Published:Updated:

மாதத்தின் கடைசி நாளில் சிக்கிய அரியலூர் வட்ட வழங்கல் அதிகாரி - லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி

மாதத்தின் கடைசி நாளில் சிக்கிய அரியலூர் வட்ட வழங்கல் அதிகாரி - லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி
மாதத்தின் கடைசி நாளில் சிக்கிய அரியலூர் வட்ட வழங்கல் அதிகாரி - லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி

வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத 42,000 ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இதில் தினந்தோறும் பொதுமக்கள் ரேசன் கார்டுக்காக மனுக்கள் அளித்து வருவது வழக்கம். இங்கு வேலை நடக்கவேண்டும் என்றால் பணம்தான் கொடுக்கவேண்டுமா.  பணம் கொடுக்கவில்லை என்றால் வேலை நடக்காதா என்று ஒரு பெரியவர் வாசலில் நின்று கத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை 4 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் வட்ட வழங்கல் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் கவர்கள் அதிகளவில் இருந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்த போது அதில் பணம் இருப்பது தெரியவந்து. அதனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர்.

கணக்கில் வராத ரூ.42,000 பணத்தைப் பறிமுதல் செய்ததோடு, இப்பணம் எப்படி வந்தது என்று கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தனர். மேலும் இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலகத்தில் நுழையும் போது அலுவலகத்தில் இருந்த ரேசன் கடை ஊழியர்களிடமும் விசாரணை செய்தனர்

மாதத்தின் கடைசி நாளான நேற்று ரேசன் கடை பணியாளர்களுக்குக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அப்போது ரேசன் கடை ஊழியர்கள் பணத்தை கவரில் வைத்து வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்கிய பணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.