வழி.

உறக்கம்

உணவு, உடற்பயிற்சி மட்டுமல்ல, நல்லுறக்கமும் ஆரோக்கிய வாழ்வுக்கு மிகவும் அவசியம். `உலகில் வாழும் உயிரினங்களில், மனிதன் மட்டும்தான் தன் உடலைக் கட்டாயப்படுத்தி உறக்கத்தைத் தவிர்க்கும் ஒரே உயிரினம்’ என்கிறது உலக தூக்கமின்மை எதிர்ப்பு அமைப்பு. `ஷிப்ஃட் சிஸ்டம்’ என்ற இரவு, பகல் பணி மாற்றங்களை உடல் ஏற்றுக்கொள்வதில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

உடல்சோர்வு, ஞாபகமறதி, கவனமின்மை, மன அழுத்தம், பசியின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் தூக்கமின்மை நாளடைவில் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். `மனிதனின் ஆரோக்கியத்துக்குத் தூக்கமின்மை பெரும் தடையாக இருக்கிறது’ என்கிறது மருத்துவ அறிவியல்.  

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

`நமக்கு உறக்கத்தையும் விழிப்பையும் அதன் மூலம் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களையும் கட்டுப்படுத்தும் உயிரியல் கடிகாரம் என்ற `பயலாஜிக்கல் கிளாக்’, நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இயங்குகிறது. இவை அனைத்தையும் ஒரு மாஸ்டர் கீபோல, நமது மூளைக்குள்ளிருக்கும் பீனியல் சுரப்பியின் `மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இரவுப் பொழுதுகளை பகலின் நீட்சியாக ஆக்கும் பணிகளும், தொழில்நுட்பங்களும் `மெலட்டோனின்’ சுரப்பதை முற்றிலும் மாற்றுகின்றன. இது ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையான சர்காடியன் இசைவையும் உறக்கத்தையும் பெருமளவில் பாதிப்பதால், ஏற்படுவதே வாழ்க்கைமுறை நோய்கள்’ என்கிறது மருத்துவ அறிவியல்.

மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு, தினமும் ஏழு முதல் எட்டு மணி நேர உறக்கம் அவசியம் என வலியுறுத்தும் மருத்துவர்கள், `மூன்று நாள்கள் தொடர்ச்சியாக ஏழு மணி நேரம் உறங்கினால், ஆறு நாள்கள் உறங்கிய புத்துணர்ச்சி கிடைக்கும்’ என்கிறார்கள். ஆக, வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் மூன்றும் மனிதனை வாழ்க்கைமுறை நோய்களிலிருந்து வருமுன் காக்கின்றன என்பதே உண்மை. இவை மட்டுமல்ல, `உங்களை நீங்கள் நேசித்தால், உடலிலிருக்கும் நோய்கள் அனைத்தும் ஓடிவிடும்’ என்று கூறும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று, ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில ஆலோசனைகளையும் கூறுகிறது. அவை...

காலை அலுவலகப் பணிகளை, பூக்களுடன் தொடங்குங்கள். பூக்கள், புத்துணர்ச்சி ஊட்டுபவை. பிடித்த பாடலை வாய்விட்டு, சத்தமாகப் பாடுங்கள்; அதற்கேற்ப நடனமும் ஆடுங்கள். பாடலும் நடனமும்  மூளையின் ‘ஹிப்போகாம்பஸ்’ பகுதியை கிளர்ந்தெழச் செய்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். உங்களுக்குப் பிடித்த பாடலைக் கேளுங்கள்.       28-வது நிமிடத்தில் மன அழுத்தம் குறைந்துவிடும். குழந்தைகளுடன் வாரம் ஒருமுறையாவது ஓடியாடி விளையாடுங்கள். ஒரு வாரத்துக்கான எனர்ஜி பூஸ்டரைத் தவற விடாதீர்கள். மரங்கள் நிறைந்த இடங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். ஆகவே, மரங்களுக்கு நடுவே நடைப்பயிற்சியை (Tree Cycling) மேற்கொள்ளுங்கள்.

அறிமுகமற்ற யாருக்காவது சிறு உதவி செய்யுங்கள். இவை உங்களைப் பல நாள்களுக்கு மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். உங்கள் பள்ளி அல்லது கல்லூரிக்குச் சென்று வாருங்கள். பள்ளித் தோழர்களைச் சந்தித்து, பால்யகாலத்தை நினைவுகூருங்கள். உங்களது மகிழ்ச்சியை  25 சதவிகிதம் கூட்டுபவை பால்யகால நினைவுகளே.

பாதங்களை வெதுவெதுப்பான நீரில் நனைத்த பிறகு உறங்கச் செல்லுங்கள். படுக்கச் செல்வதற்கு முன், பிடித்தமான புத்தகத்தைச் சிறிது நேரமாவது வாசியுங்கள்.  உலர்ந்த சருமம் மன அழுத்தத்தைத் தரும். எனவே, உங்களுக்கு பிடித்த மாய்ஸ்ச்சரைசரைக் (Moisturizer) குளித்தவுடன் பயன்படுத்துங்கள்.

சூடான பானங்களைக் கைகளில் வைத்திருப்பது அழுத்தத்தைக் குறைக்கும். பயணங்களைத் திட்டமிடுங்கள். திட்டமிட்ட பயணங்கள், 16 வாரங்களுக்கு முன்னரே உங்களை மகிழ்ச்சிப்படுத்துமாம். உங்கள் துணைவருடன், பிடித்த பாடலுடன், நிலவின் ஒளியில் நடை பயிலுங்கள். இப்படி அடுக்கிக்கொண்டே போகும் இந்த ஆய்வு, நம் அன்றாட வாழ்வில் வேண்டாம் என்று நாம் வெறுத்து ஒதுக்கிய, மறந்துபோன சின்னச் சின்ன விஷயங்களில்தான் நம்  வாழ்க்கையும் ஆரோக்கியமும் இருக்கின்றன என்று அடித்துக் கூறுகிறது. இப்போது சொல்லுங்கள். நமது வாழ்க்கை மருத்துவரின் காதுகளும், நோயாளியின் இதயமும் இணைவதற்கான வாழ்க்கையா... அல்லது இரண்டும் இணையாதிருப்பதற்கான வாழ்க்கையா? 

ஆரோக்கியமாக வாழ்வதற்கான மருந்து, மிகவும் சுலபமானது. நம்மை நாமே நேசிப்பது!

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

உளவியல் உண்மைகள்!

நீ
ங்கள் பலருடனோ அல்லது ஒருவருடனோ பேசும்போது, அவர் உங்களிடம் கவனம் செலுத்துகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள, அவரின் கால்களை கவனியுங்கள்.  அவை உங்களை நோக்கி இருந்தால், அவர்கள் உங்களையோ/ உங்கள் பேச்சையோ விரும்புகிறார் என அர்த்தம்.

ஸ்டெதாஸ்கோப்புக்கு வேலையில்லை!

உளவியல் உண்மைகள்!

ங்கள் மனதுக்குப் பிடிக்காத, அன்றைய விஷயங்களை/ நிகழ்வுகளை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி, அதைச் சுக்குநூறாகக் கிழித்தாலோ, எரித்தாலோ, நீங்கள் மிகவும் லேசாக உணரத் தொடங்குவீர்கள்.