Published:Updated:

சிக்கன் பிரியர்களுக்கு செம்ம ட்ரீட் 'ME'

சிக்கன் பிரியர்களுக்கு செம்ம ட்ரீட் 'ME'
சிக்கன் பிரியர்களுக்கு செம்ம ட்ரீட் 'ME'

கோழியில் இருந்து முட்டை வந்தால் என்ன? முட்டையில் இருந்து கோழி வந்தால் என்ன? தோன்றும்போதெல்லாம் அவைகளை உண்டு நம் பசியைப் போக்கிக்கொள்வதில் நமக்கு ஒரு சின்ன ஆனந்தம். கோழி இறைச்சியின் சுவை சர்வதேச அளவில் விரும்பப்படும் சுவையாகும். மனிதர்களின் நாவைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் கோழி இறைச்சி, மத்த இறைச்சிகளை விடவும் விலை குறைச்சலாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது (ஜெனரல் நாலெட்ஜ்). 

சிக்கன் பிரியர்களுக்கு செம்ம ட்ரீட் 'ME'

கோழி வறுவல், கோழி குழம்பு மட்டும் இல்லாமல் பிரெட்டுக்குள் பொரித்த கோழியை வைத்து கொடுக்கப்படும் பர்கர்கள் மற்றும் கோழியை சூடான எண்ணெய்யில் நீந்த விட்டு எடுக்கப்படும் சிக்கன் ஃபிரைக்கள்தான் தற்காலத்தைய நவநாகரிக நாஸ்தாக்கள். பர்கர் போன்ற ஐட்டங்கள் கண்டு பிடித்தது எல்லாம் அயல்நாட்டில்தான்.  இந்த பர்கர் ஜெர்மனியின் 'ஹேம்பர்க்' எனும் ஊரில் தயாரிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதனால்தான் ஹேம்பர்கர் எனப் பெயர் வந்ததாம். அமெரிக்காவில், பர்கர் தின்னே போண்டியாகும் அளவுக்கு ஒரு சராசரி அமெரிக்கன், வருடத்துக்கு 800 பர்கர் வரை சாப்பிடுகிறார் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

19-வது நூற்றாண்டில். ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள், அங்கு ஹேம்பர்கர் செய்யும் உணவகங்களை நடத்தி வந்தார்களாம். ஹேம்பர்க்கில் பீஃப் (ஹேம்-Ham) மிகவும் ஃபேமஸ், அதனை பேட்டீஸ் ஆக தட்டி, அதனுடன் இஞ்சி, உப்பு, பெப்பர் வெங்காயம் சேர்த்து க்ரில் அல்லது ஃப்ரை செய்வார்கள். சில வருடங்களிலேயே அமெரிக்காவிலும் இந்தப் புதிய உணவு கிராக்கியாகிவிட்டது. இப்படி இருக்க ஒருமுறை அமெரிக்காவில் நடந்த தொழில்துறை புரட்சியில் ஊழியர்களுக்கு ஹேம்பர்கர் உணவு அளிக்கப்பட்டதாம். அப்போது அவர்கள் நின்றுகொண்டு அதனை சாப்பிட மிகவும் சிரமப்பட்டதாகவும், அதன் மூலமே பிரெட்டிற்கு நடுவே க்ரில் செய்த இறைச்சியை வைக்கும் ஐடியா கிடைத்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த ஐடியாவை கொடுத்தவரின் பெயர் வரலாற்றில் இடம் பெறவில்லை. பின்பு நாளடைவில் ஹேம்பர்கர் என்ற பெயர் பொதுவாக 'பர்கர்' ஆக மறுவியுள்ளது. 

அமெரிக்கர்கள் கோழியின் இறக்கையை விரும்புவார்கள், ஆனால் நம்மூரில் சரியாக காலையே குறிவைத்து அட்டாக் செய்கிறார்கள் லெக் பீஸ் ஃபேன்ஸ். இறக்கையாவது, காலாவது... ஒட்டுமொத்தமாக கோழியை எப்படி கொடுத்தாலும் சாப்பிடுவோம் என சொல்கிறவர்கள், கண்டிப்பாக துரித உணவகங்களுக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஏனெனில் சிக்கனில் புது புது வெரைட்டிகளை வெளுத்து கட்டுவதற்கு துரித உணவகங்கள் சரியான இடமாக இருக்கின்றன. 'இன்னைக்கி என் ட்ரீட் மச்சி' என்றவுடன் நாலு பீஸ்களை எக்ஸ்ட்ரா சாப்பிடும் நண்பர்களுக்கான சிறந்த உணவகமாகவும் இந்தத் துரித உணவகங்கள் திகழ்கின்றன.

சிக்கன் பிரியர்களுக்கு செம்ம ட்ரீட் 'ME'

Meat and Eat (ME)

சிக்கன் விரும்பிகளுக்கு சிறந்த நிஜமான (வின்னர் வின்னர்) சிக்கன் டின்னரை அளிக்கிறது 'Meat and Eat' (ME) உணவகம். ஏனெனில் சிக்கன் பர்கர் மட்டும் இல்லாமல் ஃபிரைட் சிக்கன், சிக்கன் பீட்சா, சிக்கன் பிரியாணி, சிக்கன் லாலிபாப், சிக்கன் நக்கட்ஸ் போன்ற சுவையான சிக்கன் உணவுகளை ஆரோக்கியமான இறைச்சிகள் மூலம் சமைத்து வழங்குகிறது ME. சைவ பிரியர்களுக்கு - வெஜ் பர்கர், வெஜ் பீட்சா, வெஜ் பிரியாணி போன்ற பல வெரைட்டிகளும் உண்டு. அசத்தலான காம்போ-க்களையும் ME வழங்குகிறது. இது தவிர, சாலட்கள், சாண்ட்வெஜ்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவைகளை ME வழங்குவதால், அனைத்திலும் ஒரு ரவுண்ட் வரலாம். அளவோடு சாப்பிடும் எல்லா உணவும் அமிர்தம்தான். எனவே, என்றாவது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் ஒன்றாக வெளியில் செல்லும் நாம், தவறாமல் ME-க்கு ஒரு விசிட் அடித்து, சுவையான உணவுகளை உண்டு மகிழலாம்!

விகடன் வாசகர்கள் நேரடியாக ME-க்கு கால் செய்யும்போது 'VIK10' என்ற கோட்-ஐ சொல்லி 10% டிஸ்கவுண்ட் பெற்றுக்கொள்ளலாம்.  

டோர் டெலிவரி மற்றும் பார்ட்டி ஆர்டர் வசதியை வழங்குகிறது ME. மொபைல் ஆப் மூலமாகவும், நேரடியாகவும் ஆர்டர் செய்யலாம்+91 81448 83399.