Published:Updated:

`அவசரத்துக்குக்கூட பயன்படல; எதற்கய்யா இந்த இன்ஷூரன்ஸ்? - ஆதங்கத்தில் போலீஸ் எஸ்.ஐ.

`அவசரத்துக்குக்கூட பயன்படல; எதற்கய்யா இந்த இன்ஷூரன்ஸ்? - ஆதங்கத்தில் போலீஸ் எஸ்.ஐ.
`அவசரத்துக்குக்கூட பயன்படல; எதற்கய்யா இந்த இன்ஷூரன்ஸ்? - ஆதங்கத்தில் போலீஸ் எஸ்.ஐ.

`அவசரத்துக்குக்கூட பயன்படல; எதற்கய்யா இந்த இன்ஷூரன்ஸ்? - ஆதங்கத்தில் போலீஸ் எஸ்.ஐ.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை போலீஸ் எஸ்,ஐ ஒருவரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் மெடிக்கல் இன்ஷூரன்ஸூக்காகக் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகை மகனின் மருத்துவச் செலவுக்குப் பயன்படாத ஆதங்கத்தில் போலீஸ் டிஜிபிக்கு மனு அளித்துள்ளார் எஸ்.ஐ.  

 தமிழக காவல்துறையிலும் அரசு துறைகளிலும் பணியாற்றுபவர்களுக்காக மெடிக்கல் இன்ஷூரன்ஸ் திட்டம் செயல்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக மாதந்தோறும் அவர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், அந்தத் தொகை மருத்துவச் செலவுக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்றே பலர் பதிலளிக்கின்றனர். 

தன்னுடைய மகனுக்கு 2018 பிப்ரவரியில் நடந்த அறுவைச் சிகிக்சையின்போதுகூட இந்த மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பயன்படவில்லை என்ற ஆதங்கத்தில் போலீஸ் டிஜிபிக்கு மனு கொடுத்துள்ளார் சென்னை கண்ணகிநகர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் அலாவுதீன். அவர் கொடுத்த மனு, வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவிவருகிறது. அவர் கொடுத்த மனுவில், ``என்னுடைய சம்பளத்திலிருந்து மாதந்தோறும் 180 ரூபாய் மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், எனக்கு இதுவரை கார்டு கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்னுடைய மகனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தேன். அப்போது அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு 1,09,284 ரூபாய் செலவானது. இன்சூரன்ஸ் கார்டு என்னிடம் இல்லாததால் பணத்தைச் செலுத்தினேன். தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்தும் அந்தப் பணத்தைப் பெற முடியவில்லை. என்னுடைய சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யும் தொகைக்கு எனக்கு வருமான வரி விலக்கும் கிடைப்பதில்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எந்தவகையிலும் பயன்பெற முடியாத இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்திலிருந்து எனக்கு விலக்களிப்பதோடு சம்பளத்திலிருந்தும் பணம் பிடிப்பதை நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இது, சம்பந்தப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் ஆதங்கம் மட்டுமல்ல இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தால் பயன்பெற முடியாதவர்களின் குமுறலாக உள்ளது. சமீபத்தில் சென்னையில் பணியாற்றும் சக்திவேல் என்ற சப்-இன்ஸ்பெக்டர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முகப்பேரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்ஷூரன்ஸ் கார்டு இருந்தும் பயனில்லை. இதனால் சக்திவேலின் மனைவி சித்ரா, தன்னுடைய நகைகளை அடமானம் வைத்து மருத்துவமனை கேட்ட தொகையைச் செலுத்தியுள்ளார். அதன்பிறகுதான் சக்திவேலுக்கு மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளித்துள்ளது. அவசரத்துக்குப் பயன்படாத இந்த இன்ஷூரன்ஸ் திட்டம் எதற்கு என்ற கேள்வி ஒட்டுமொத்த காவலர்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, காவல்துறை அதிகாரிகள் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் உள்ள குளறுபடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த காவலர்களும் எதிர்பார்க்கின்றனர். 

இதுகுறித்து டிஜிபி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவு உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ``இன்ஷூரன்ஸ் திட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்குச் சுமுகத் தீர்வு காணப்படும். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் எழுத்து பூர்வமாகவே மனு அளித்துள்ளார். அந்த மனு எங்களின் கைக்குக் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இன்ஷூரன்ஸ் திட்டத்தில் பிரச்னைகளைச் சந்திப்பவர்கள் தயங்காமல் எங்களை அணுகலாம்" என்றனர். 

 காவல்துறையில் மட்டுமல்லாமல் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்களும் இந்தப் பிரச்னைகளை மருத்துவமனைகளில் சந்திக்கின்றனர். மாதந்தோறும் மெடிக்கல் இன்ஷூரன்ஸிக்காகப் பிடித்தம் செய்யப்படும் தொகை எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனமும், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும் ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு