கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

‘அடுத்த ஆண்டில் இருந்து டீசல் கார்களைத் தயாரிக்கப்போவதில்லை' என்று மாருதி சுஸூகி வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, டீசல் கார் பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘‘ஏப்ரல்
2020-ல் இருந்து BS-VI கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், அதற்கு ஏற்றாற்போல டீசல் கார்களை உற்பத்தி செய்தால், தயாரிப்புச் செலவு சுமார் 80,000-த்தில் இருந்து 2 லட்சம் ரூபாய்வரை அதிகரிக்கும். சிறிய கார்களின் விலையை இந்த அளவுக்கு உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் தாங்கமாட்டார்கள். அதனால் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறோம்'' என்று காரணம் சொல்லியிருக்கிறது மாருதி சுஸூகி.

மாருதி சுஸூகி இப்படி திடுதிப்பென்று அறிவிப்பு செய்திருப்பதால், கார் விற்பனை எந்தத் திசையை நோக்கி நகரும் என்று சராசரி வாடிக்கையாளர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். டீசல் கார்களின் உற்பத்தியை மாருதி சுஸூகி நிறுத்திவிட்டால்... அவர்களின் மார்க்கெட் ஷேர் குறையுமா? அல்லது மாருதி சுஸூகிக்கு இழப்பு ஏற்பட்டால், இது எந்த கார் நிறுவனத்துக்குச் சாதகமாக அமையும் என்பதுபோன்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

‘‘நாங்கள் ஒன்றும் மாருதி சுஸூகியைப்போல சொந்த டீசல் இன்ஜின் பற்றிச் சிந்திக்காமல் தூங்கிவிட்டு, கடைசி நேரத்தில் விழித்துக்கொள்ளவில்லை. எங்களிடம் டீசல் இன்ஜின்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதனால் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களைச் செய்வதில் எங்களுக்குச் சவால்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களே வேண்டாம் என்று நிராகரிக்கப்போவதில்லை. மேலும் 5 லட்ச ரூபாய் காரின் விலையில் ஒன்றரை லட்சமோ, இரண்டு லட்சமோ விலை ஏறினால் அதன் தாக்கம் வெகுவாக உணரப்படும். அதுவே 20 லட்சம் ரூபாய் காரின் விலை இரண்டு லட்ச ரூபாய் ஏறினால்கூட அது கண்ணை உறுத்துவது போலத் தெரியாது. அதனால் வந்திருப்பது புதிய சவால்தான். இதை நாங்கள் கண்டிப்பாகச் சமாளிப்போம்'' என்கிறனர் போட்டி கார் கம்பெனியினர்.

ஆனால், வெற்றி-தோல்விகளைத் தீர்மானிக்கப்போகும் வாடிக்கையாளர்களோ, எப்போதும்போல நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்புடன்
ஆசிரியர்