Published:Updated:

கோடைக்காலம் - தண்ணீரை தேக்கிவைத்து பாசனங்களுக்கு அனுப்ப மதுரை விவசாயிகள் முடிவு!

கோடைக்காலம் -  தண்ணீரை தேக்கிவைத்து பாசனங்களுக்கு அனுப்ப மதுரை விவசாயிகள் முடிவு!
கோடைக்காலம் - தண்ணீரை தேக்கிவைத்து பாசனங்களுக்கு அனுப்ப மதுரை விவசாயிகள் முடிவு!

கோடைக்காலத்தில் குறைந்த அளவு நீர் மட்டுமே உள்ளதால் தண்ணீரை தேக்கிவைத்து பாசனங்களுக்கு அனுப்ப விவசாயிகள் முடிவு.

கோடைக்காலம் -  தண்ணீரை தேக்கிவைத்து பாசனங்களுக்கு அனுப்ப மதுரை விவசாயிகள் முடிவு!

மதுரையின் கடைசி நெற்களஞ்சியங்களான வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதியில் இரண்டாவது சாகுபடி நடைபெற்றுவருகிறது. 120 நாள் வழங்கவேண்டிய தண்ணீரை 50 நாள்களுக்கும் குறைவாக மட்டுமே அளித்தாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதற்கு பிறகு 2,3 முறை தண்ணீர் அளிக்கப்பட்டது. ஆனாலும் நெற்பயிர்கள் விளையும் தருவாயில் உள்ளதால் தற்போது சற்று அதிகமான தண்ணீர் தேவைப்படுகிறது என்று மீண்டும் புகார் அளித்தனர்.

இந்நிலையில் டி.ஆர்.ஓ தலையிட்டு தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் வழங்குகிறோம். ஆனால், அதனை வீணடிக்காமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றனர். இந்நிலையில் பேரணை முதல் கள்ளந்தரி பகுதிகளுக்கு இடையான விவசாயிகள் பயிர்களுக்கு நீரை கொண்டுசெல்ல கால்வாய்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சற்று நீரை தேக்க முறையில் விவசாய நிலங்களுக்கு அனுப்ப முடிவு செய்து தங்கள் சொந்தச் செலவில் வேலைகளை முடித்துள்ளனர். இது குறித்து ஜெயரட்சகன் கூறுகையில், ``மிகவும் கஷ்டப்பட்டு தண்ணீரைப் பெற்றுள்ளோம். நாளை தண்ணீர் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். விவசாயச் செலவுகள் போக தற்போது தண்ணீரை கொண்டுவர மணல் மூட்டை அடுக்கி வேலைப்பாடுகளை முடித்துள்ளோம். முறையாக தண்ணீர் கிடைத்தால் விவசாயிகள் பாதிக்க மாட்டார்கள் இல்லை என்றால் முழுமையாகப் பயிர் கருகிவிடும் என்று வேதனை” தெரிவித்தார்.