“ரப்பர் மரங்களின் இலைகள் உதிர்ந்துபோகாமல் தடுக்க சல்ஃபர் பொடி (கந்தகம்) தூவுகிறார்கள். இதனால், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, சிற்றாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளின் தண்ணீர் மாசுபடுகிறது. பல்வேறு நோய்களால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள்.”

-இத்தகைய கூக்குரல், கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கிராமங்களில் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ரப்பர் உற்பத்தியில் தற்போதைக்கு முன்னணியில் இருப்பது கன்னியாகுமரி மாவட்டம்தான். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் கேரள மாநிலத்தில்தான் ரப்பர் அதிகமாகப் பயிர் செய்யப்பட்டுவந்தது. ஒரு கட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவிய ரப்பர் விவசாயம், தற்போது முதலிடத்தைப் பிடித்துவிட்டது.

மலை மீதும், மலை அடிவாரத்திலும்தான் ரப்பர் மரங்கள் பயிர் செய்யப்படுகின்றன. நல்ல லாபம் கிடைப்பதால், இதை ‘பணப்பயிர்’ என்றே அழைக்கிறார்கள். லாபம் கொழிக்கும் பயிர் என்பதால், மாவட்டத்தின் மலைப்பகுதியையொட்டிய வயல்வெளிகள், தென்னந்தோப்புகள் எல்லாம் பெருவாரியாக அழிக்கப்பட்டு, ரப்பர் தோட்டங்களாக மாற்றப்பட்டன. மலைப்பகுதியில் அரசாங்கமே தனக்குச் சொந்தமான சுமார் 11,000 ஏக்கர் நிலத்தில் ரப்பர் விவசாயத்தை நடத்திவருகிறது. தடிக்காரங்கோணம் தொடங்கி, நெட்டா என்கிற கிராமம் வரை ரப்பர் தோட்டங்கள்தான். கோதையாறு, மருதம்பாறை, சிற்றார், மைலார், மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, பரளியாறு என எட்டு மண்டலங்களாக அரசாங்கத்தின் ரப்பர் தோட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கீரிப்பாறை, மைலார் ஆகிய இடங்களில் அரசு ரப்பர் கழகத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்களையும் சேர்த்தால் இங்கே சுமார் ஐம்பதாயிரம் ஹெக்டேரில் ரப்பர் பயிர் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ரப்பர் மர இலைகளில் பூஞ்சணத் தொற்று காரணமாக ஏற்படும் இலைப்புள்ளி நோயைத் தடுப்பதற்காக சல்ஃபர் பவுடர் தூவப்படுவதுதான் பெரும்பிரச்னையாக வடிவெடுத்து நிற்கிறது. சுமார் 10 ஆண்டுகளாகத்தான் சல்ஃபர் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இந்த பவுடர் நீர்நிலைகளில் கலப்பதால், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் தங்களைத் தாக்குவதாக மக்கள் புலம்புகின்றனர். இதுதொடர்பான போராட்டங்களை முன்னெடுப்பவர்களில் ஒருவரான கடையால் பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ், “மெஷின் மூலம்தான் இந்தப் பவுடரை தெளிப்பார்கள். மருந்து அடிக்கும்போது புகைமண்டலம் போன்று காட்சியளிக்கும். மரங்களிலும், நீர்நிலைகளிலும், காற்றிலும் சல்ஃபர் கலந்துவிடுகிறது. சல்ஃபர் அடிக்கும்போது கடுமையான நாற்றம் வெளியாகும். இதனால் பலருக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. முன்பு ஹெலிகாப்டரிலிருந்து இந்த சல்ஃபரைத் தெளித்தார்கள். நாங்கள் போராட்டம் நடத்தியதால் கீழிருந்தே மெஷின் வைத்துத் தெளிக்கிறார்கள்.

கலவரக்காரர்களைக் கலைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கண்ணீர்புகைத் தயாரிக்க இந்த சல்ஃபர் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இதைத் தெளிக்கும்போது மக்களுக்குக் கண் எரிச்சல் ஏற்படுகிறது. அதனால், பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் போன்ற இயற்கையான பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்த ரப்பர் வாரியம் அறிவுறுத்த வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சல்ஃபர் பவுடர் அடிப்பதை முற்றிலும் நிறுத்தும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று ஆவேசமாகச் சொன்னார்.

