Published:Updated:

``'மிஸ் தமிழ்நாடு'க்காக 15 கிலோ குறைச்சேன். இப்போ?!'' - ரூபியா

தர்மபுரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபியா `மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்று `மிஸ் இந்தியா' போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்

``'மிஸ் தமிழ்நாடு'க்காக 15 கிலோ குறைச்சேன். இப்போ?!'' - ரூபியா
``'மிஸ் தமிழ்நாடு'க்காக 15 கிலோ குறைச்சேன். இப்போ?!'' - ரூபியா

2019-ம் ஆண்டு உலக அழகிப்போட்டிக்கான தமிழ்நாடு ஆடிஷன் பிப்ரவரி 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பாக டாப் த்ரீ பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் மிஸ் இந்தியா போட்டிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். அவர்களில் ஒருவராகத் தேர்வாகியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மிஸ் தமிழ்நாடு ரூபியா. இனி ஓவர் டு ரூபியா.

``எனக்குச் சொந்த ஊர் தர்மபுரி. படிச்சது ஆர்க்கிடெக் இன்ஜினீயரிங். படிப்பு முடிஞ்சதும் என்னோட கரியருக்காக குடும்பத்தோட பெங்களூரில் செட்டில் ஆனோம். அப்பா பிசினஸ், அம்மா டீச்சிங் லைன். எனக்குச் சின்ன வயசுல இருந்தே பேஷன் மேல ஆர்வம் அதிகம். என்னோட டிரஸ், மேக்கப், ஹேர்ஸ்டைல்னு. அழகு சார்ந்த விஷயங்கள்ல ரொம்ப சிரத்தை எடுத்துப்பேன். ஸ்கூல், காலேஜ் எல்லாம் தருமபுரியில்தான் படிச்சேன். அப்ப என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் `உனக்கு மாடலிங் பீல்டுல நல்ல ஸ்கோப் இருக்கு'னு சொல்வாங்க.

எனக்கும் மாடலிங் பிடிச்சிருந்தது. வீட்ல இதைப் பத்திப் பேசினேன். முதல்ல அப்பா நோ சொன்னாலும் என் ஆசைக்காக யெஸ் சொன்னாங்க. நான் மாடலிங் பண்ண ஆரம்பிக்கும் போதே, `மிஸ் வேர்ல்டு' பட்டம்தான் என்னோட கனவா இருந்தது. அதுக்கான பாதையா... பேஷன் ஷோ, பெரிய நிறுவனங்களுக்கான மாடல் ஷுட்னு என் வாழ்க்கை பிஸியா இருந்தது. ரெண்டு வருஷமா மாடலிங்ல இருந்தாலும் மிஸ் வேர்ல்டு போட்டிக்காக மிகக் கடுமையான உடற்பயிற்சி மூலமா 64 கிலோவுல இருந்த என் எடையை 49 கிலோவுக்குக் கொண்டு வந்தேன். அதுக்கு அப்புறம்தான் மிஸ் இந்தியா போட்டிக்கு அப்ளை பண்ணினேன். என்னுடைய தன்னம்பிக்கை, என் கன்னக்குழி, வசீகரிக்கும் கண் இதெல்லாம்தாம் நான் மிஸ் தமிழ்நாடா செலக்ட் ஆறதுக்குக் காரணம்னு நினைக்கிறேன்'' என்றார். ஆர்கிடெக்டான ரூபியாவுக்கு பேட்மின்டன் விளையாடுவதும் புத்தகம் படிப்பதும் மிகவும் பிடித்த ஒன்றாம். 

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பல்வேறு மாநிலப் பெண்களை மிஸ் இந்தியா போட்டிக்காக தேர்வு செய்யும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரூபியா, ஸ்ருதி, அஞ்சலி ஆகிய மூவரும் கலந்து கொண்டார்கள். 3 நாள்கள் நடைபெற்ற இந்தத் தேர்வில் ஆட்டிடியூட், கேள்விகளுக்கு விடையளிக்கும் முறை, உயரம், ஆடைத்தேர்வு, ஸ்டைலிங் போன்றவை தனித்தனியாக சோதிக்கப்பட்டது. இதன் மூலம் பியூட்டி ஸ்கின், பியூட்டி ஸ்மைல், பியூட்டி பாடி, கிளாமரஸ் எனப் பல சப் டைட்டில்களை பெற்றார்கள் மாடல்கள். 

இறுதியாக ரேம்ப் வாக், அதன் பிறகான கேள்விகள் செஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மிஸ் தமிழ்நாடு ரூபியா. 'மிஸ் இந்தியா' போட்டிக்கான தேதியை அறிவிக்க போறாங்க. அதுக்காக இப்பவே நான் மனதளவுல, உடல் அளவுல, எண்ணம் அளவுல ரெடி ஆகிட்டிருக்கேன். என்னோட டிரஸ்ஸிங், ஃபிட்னெஸ், ஸ்கின் மெயின்டெனன்ஸ் பயிற்சியை ஆரம்பிச்சுட்டேன். நிச்சயம் மிஸ் இந்தியா டைட்டிலை வின் பண்ணுவேன்'' என்று நம்பிக்கையுடன் பேசினார் மிஸ் தமிழ்நாடு ரூபியா.  

ஆல் தி பெஸ்ட் ரூபியா!