Published:Updated:

கடிதங்கள் - மரண மாஸ்!

Vikatan Correspondent
கடிதங்கள் - மரண மாஸ்!
கடிதங்கள் - மரண மாஸ்!
கடிதங்கள் - மரண மாஸ்!

ன் ஆறுவயதிலிருந்து இன்றுவரை நான் ஆனந்த விகடன் வாசகி. விலை, வடிவமைப்பு, உள்ளடக்கம் என்று பல மாறுதல்களுக்கு உட்பட்டாலும் ஆனந்த விகடன்மீதான என் அன்பு குறையவில்லை. தமிழ்நாட்டின் கலை, அரசியல் மாறுதல் களை ஆனந்த விகடனைக் கொண்டே அறியலாம். அலைபேசி உலகிலும், நம்பர் ஒன்னாக இருக்கும் நம் இதழின் நூற்றாண்டு விழாவைக் காணும் ஆவலில் இருக்கிறேன். எங்கள் ஆதரவு என்றும் ஆனந்த விகடனுக்கு உண்டு!

- ஆர்.ஷியாமளா, மந்தைவெளி.

சினிமா, அரசியல், தெருக்கூத்து, பொருளாதாரம், ஆன்மிகம், சோறு என்று நம்பர் ஒன் அறிவிப்பைத் தாங்கிவந்த ஆனந்த விகடன், அதற்கான நியாயத்தோடு கலந்துகட்டிய கட்டுரை / பேட்டிகளைக் கொண்டிருந்தது.

- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

இந்த வார அட்டைப்படத்துல விகடன் தாத்தா நிக்கற ஸ்டைலு... மரணமாஸ் தலைவா. 

- தி.மதிராஜா, சின்னபுங்கனேரி.

எந்தத் தொழிலிலும் சாதிக்க, செழிக்க அம்பானி, டாடா, பிர்லா குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று இல்லை, சாமானிய னாலும் சாதிக்க இயலும் என்று நிரூபித்த தொடர் கேம் சேஞ்சர்ஸ். இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய அத்தொடருக்கு நன்றிகள்!

- பா.கவின், சென்னை- 21

அன்றாடம் கடந்துபோகும் எளிய மனிதர்களின் மனதுக்குள் புகுந்து எழுதிகொண்டிருந்தார் பாக்கியம் சங்கர். நான்காம் சுவர் தொடருக்குப் பின் பலரையும் பார்க்கும் பார்வையிலேயே மாற்றத்தைக் கொண்டுவந்தது அத்தொடர்.

- என்.பாலகிருஷ்ணன், மதுரை

செல்வராகவன் பேட்டி ஒருரகம் என்றால் ஆச்சர்யமாக, வெங்கட்பிரபு பேட்டி வேறு ரகமாக இருந்தது. இரண்டு பேட்டிகளுமே சிறப்பு!

- ஆனந்திராஜா, மணப்பாறை.

சென்றவார எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சிற்றிதழ்’ கதையும் சரி, இந்த வாரம் வந்திருந்த எம்.ஜி.கன்னியப்பனின் ‘தனி இருக்கை’ கதையும் சரி ஒன்றுக்கொன்று அதனதன் தன்மைகளில் சிறந்து விளங்குகின்றன.

- ஆர். ரங்கநாயகி, சென்னை.

தோழர் சங்கரய்யா, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் குறித்த கட்டுரைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். பன்னெடுங்காலம் அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் அவர்களைக் குறித்து சரியான தருணத்தில் இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லி யிருக்கிறீர்கள்.

- ராபா, காஞ்சி.

குடிநீர் குறித்த தலையங்கம் ஆழமானதும் அனைவரும் பின்பற்றவேண்டியதுமாகும்.

- விஜயலட்சுமி சிவசங்கரன், வளசரவாக்கம்.