ரப்பர் விவசாயிகளின் தரப்பாக நம்மிடம் பேசிய விவசாயி ஜி.கே.நம்பூதிரி, “இலையுதிர் காலம் நிறைவடைந்த பிறகு டிசம்பர், ஜனவரி மாதங்களில் ரப்பர் மரங்களில் புதிய இலை வரும். அந்தச் சமயத்தில் பனிக்காலம் என்பதால் இலைப்புள்ளி நோய்கள் பரவும். தடுக்கவில்லை என்றால், ரப்பர் பால் உற்பத்தி 25 சதவிகித அளவுக்கும் மேல் குறைந்துவிடும். இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டமில்லாத சமயங்களிலும்தான் சல்ஃபர் தெளிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் சுமார் 50 கிலோ தெளிக்கிறார்கள். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை இப்படித் தெளிக்கப்படும் சல்ஃபரின் தன்மை, சுமார் ஐந்து மணி நேரத்துக்குள்ளாகவே குறைந்துவிடும்.

ஏற்கெனவே ரப்பர் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளோம். சல்ஃபர் அடித்தால்தான் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 1,800 கிலோ ரப்பராவது கிடைக்கும். இல்லையென்றால் ரப்பர் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். வாழை, காய்கறி தோட்டங்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளைக் கணக்கிடும்போது சல்ஃபர் 0.001 சதவிகிதம்கூட மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை” என்றார்.

இதுகுறித்து ரப்பர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “ரப்பர் மரத்துக்கு சல்ஃபர் அடிக்கும்போது கிணறு உள்ளிட்டவற்றை மூடி வைக்கவேண்டும். ரப்பர் தோட்டங்களை ஒட்டிய கிணறுகளை எப்போதும் வலையால் மூடி வைத்திருப்பது நல்லது. அதிகாலை நேரத்தில் ரப்பர் இலைகளில் பனித்துளிகள் ஒட்டியிருக்கும்போதுதான் சல்ஃபர் அடிக்க வேண்டும். அப்போதுதான் இலைகளில் சல்ஃபர் பொடி ஒட்டிக்கொள்ளும்; அதிகமாகவும் வீணாகாது. வேப்பெண்ணெய் பூச்சிகளை ஒழிக்கத்தான் பயன்படும். இலைச்சுருட்டு நோயை ஒழிக்கப் பயன்படாது” என்று எடுத்துரைத்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மதுசூதனனிடம் பேசினோம். “சல்ஃபர் இயற்கைக்கு மாறான பொருள்தான். ஆனால், ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நாங்கள் ஆய்வுசெய்து சல்ஃபர் கலந்துள்ள அளவைக் கண்டறிந்த பிறகுதான் இதுகுறித்து விரிவாகப் பேச முடியும்” என்றார் சுருக்கமாக.

உலகமே இயற்கை விவசாயத்துக்கு மாறிவரும் காலகட்டம் இது. இத்தகைய சூழலில், ரப்பர் மரங்களுக்கும் இயற்கைப் பூச்சிவிரட்டிகள் பயன்பாட்டைக் கொண்டு வரவேண்டும். அது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்!

- ஆர்.சிந்து
படங்கள்: ரா.ராம்குமார்

காசர்கோடு ஆகிறதா கன்னியாகுமரி?

ரப்பர் தோட்டங்களில் சல்ஃபர் பயன்பாடு பற்றி, ரப்பர் போர்டு உதவி வளர்ச்சி அதிகாரி முரளியிடம் பேசினோம். ‘‘டிசம்பர் - ஜனவரி மாதங்களில், ரப்பர் மரங்களின் இலைகளில் பனி படர்ந்திருக்கும். அந்த நேரங்களில், இலைகளில் ஒருவகையான பூஞ்சணம் தாக்கும். YDM என்ற அந்தப் பூஞ்சண தாக்குதல் காரணமாக இலைகளில் புள்ளிகள் தோன்றி இலை சுருளும். இதனை இலைப் புள்ளி நோய் என்கிறோம். சுருண்ட இலைகள் காய்ந்து கீழே உதிரும். இலைகள் இல்லாமல் மரங்களில் பால் இருக்காது. எனவே, பூஞ்சணத்தைத் தடுக்கும் நோக்கில், சல்ஃபர் தெளிக்கிறார்கள். இதை அதிகாலை வேளைகளில் தெளித்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. கேரளா காசர்கோட்டில் எண்டோசல்பான் தெளித்தனால் ஏற்பட்ட பாதிப்பு போல நடக்காது. இதைத் தெளிப்பவர்கள் முகமூடி உள்பட தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

கேரளத்தின் காசர்கோடு இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. அங்கு மாநில அரசுக்கு சொந்தமான முந்திரி காடுகள் இருந்தன. அந்தக் காடுகளில், பூச்சிக்கொல்லியான எண்டோசல்பான் மருந்தை ஹெலிகாப்டர் மூலமாகத்தான் தெளித்தார்கள். அதன் பிறகு இன்றுவரை அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவும் பல்வேறு நோய்களுடனும் பிறக்கின்றன. இதே நிலை சல்ஃபர் தெளிப்பாலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

- ஆர்.குமரேசன்