இந்தியாவின் ஆளுமைகளான காந்தி, நேரு, அம்பேத்கர் மூவர் மட்டுமே, இங்கிலாந்தின் உயரிய அங்கீகாரமான `நீலப் பட்டயம்' (Blue plaque) பெற்ற இந்தியர்கள். இந்த வரிசையில் நான்காவதாகவும், பெண் என்கிற வகையில் முதலாவதாகவும் ஓர் இந்திய வம்சாவளி ஆளுமைக்கு நீலப் பட்டயம் வழங்கிக் கௌரவப்படுத்தியுள்ளது பிரிட்டன் அரசு... அவர் இறந்து 75 ஆண்டுகளுக்குப் பின்!

1942-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் பிடியிலிருந்த பிரான்ஸில் இங்கிலாந்து நாட்டுக்காக ஜெர்மனிக்கு எதிராக உளவுபார்த்து, நாஜி படையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்டனின் இந்திய வம்சாவளிப் பெண் உளவாளி நூர் இனயத் கான்தான், அவர்!

1914 ஜனவரி 1 அன்று இந்திய தந்தையும் மைசூர் பேரரசர் திப்பு சுல்தானின் உறவினருமான இனயத் கானுக்கும், அமெரிக்க தாய் ஒரா ரே பேக்கருக்கும் மாஸ்கோவில் பிறந்தவர் நூர். முதல் உலகப் போரின்போது, அவரது குடும்பம் ரஷ்யாவிலிருந்து பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தது. அங்கு இசையும் குழந்தைகள் மனவியலும் கற்று ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார் நூர். தந்தையின் மறைவுக்குப் பின், பிரான்ஸை ஜெர்மனி கைப்பற்றிய காலகட்டத்தில் நாஜிகளின் அடக்குமுறையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நூர் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது.

1940-ம் ஆண்டில் பிரிட்டன் விமானப் படையில் ரேடியோ ஆபரேட்டராகச் சேர்ந்த நூர், பின்னர் உதவி செக்ஷன் அலுவலராகப் பதவி உயர்வு பெற்றார். இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லருக்கு எதிராக கெரில்லாத் தாக்குதல் தொடுக்க அப்போதைய பிரதமர் வின்சென்ட் சர்ச்சிலால் அமைக்கப்பட்ட ஒரு சிறப்புப் படையின் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜெர்மனிக்கு எதிராக உளவு பார்க்க, நாஜிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரான்ஸுக்குள் ஊடுருவினார். இவர் அனுப்பிய உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஜெர்மனியின் பல தாக்குதல்களை முறியடித்தது பிரிட்டன்.

நூருடன் பிரான்ஸில் பணிபுரிந்த ஒரு பிரிட்டன் உளவாளி, ஜெர்மனியின் கைக்கூலியாக மாறி அவரைக் காட்டிக் கொடுத்ததால், நாஜி படை 1944-ம் ஆண்டில் நூர் உட்பட மூன்று பிரிட்டன் உளவாளிகளைக் கைது செய்தது. இருமுறை நாஜிகளிடமிருந்து தப்பிக்க முயன்று தோற்றதால், அபாயகரமான கைதி என முத்திரை குத்தப்பட்டு, பெரும்பாலும் கை கால்களில் விலங்கிடப்பட்டு, சித்ரவதைக் கூடத்தில் உள்ள தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். இரவு பகலாக துன்புறுத்தியும், நாஜி ராணுவத்தால் நூரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. கொடூர சித்ரவதைகளை அனுபவித்த போதிலும், தேநீர்க் கோப்பையின் அடிப்புறத்தில் சங்கேத மொழியில், தான் கைது செய்யப்பட்டதையும் தன் வீட்டின் முகவரியையும் எழுதி, சிறையில் இருந்த கைதி மூலம் தன் நாட்டுக்குத் தெரியப்படுத்திய திறமைசாலி நூர்!

சித்ரவதை முகாமில் 10 மாதங்கள் துன் புறுத்தப்பட்ட நூர், நாஜி ராணுவத்தால் அவரது முப்பதாவது வயதில் சுட்டுக்கொல்லப் பட்டார். சாகுமுன் அவர் கூறிய கடைசி வார்த்தைகள்... ‘லிபரேஷன் அண்டு ஃப்ரீடம்’.

நூரின் வீரதீர செயல்களைப் பாராட்டி இங்கிலாந்து அரசு அவருக்கு ஜார்ஜ் கிராஸ் பதக்கம் வழங்கி, அவர் பெயரில் தபால்தலை ஒன்றையும் வெளியிட்டு கௌரவித்தது. பிரான்ஸ் நாடும் அவருடைய தியாகத்தை மதித்து உயரிய பதக்கங்களை வழங்கியது. ஆனால், வாழ்ந்த இடத்தை அங்கீகரிக்கும் நீலப் பட்டயத்தை வழங்க பிரிட்டன் அரசு முன்வரவில்லை.

போராடாமல் எதுவும் கிடைக்காது என்பது நூர் விஷயத்திலும் உண்மையானது. நீலப் பட்டய அந்தஸ்து பெற, அவரது ஆதரவாளர்கள், நண்பர்கள் ஒரு சமூகப் போராட்டமே நடத்தவேண்டியிருந்தது. அவரின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல என்பது, அரசை நாடும்போதுதான் தெரிந்தது. பணிக்காலத்தில் அவர் அந்த வீட்டில் தங்கவில்லை எனக் கூறி, நினைவிட கோரிக்கையை நிராகரித்தது அரசு. அவர் இந்த வீட்டிலிருந்தபோதுதான் ராணுவப் பயிற்சியில் கலந்துகொண்டார். அங்கிருந்து போன பின்புதான் காணாமல் போனார். அந்த வீட்டில் அவரின் தாய் இருக்கும்போதுதான் அவரைச் சுட்டுக்கொன்ற தகவல் தாய்க்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், அரசு திருப்தி அடையவில்லை.

இதற்கிடையே, நூரின் ஆதரவாளர்கள் நூர் நினைவு அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நிறுவி, மக்களின் ஆதரவைத் திரட்டினர். அவர்கள் வழங்கிய ஒரு லட்சம் பவுண்டு நன்கொடையில் அவருக்கு மார்பளவு சிலை ஒன்றை மத்திய லண்டனில் நிறுவினர். ஓர் ஆசிய இஸ்லாம் பெண்ணுக்கு இங்கிலாந்தில் வைக்கப்பட்ட முதல் சிலை இது. அதை, இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மகள் இளவரசி ஆனி திறந்து வைத்தார். நூர் இல்லத்தைப் பாரம்பர்யச் சின்னமாக்கும் கோரிக்கையை ஒரு சமூக இயக்கமாக மாற்றினர் அவரின் ஆதரவாளர்கள். தொடர் போராட்டம் காரணமாக, சமீபத்தில் அது நிறைவேறியிருக்கிறது. அவரைப்பற்றிய அனைத்துத் தகவல்களும் அடங்கிய நீலப் பட்டயம், அவர் வாழ்ந்த வீட்டின் முன்புறம் நிறுவப்படவிருக்கிறது!

-கே.ராஜு