Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!

Published:Updated:
அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பு வணக்கம்!
அன்பு வணக்கம்!

நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை இழந்திருக்கிறது. சென்னை அணி இந்தமுறை நிச்சயம் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றதுபோல் லீக் போட்டிகளில் பல வெற்றிகளைப் பதிவுசெய்து முன்னணியில் இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் இரண்டு லீக் பொட்டிகள், குவாலிஃபையர், இறுதிப்போட்டி எனத் தொடர்ந்து நான்கு போட்டிகளிலும் மும்பையிடம் தோல்வியடைந்த அணியாக கோப்பையை இழந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2019 சீசனின் தோல்வி பல கேள்விகளை எழுப்புகிறது. வரும் 2019, ஜூலையோடு 38 வயதை நிறைவு செய்கிறார் சென்னையின் கேப்டன் தோனி. ஜூன்/ஜூலையில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியோடு சர்வதேசப்போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வுபெற்றபிறகு இன்னும் ஒன்று அல்லது 2 ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். தோனி அணியில் இல்லை என்பது சென்னைக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். தோனிக்கு பதில் அணிக்குத் தலைமையேற்று நடத்தக்கூடிய திறமையான தலைவனை கண்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சென்னை. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த வீரர்களையுமே மாற்றிஅமைக்க வேண்டும்.

அன்பு வணக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



‘ஓய்வூதியம் பெறும் வீரர்களின் அணி’ என்கிற கிண்டல்தான் சென்னை அணியைப் பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் ஒலிக்கும் கிண்டல். அது ஓரளவுக்கு உண்மைதான். இந்த ஐபிஎல்-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை வீரர் இம்ரான் தாஹீரின் வயது 40. அதேப்போல் வாட்ஸன், ஹர்பஜன், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா என முக்கிய வீரர்கள் எல்லோருமே 30 வயதைக் கடந்தவர்கள்.

2019 ஐபிஎல் சீசனில் வீரர்கள் எவ்வளவு சொதப்பினாலும் அவர்களுக்கு சரியான மாற்று வீரர்களை தோனியால் தேர்வு செய்யமுடியவில்லை என்பதே தோல்விக்கு மிகப்பெரிய காரணம். வாட்ஸன், பிராவோ, ஜடேஜா, ரெய்னா என மோசமான பர்ஃபாமெர்கள் எல்லோருமே  தொடர்ந்து போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் அணியில் இல்லை.

இப்போதே புதிய அதிரடி பேட்ஸ்மேன்கள், திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள், இளம் ஸ்பின்னர்கள், வேகமான ஃபீல்டர்கள் கொண்ட அணியை கட்டமைக்கவேண்டிய சூழலில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்த சீசனில் இந்தத் தவறுகள் எல்லாம் களையப்பட்டால் மட்டுமே மும்பைக்கு ஈடுகொடுத்து நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ். இல்லையென்றால் பழம் பெருமை பேசும் அணியாக சென்னை மாறுவதற்கான எல்லா சூழல்களும் கண்முன் தெரிகின்றன!