Published:Updated:

`பெரிய ஸ்கோர்’ டாஸ் வென்ற பின்ச் நம்பிக்கை - `நாங்க சேஸிங்கில் கில்லி’ கோலி பதிலடி

`பெரிய ஸ்கோர்’ டாஸ் வென்ற பின்ச் நம்பிக்கை - `நாங்க சேஸிங்கில் கில்லி’ கோலி பதிலடி
`பெரிய ஸ்கோர்’ டாஸ் வென்ற பின்ச் நம்பிக்கை - `நாங்க சேஸிங்கில் கில்லி’ கோலி பதிலடி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிகெட் அணி டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் காரணமாகப் பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியாமல் போனது. பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தும் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் அரைசதம் அடித்த மேக்ஸ்வெக் ஆஸ்திரேலியா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இரண்டாவது போட்டில் கே.எல்.ராகுல், விராட் கோலி. தோனி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 190 ரன்கள் குவித்தது. ஆனால், இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் அதிரடி சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேயா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய கேப்டன் ஆரோன் பின்ச், இந்தப் போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிப்போம் எனத் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த கோலி,  நாங்கள் பந்துவீச உள்ளோம். ஒரு நாள் போட்டிகளில் பல வெற்றிகரமான சேஸிங் செய்துள்ளோம். 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறோம். இந்தப் போட்டியில் ஜடேஜாவை உள்ளே கொண்டு வந்துள்ளோம் என்றார்.
 

 டி-20 தொடரை இழந்த இந்திய அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததற்குப் பழிவாங்கும் நோக்கில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தவித்து வந்த அந்த அணிக்கு மேக்ஸ்வெல் ஃபார்முக்கு திரும்பி இருப்பது சற்று ஆறுதலான விஷயம்


இந்தத்தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஷித் சர்மா பல்வேறு சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ரோஹித் ஷர்மா நல்ல ரன்ரேட் வைத்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சச்சின் 9 சதங்களை (71 போட்டிகளில்) அடித்து முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 7 சதத்துடன் ( 31 போட்டிகளில்) இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி, ரிக்கி பாண்டிங் 6 சதங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்தத் தொடரில் 3 சதங்களை விளாசினால் சச்சின் சாதனையை ரோஹித் முறியடிப்பார்.

அதேபோல் ரோஹித் மற்றும் கோலி இருவரும் சச்சின் சாதனையை முறியடிக்க இன்னொரு வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் சச்சின் 4 சதங்களை பதிவு செய்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கோலி, ரோஹித், பாண்டிங் 3 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். பாண்டிங் சர்வதேச போட்டியிலிருந்து ரிட்டயர் ஆகிவிட்டதால் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு உள்ளது.