Published:Updated:

விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.ஐ.டி மாணவர்களின் தமிழ்க் கலாசாரத் திருவிழா!

விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.ஐ.டி மாணவர்களின் தமிழ்க் கலாசாரத் திருவிழா!
விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.ஐ.டி மாணவர்களின் தமிழ்க் கலாசாரத் திருவிழா!

அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி வளாகத்தின் தமிழ் மன்றம் சார்பில் ‘தமிழ்க் கலாசாரத் திருவிழா’ எனும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. அனைத்துக் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இன்டர் காலேஜ் கலை நிகழ்ச்சியாக மட்டுமே இல்லாமல் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சியாகவும் இதை நடத்தினார்கள். கிராமிய கலைகளை வளர்க்கும் பொருட்டு மாணவர்களை வைத்தே கரகாட்டம், கட்டைக்கால் நடனம், சிலம்பாட்டம் பறை இசைத்தல் போன்றவை நிகழ்த்தப்பட்டன.

விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.ஐ.டி மாணவர்களின் தமிழ்க் கலாசாரத் திருவிழா!

விவசாயத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக `இயற்கை வேளாண் பட்டறை’ நடைபெற்றது. நமண்டி பசுமை நலச்சங்கத்தைச் சேர்ந்த விவசாய ஆர்வலர்கள் (பகுதி நேர விவசாயிகள்) பங்குபெற்று இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும், இயற்கை வேளாண் நுட்பங்களையும், விவசாயத்தில் எளிதாக லாபம் பெறுவது குறித்தும் தங்கள் அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.ஐ.டி மாணவர்களின் தமிழ்க் கலாசாரத் திருவிழா!

அதைத்தொடர்ந்து அறிவியல் முன்னேற்றங்களால் விவசாயத்துக்கு நன்மையா, தீமையா என்கிற தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது. “மரபு விவசாய வழிமுறைகளை அறிவியலுக்குப் புறம்பானது என்று வகைப்படுத்துவது ஆபத்தானது. விதையை விதைத்தால் அது முளைத்தெழும் என்று தெரிந்துகொண்டதும் பயிருக்குத் தண்ணீர் வேண்டும் என்று கண்டறிந்ததும்கூட அறிவியல்தான். மொத்தத்தில் உணவு சேகரித்து வாழ்ந்த மனிதன் பயிரிடத் தொடங்கியதே அறிவியல்தான். பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் பேசுவது மட்டுமே அறிவியல் என்றோ அல்லது தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்படுபவை மட்டுமே தொழில்நுட்பக் கருவிகள் என்ற எண்ணமே மேட்டுக்குடித்தனமானது. வானம் பார்த்து காலத்துக்கேற்ற பயிர்களைத் தேர்வுசெய்து பயிரிடும் விவசாயிக்கு இருக்கும் மரபு அறிவும் அறிவியலே. அவன் நிலத்தைப் பண்படுத்த பயன்படுத்தும் ஏரும்கூட தொழில்நுட்பக் கருவியே’’ என நடுவராகப் பங்கேற்ற சமூக ஆர்வலர் ஜியோ டாமின் பேசியதற்கு கைத்தட்டல்கள் ஒலித்தன. 

விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.ஐ.டி மாணவர்களின் தமிழ்க் கலாசாரத் திருவிழா!

வளர்ச்சியும் வீழ்ச்சியும் அறிவியலைக் கைக்கொள்ளும் மனிதர்களின் நோக்கங்களிலேயே இருக்கிறது. ஆனால், நம் கசப்பான வரலாறு நவீன அறிவியலை அதிகம் சிதைத்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை” என அறிவியலும் இயற்கை விவசாயமும் ஒன்று என்பதையும் அவர் எடுத்துக் கூறினார்.

விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்த எம்.ஐ.டி மாணவர்களின் தமிழ்க் கலாசாரத் திருவிழா!

மேலும், இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கற்பனை வளத்தைத் தூண்ட சிறுகதை, கட்டுரைப் போட்டிகளும் நடைபெற்றன. மாணவர்களின் நல்ல படைப்புகளையும் சிந்தனைகளையும் வெளிக்கொண்டு வரவும், நம் பாரம்பர்யத்தை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திலும் செயல்படும் எம்.ஐ.டி மாணவர்களின் முயற்சி வரவேற்கப்பட வேண்டியவை என மற்ற கல்லூரி மாணவர்களும் வாழ்த்தினார்கள்.