கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!”

“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!”

“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!”

சினிமா ஹீரோக்கள், விளையாட்டு வீரர்கள், புரட்சியாளர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், பத்திரிகைகள் என எல்லாவற்றுக்குமே அதிதீவிர ரசிகர்கள் உண்டு. மோட்டார் விகடனுக்கும் அதுபோன்ற அதிதீவிர ரசிகர்கள்/வாசகர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வாசகர்கள், மோட்டார் விகடனுடனான தங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் பகுதிதான் இது.

“எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!”

‘‘காலேஜ் போகும்போதுதான் முதன் முதலா அந்த புக்கைப் பார்த்தேன். நடிகர் சூர்யா, டுகாட்டி பைக்கில் நின்னுக்கிட்டு இருந்தாரு. வாங்கிப் பார்ப்போமேன்னு படிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் எனக்குள்ள இருந்த ஆட்டோமொபைல் வெறியன் முழிச்சிக்கிட்டான். காலேஜ் புக்ஸைவிட மோட்டார் விகடன் பைக்/கார் ரிவ்யூஸ்தான் அதிகமா மனப்பாடம் பண்ணுவேன். எங்க தெருவுல எல்லோரும் என் அட்வைஸைக் கேட்டு, பைக்/கார் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்பை ஷாட், கடிதங்கள், ரீடர்ஸ் ரிவ்யூ, யமஹா ஃபேக்டரி விசிட், ஹூண்டாய் ஃபேக்டரி விசிட் எல்லாவற்றிலும் மோட்டார் விகடனில் இடம் பிடிச்சேன்.

என் கரியர்-லயும் மோட்டார் விகடனுக்கு முக்கியமான இடம் உண்டு. எனக்கு கேம்பஸ் இன்டர்வியூ வந்துச்சு. அப்போ எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ்ல, இந்தப் பக்கங்களை ஸ்கேன் பண்ணிக் காண்பிச்சேன். நம்பமாட்டீங்க... 15 பேர்ல நான் மட்டும்தான் செலெக்ட் ஆனேன். கேம்பஸ் இன்டர்வியூ எடுத்த ஹெச்ஆர்... என் ஆட்டோமொபைல் அறிவைப் பார்த்துட்டு, ‘தம்பி, ஆக்டிவா வாங்கலாமா? ஜூபிட்டர் வாங்கலாமா’னு பெர்சனல் அட்வைஸ் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

கரியர்ல மட்டும் இல்லை; இல்லற வாழ்க்கையிலும் மோட்டார் விகடனுக்கு முக்கியப் பங்குண்டு. மோட்டார் விகடன்ல ஸ்பை ஷாட் எடுத்ததுக்காக வந்த பாராட்டுக் கடிதத்தை வெச்சு, அம்மா போட்டோ எடுத்தாங்க. அதைத்தான் பொண்ணு பார்க்கும்போது அனுப்பி ஓகே வாங்கினாங்க. நான் செம ஹேப்பி. தேங்க்ஸ் டு மோட்டார் விகடன்’’ என சிலிர்க்கிறார் அர்ஜுன்.

படம்:  குரூஸ்தனம்

வாசகர்களே... மோட்டார் விகடனுடனான உங்கள் பயணத்தை இந்தப் பக்கத்தில் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம்.  044-66802926 எண்ணுக்கு அழையுங்கள்.