நூற்றுக்கணக்கிலான தங்க பிஸ்கட்டுகளை பெட்டி நிறைய அடுக்கி, அதை அங்கும் இங்கும் எறிந்து சண்டைபோடும் காட்சிகளைத் திரைப்படத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, பத்து தங்க பிஸ்கட்டுகளை பெரிய தாம்பாளத்தில் அடுக்கி, ஒரு டிராலியில் தள்ளிக்கொண்டு வந்த தொழிலாளரைப் பார்த்ததும் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்! இப்படி பல அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யங்களை நமக்கு அளித்த தனிஷ்க் தங்கத் தொழிற்சாலை சுற்றுலாவின் சில சுவாரஸ்யத் தகவல்கள்...

கடுமையான சோதனைகளுக்குப் பிறகு, ஓவர்கோட் மற்றும் பிரத்யேகக் காலணிகள் அணிந்து தொழிற்சாலைக்குள் நுழைந்தோம். ஜெர்மனி, சுவீடன், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, பெரும்பாலும் ஆட்டோமேஷனில் இயங்கிவரும் இந்தத் தொழிற்சாலையில், 800 நேரடித் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

தொழிற்சாலையினுள் பயணிக்கும் போது ஆங்காங்கே நீல நிறத்தில் `ஸ்டிக்கி மேட்' (Sticky Mat) ஒட்டப்பட்டிருந்தது. `அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?’ என்கிற மனக்குரல் கேள்வியாக வெளிவருவதற்குள், ``இங்கு நம் கண்களுக்குத் தெரியாத தங்கத்துகள்கள் நிறைய உள்ளன. நாங்கள் கொடுத்துள்ள இந்தக் காலணியில் சில தங்கத்துகள்கள் ஒட்டிக்கொள்ளும். நீங்கள் அணிந்திருக்கும் ஓவர்கோட், காலணி மற்றும் இந்த ஸ்டிக்கி மேட் மூன்றையும் சுத்திகரிப்பு செயல்முறைக்கு அனுப்புவோம். அதிலுள்ள தங்கத்துகள்களைப் பிரித்து தனியே எடுத்துக்கொள்வோம். நாங்கள் 99.9999% தூய்மையைப் பராமரித்துவருகிறோம். வருங்காலத்தில் 100 சதவிகிதம் அடைவதே எங்களின் இலக்கு” என்று கூறி வியப்புக் குள்ளாக்கினார், தொழிற்சாலையின் பொது மேலாளர் ராஜேந்திரன்.

தங்கத்தை சுத்திகரிக்கும் இயந்திரம், உருக்கும் இயந்திரம், நகைகள் செய்ய அடித்தளமாக இருக்கும் தங்கக்கம்பி மற்றும் சிறிய பந்துகளை உருவாக்கும் இயந்திரம் என அத்தனையும் ஹை-டெக் ரகம். தடையில்லா மின்சார வசதிக்காக, சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தையே பயன்படுத்துகின்றனர். இங்குள்ள 3-டி பிரின்ட்டிங் தொழில்நுட்பப் பிரிவு, மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டம். மிகவும் நுணுக்கமான டிசைன்களையும் துல்லியமாக வடிவமைக்க உதவும் சி.என்.சி இயந்திரங்கள், லேசர் கட் மெஷின் போன்றவை இதற்கு உதாரணம். தரமான நகைகளை உற்பத்தி செய்வதற்கென்று, தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைத்த முதல் தொழிற்சாலையும் இதுதான்.

`மெடோ ரூரல் என்டர்பிரைஸ் லிமிடெட்' (Meadow Rural Enterprise Limited) எனும் துணை ஒப்பந்த அடிப்படையில் கிராமப்புறப் பெண்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பையும் வழங்கிவருகிறது தனிஷ்க். உலகின் மிகப்பெரிய தங்க வளையலைத் தயார்செய்து கின்னஸ் சாதனை புரிந்ததோடு, தங்கத்தால் ஆன `நானோ’ கார் போன்ற பல்வேறுவிதமான சாதனைகளையும் படைத்துக்கொண்டே இருக்கிறது இந்தத் தொழிற்சாலை.

தங்கக்காசு முதல் ட்ரெண்டி நெக்லஸ் வரை அவற்றுக்கேற்ற தரத்தை நிர்ணயிப்பது என்பது மிகவும் சவாலானது. அந்த வகை யில் நகைகளுக்காக சோதனை மற்றும் ஹால்மார்க் முத்திரை பதிப்பதை முதன்முதலில் ஆரம்பித்த லண்டனைச் சேர்ந்த `Assay’ ஆய்வுக்கூடத்தை இங்கு அமைத்திருக்கிறார்கள். நகைகளுக்கு `இழுவிசை’ இயந்திரம் பயன்படுத்தும் ஒரே நிறுவனமும் தனிஷ்க்தான். தங்கம், வைரம் என அத்தனை புதிய படைப்புகளும் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே `டெஸ்பாட்ச்’ அறைக்கு வந்தடைகின்றன.

நாம் செல்லும் வழியில், இரண்டு வித்தியாச மான இயந்திரங்கள் விறுவிறுவென எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தன. ஆ... ரோபோ! இந்தியாவிலேயே தங்க நகைகள் தயாரிப்புப் பிரிவில் ரோபோட்டுகளைப் பயன்படுத்தும் முதல் நிறுவனம் டைட்டன்தான். `உதிரிப் பாகங்களை நேர்த்திப்படுத்த ரோபோட்டுகளா!’ என்கிற வியப்போடு அவர்கள் கொடுத்த ஓவர்கோட் மற்றும் காலணிகளை திருப்பிக் கொடுத்துவிட்டு, மதிய உணவை முடித்துக்கொண்டு, நகை வடிவமைக்கும் தொழிலாளர்களைச் சந்திக்கத் தயாரானோம்.

`காரிகர்’ அல்லது `ஆசாரி'களே நகை வியாபாரத்தின் திடமான முதுகெலும்பு. அவர்களின் நுணுக்கமான வேலைப்பாடுகளில்தான் நகைகளின் `அழகு’ நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், `காரிகர் பூங்கா' அமைத்து, ஏராளமான ஆசாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவருகிறது தனிஷ்க். நாள் முழுக்க நெருப்பில் வெந்து, விதவிதமான நகைகளை உருவாக்கிக்கொடுத்த தரமான பல காரிகர்களை கொல்கத்தா மற்றும் பல பகுதிகளிலிருந்து வரவழைத்து, இருப்பிடமும் இன்னபிற வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறது. கலப்பட நகைகளுக்கு மத்தியில் தரமான நகைகளை வாங்க உதவும் `காரட் மீட்டர் எனும் அறிவியல் சாதனத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் தனிஷ்க்தான்.

இப்படிப் பல புதிய அறிமுகங்களும், தொழிலாளர்களின் நலனை மனதில்கொண்டு செயல்படுத்தப்படுகிற திட்டங்களுமே இந்த நிறுவனத்தைத் தனிமைப்படுத்திக் காட்டுகின்றன. அங்கு பணியிலிருந்த சில காரிகர்களோடு உரையாடிவிட்டு, பொன்னகைக்கூடத்தைவிட்டு புன்னகை யோடு புறப்பட்டோம்!

-கானப்ரியா