Published:Updated:

அதானி கைக்குப் போகும் 5 விமான நிலையங்கள்! 

அதானி கைக்குப் போகும் 5 விமான நிலையங்கள்! 
அதானி கைக்குப் போகும் 5 விமான நிலையங்கள்! 

விமான நிலையங்களைப் பராமரிப்பதற்காக விடப்பட்ட ஏலத்தில் வென்ற அதானி குழுமத்தின் கைகளில் 5 விமான நிலையங்கள் செல்கின்றன. 

அதானி கைக்குப் போகும் 5 விமான நிலையங்கள்! 

அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கௌகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை மேம்படுத்திப் பராமரிப்பதற்கான பணிகளைத் தனியாரிடம் விட முடிவுசெய்த இந்திய விமான நிலைய ஆணையம், இதற்கான டெண்டரைக் கோரியிருந்தது. 

இதில், 32 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது ஏலத் தொகையைக் குறிப்பிட்டிருந்தன. இந்த நிலையில், கௌகாத்தி விமான நிலையம் தவிர்த்து, இதர விமான நிலையங்களுக்கான  டெண்டர்கள் திறக்கப்பட்டன. இதில், மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த கௌதம் அதானி தலைமையிலான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், 5 விமான நிலையங்களுக்கான ஏலத்தையும் வென்றுள்ளது.

அகமதாபாத் விமான நிலையத்துக்கான ஏலத்தில், பயணி ஒருவருக்கு மாதாந்திர கட்டணமாக 85 ரூபாய் தருவதாக ஜிஎம்ஆர் என்ற நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், பயணி ஒருவருக்கு 177 ரூபாய் தருவதாகக் குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனம், ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோன்று லக்னோ விமான நிலையத்துக்கு ஏஎம்பி கேப்பிட்டல் என்ற நிறுவனம் 139 ரூபாயைக் குறிப்பிட்டிருந்த நிலையில், 171 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த அதானி நிறுவனம், அந்த ஏலத்தைக் கைப்பற்றியுள்ளது. இதேபோன்றே இதர 3 விமான நிலையங்களுக்கான ஏலத்திலும் அந்த நிறுவனம் வென்றுள்ளது. கௌகாத்தி விமான நிலையத்துக்கான டெண்டர்  மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. 

அதானி கைக்குப் போகும் 5 விமான நிலையங்கள்! 

மும்பை விமான நிலைய பராமரிப்பு உரிமையை வாங்கியுள்ள ஜி.வி.கே நிறுவனத்திடமிருந்து அதன் பங்குகளை வாங்க இக்குழுமம் ஏற்கெனவே முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஏல வெற்றி மூலம், மேற்கூறிய 5  விமான நிலையங்களையும், அடுத்த 50 ஆண்டுகளுக்கான பராமரிக்கும் உரிமையைப் பெற்றுள்ளது.  இதன்மூலம், அதானி குழுமம் முதல் முறையாக விமானப் போக்குவரத்துறைக்குள் நுழைகிறது. 

கடந்த 2014 முதல் 2018-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தி, சோலார் மின் உற்பத்தி, மின் விநியோகம் மற்றும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய 4 புதிய துறைகளில் காலடி எடுத்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.