Published:Updated:

`கைகொடுத்த பும்ரா, ஷமி!'- இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு

`கைகொடுத்த பும்ரா, ஷமி!'- இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு
`கைகொடுத்த பும்ரா, ஷமி!'- இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி உஸ்மான் கவாஜா - ஆரோன் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கினர். இது ஆரோன் ஃபின்ச் களமிறங்கும் 100-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியாகும். 


இந்தப்போட்டியில் ஷமி முதல் ஓவரை மெய்டன் செய்தார். இரண்டாவது ஓவரை வீசிய பும்ரா ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை காலி செய்தார். 100-வது போட்டியில் பேட்டிங்கில் சோபிக்கத் தவறினார் பின்ச். தொடர்ந்து அசத்தலாக பந்துவீசிய பும்ரா, ஷமி இணை கடுமையான நெருக்கடி கொடுத்தனர். ரன்கணக்கை தொடங்குவதற்கு முன்பாக விக்கெட்டைப் பறிகொடுத்ததால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் நிதானம் காட்டினர். உஸ்மான் கவாஜா - ஸ்டோனிஸ் ஜோடி அணியைச் சரிவில் இருந்து மீட்டனர்.

இந்த ஜோடியை கேதர் ஜாதவ் பிரித்தார். ஸ்டோனிஸ் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த கவாஜா அரைசதம் கடந்தார். இவர் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார். இதன்பின்னர் இந்தியப் பந்துவீச்சாளர்களின் கை ஓங்கியது. சிறிது நேரம் களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 40 ரன்களில் அவுட்டானார். 


ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பு 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கவாஜா 50 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் கேதர் ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 237 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.